Tamil Nadu Budget 2026 News in Tamil LIVE: தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 Live Breaking News, highlights
சட்டமன்ற வரலாற்றில் முதல்முறை.. சபாநாயகர் நாற்காலியில் சத்யபாமா.. அவையில் எழுந்த பலத்த கைதட்டல்… பின்னணி என்ன!
தமிழக சட்டப்பேரவையில் துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது. இதில், சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் இல்லாத நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்எல்ஏவான சத்தியபாமா பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை நடத்தினார். தமிழக சட்டமன்றத்தில், சபாநாயகர் இல்லாத பட்சத்தில், துணை சபாநாயகர் அவை நடத்துவார். இவரும் இல்லாத நிலையில், சட்டமன்ற மாற்று பேரவை தலைவராக அறிவிக்கப்பட்டவர்களின் யாரேனும் ஒருவர் அவரையே தொடர்ந்து வழிநடத்துவார். அதன் அடிப்படையிலேயே, பெண் எம்எல்ஏ சத்தியபாமா இன்று பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்து அவையை சிறப்பாக நடத்தி இருந்தார். இதனால், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த முதல் பெண் எம்எல்ஏ என்ற பெருமையை பெற்றுள்ளார்.
சட்டமன்ற மாற்று பேரவை தலைவர்கள் விவரம்
தமிழக சட்டப்பேரவையில் எந்தவித தடையும் இன்றி அவையை நடத்துவதற்காக மாற்று தலைவர்கள் குழு அமைக்கப்படுவது வழக்கமாகும். அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையின் மாற்று பேரவை தலைவர்கள் அடங்கிய பட்டியலை சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகர் ஏற்கனவே வெளியிட்டு இருந்தார். அதில்,
மேலும் படிக்க: தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?
திருப்பூர் வடக்கு தொகுதி பெண் எம்எல்ஏ சத்தியபாமா.
தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த விஜய் சரவணன்.
மதார் பதுருதீன்.
அதிமுக சார்பில் தளவாய் சுந்தரம்.
காங்கிரஸ் சார்பில் தாரகை கத்பட்.
திமுக சார்பில் காதர் பாட்சா முத்துராமலிங்கம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
துணை பேரவை தலைவர் என குறிப்பிட்ட அமைச்சர்
இன்று சத்தியபாமா தலைமையில் நடைபெற்ற அவையில் மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் எழுந்து பேசுகையில், தவறுதலாக துணை பேரவை தலைவர் எனக் குறிப்பிட்டார். அப்போது, சத்தியபாமா எம். எல். ஏ., தன்னை மாற்று பேரவை தலைவர் என குறிப்பிடுமாறு ஒலிவாங்கியில் தெரிவித்தார். இதைக் கேட்ட அமைச்சர் ஸ்ரீநாத் மாற்று பேரவை தலைவர் என சரி செய்து பேசத் தொடங்கினார். இவரைத் தொடர்ந்து, முன்னாள் திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து மிகவும் பொறுமையாகவும், கம்பீரமாகவும் சத்யபாமா எம். எல். ஏ. அவையை நடத்தி உள்ளார்.
சத்யபாமாவுக்கு பாராட்டு தெரிவித்த முன்னாள் அமைச்சர்
லேடி வெல்லிங்டன் இந்த சட்டப்பேரவைக்கு வழங்கிய ஆசனத்தில் ஒரு பெண்மணி பேரவை தலைவராக அமர வேண்டும் என்பது நீண்ட காலமாக இருந்து வந்த எதிர்பார்ப்பாகும். அந்த எதிர்பார்ப்பு, மாற்றுத் தலைவராக நீங்கள் இங்கு இருக்கையில் அமர்ந்திருப்பதால் நிறைவேறி உள்ளது. இதனால், நாங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைகிறோம். இதற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்தார். இதேபோல, பல்வேறு கட்சி உறுப்பினர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
சென்னை டூ கன்னியாகுமரி வரை… முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த முத்தான திட்டங்கள்.. என்னென்ன தெரியுமா!
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதம் இன்று புதன்கிழமை ( செப்டம்பர் 2) தொடங்கி நடைபெற்றது. இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், வடசென்னை, ஆவடி, மீஞ்சூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.4,800 கோடியில் கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டம் அமைக்கப்படும். மதுரை கடலூர் மாநகராட்சிகள் 9 நகராட்சிகள் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகள் மேம்படுத்த ரூபாய் ஆயிரம் கோடியில் 33 பழமையான கூட்டு குடிநீர் திட்டங்கள் சீரமைக்கப்படும். இதற்காக முதல் கட்டமாக ரூபாய் 300 கோடி ஒதுக்கப்படும். சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூபாய் 410 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
மேலும் படிக்க: புதுக்கோட்டையில் பேரதிர்ச்சி.. அரசுப் பேருந்தில் ஏற்ற மறுத்து தள்ளிவிடப்பட்ட மாணவிகள்!
நவீன பாதாள சாக்கடை திட்டம் மற்றும் நீர் மேலாண்மை: மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான கலைநீர் பாதாள சாக்கடைகள் ரூ.2,500 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம் குடிநீர் மற்றும் கழிவு நீர் அமைப்புகளை ஏற்படுத்த ரூ. 236 கோடி செலவிடப்படும்.
அறிவியல் பூர்வமான திடக்கழிவு மேலாண்மை உரக்கழிவு உற்பத்தி: 9 மெகாவாட் திறன் உற்பத்தி செய்யும் வகையிலும் சேலம் நகராட்சியில் ரூ.298 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் உற்பத்தி செய்யும் வகையிலும் இந்த திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேம்படுத்தப்பட்ட நகர்ப்புற சாலைகள் மற்றும் கூட்டமைப்பு கட்டமைப்பு: குடிநீர் குழாய்கள் அமைப்பதற்காக தோண்டப்பட்ட சாலைகள் அனைத்து பகுதிகளிலும் ரூ.1,850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னை மட்டுமின்றி பிற மாநகராட்சிகளிலும் நவீன சாலைகள் மற்றும் நடைபாதைகள், நவீன பாதுகாப்பான சாலைகள் ரூ. 165 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த நகர்புற மேம்பாட்டு கழகத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும்.
நகர்ப்புற பசுமையாக்கள் மற்றும் பொழுதுபோக்கு பூங்காக்கள்: பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும். இதற்காக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும். திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ. 130 கோடியில் பூங்காக்கள் அமைக்கப்படும்.
பள்ளிகளில் உள் கட்டமைப்பு மேம்பாடு: நகர்புற உள்ளாட்சி பள்ளிகளில் புதிய வகுப்பறைகள் கட்டுதல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 359 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
பாரம்பரிய நகரங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகள் சீரமைப்பு: சிதம்பரம் தில்லை நடராஜர் திருத்தேர் விழா நடத்தவும், பக்தர்கள் எவ்வித இடையூறும் இன்றி தரிசனம் செய்யவும், கோவிலை சுற்றியுள்ள பாதாள சாக்கடை உள்ளிட்டவற்றை தரைக்கு அடியில் கொண்டு செல்ல ரூ.30 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
தொழிலாளர்கள்- நெசவாளர்களுக்கு குட் நியூஸ்.. அமைச்சர்கள் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்.. என்ன தெரியுமா?
தமிழக சட்டப்பேரவையில் கதர் மற்றும் கிராம தொழில்கள் துறை உள்ளிட்ட துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், துறை அமைச்சர் விஜய் பாலாஜி புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில்,
மேலும் படிக்க: தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்.. கோவையில் கணக்கெடுப்பில் இறங்கிய அதிகாரிகள்.. விரைவில் தங்க மழை!
திருவண்ணாமலை மாவட்டத்தில் ஜமுனா மரத்தூரில் ஜவ்வாது மலை தேன் அலகு ரூ. 25 லட்சம் மதிப்பில் மத்திய ஆணைய குழுவுடன் அமைக்கப்படும்.
திருச்சி, சேலம், தஞ்சாவூரில் ரூ. 1 கோடியில் கதர் அங்காடிகள் புதுப்பிக்கப்படும்.
திருநெல்வேலி மாவட்ட பனை பொருட்கள் விற்பனை கூட்டுறவு சம்மேளனத்தின் தூத்துக்குடி தலைமை அலுவலக கட்டடம் மற்றும் வள்ளியூர் பனைப் பொருட்கள் இருப்பு கிடங்கு ஆகியவை ரூ. 1 கோடியில் கட்டப்படும்.
கதர், பட்டு உற்பத்தி பணிகளில் ஈடுபடும் நூற்பாளர்கள், நெசவாளர்களுக்கு நலநிதி பங்கு தொகை 12 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக உயர்த்தப்படும்.
தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை இணையத்துக்கு கூட்டுறவு சொந்தமான இடங்களில் ரூ. 80 லட்சத்தில் 10 விற்பனை அங்காடிகள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தொழிலாளர் நலத்துறை சார்ந்த அறிவிப்புகள்
இதே போல, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் முகமது பர்வேஸ் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதில்,
தமிழக தொழிலாளர்கள் கட்டுமான திறமையை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கட்டுமான தொழில் பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டு முதல் 3 இடங்களை பெறும் நபர்களுக்கு ஆண்டுதோறும் முதல்வர் கட்டுமான தொழிலாளர் வெற்றி விருது மற்றும் பரிசுத்தொகை வழங்கப்படும்.
பெரு நகரங்களுக்கு வேலை தேடி வரும் கட்டட தொழிலாளர்கள் பாதுகாப்பாக தங்குவதற்கு அடிப்படை வசதியுடன் கூடிய இரவு நேர தங்கும் இடங்கள் ரூ.14 கோடி மதிப்பீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட பெரிய நகரங்களில் அமைக்கப்படும்.
தமிழக கட்டுமான தொழிலாளர் நல பதிவு செய்த வாரியத்தில் கட்டட தொழிலாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறப்பு கட்டுமான திறன் பயிற்சி வழங்க 5 அரசு தொழில் பயிற்சி நிலையங்களில் ரூ. 76.46 கோடி மதிப்பீட்டில் கட்டுமான தொழில் திறன்மிகு மையங்கள் நிறுவப்பட உள்ளது.
தமிழக இளைஞர்கள் அதிக அளவில் தனியார் துறை வேலைவாய்ப்புகளை பெறுவதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்கள் மூலமாக வேலை வாய்ப்புகள் முகாம் நடத்துவதற்கு ரூ.3.72 கோடி நிதி உயர்த்தி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
பொங்கல் இலவச வேட்டி, சேலையில் அதிரடி மாற்றம்.. மக்கள் வியக்கும் வகையில் அமைச்சர் விஜய் பாலாஜி அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் இன்று திங்கள்கிழமை ( ஆகஸ்ட் 31- ஆம் தேதி) 4 துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏ ஆஸ்டின் எழுந்து பேசுகையில், பொங்கல் திருநாளில் வழங்கப்படும் விலையில்லா வேஷ்டியின் அளவை 8 முழத்தில் இருந்து 4 முழமாக குறைத்து இருப்பதால் நெசவாளர்கள் பாதிக்கப்படுவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார். இதற்கு, கைத்தறி, துணி நூல் மற்றும் கதர் துறை அமைச்சர் விஜய் பாலாஜி பதிலளித்து பேசியதாவது: தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டிருந்தன. இதில், பல ஆண்டுகளாக ஒரே ரகத்தில் வேஷ்டி மற்றும் சேலைகள் வழங்கப்படுவதாகவும், இந்த முறையை புதிய வடிவமைப்பில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
4 முழு வேட்டி வேண்டும் என பொதுமக்கள் விருப்பம்
அதன்படி, முதல்- அமைச்சர் ஜோசப் விஜயின் உத்தரவின் பேரில், தமிழகம் முழுவதும் துறை செயலாளர்கள் மற்றும் சரக அதிகாரிகள் மூலமாக பொதுமக்களிடம் இருந்து கருத்துக்கள் கேட்கப்பட்டிருந்தன. இதில், பெரும்பாலான பொதுமக்கள் வெளுக்கப்படாத 8 முழ வேட்டிக்கு பதிலாக வெளுக்கப்பட்ட 4 முழ வேட்டியை வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தனர். அதன் அடிப்படையில் தான் 4 முழ வேட்டியும், ஜரிகை வைக்கப்பட்ட சேலையும் வழங்க தமிழக அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க: பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.44 ஆக உயர்வு.. முதல்வர் விஜய் அறிவிப்பு
5.25 லட்சம் சேலைகள் கொள்முதல் செய்ய திட்டம்
மேலும், திருவள்ளூர் சரகத்தில் பெடல் தறிகளில் தொடர் வேலை வாய்ப்பு மூலமாக உற்பத்தி செய்யப்பட்ட 5 லட்சத்து 25 ஆயிரம் சேலைகளை அரசு கொள்முதல் செய்ய உள்ளது. மேலும், நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பு வழங்குவதற்காக அரசு வழங்கிய மூலப்பொருட்கள் மூலமாக தயாரிக்கப்பட்ட வேட்டிகள் மற்றும் சேலைகள் முழுமையாக கொள்முதல் செய்யப்படும். அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் துணிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று அமைச்சர் விஜய் பாலாஜி தெரிவித்தார்.
8 முழத்தில் இருந்து 4 முழமாக வேட்டி குறைப்பு
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையையொட்டி, ஒரு வேஷ்டி மற்றும் ஒரு சேலை விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்த வேட்டியானது சுமார் 8 முழம் ஆகும். அதுவும், ஒரே டிசைனில் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது, பொதுமக்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் 8 முழம் வேட்டி, 4 முழமாக குறைக்கப்பட்டு விநியோகிக்கப்பட உள்ளது. அத்துடன், அந்த வேட்டி மற்றும் சேலையில் உள்ள டிசைன்கள் புதுப்பிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அமைச்சர் ஆதவ் அர்ஜூனா இல்லாததால் பேரவை சீக்கிரம் முடியும் என நினைத்தேன்… பிரேமலதா மீண்டும் அட்டாக்!
தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறையின் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 28- ஆம் தேதி) நடைபெற்றது. இதில், பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. பேசுகையில், சட்டப்பேரவையில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ரக்சா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் முன்னேற்றத்துக்காக அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில், ஊத்துக்கோட்டை என்ற பகுதியில் பெண் ஒருவர் மீது அமிலம் வீசப்பட்ட சம்பவத்தில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
ஆதவ் அர்ஜூனா இல்லாததால் சீக்கிரம் பேரவை முடியும்..
பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இன்று சட்டப்பேரவையில் இல்லாததால் பிற்பகல் 1:30 மணிக்கே பேரவை முடிந்து விடும் என நினைத்திருந்தேன். ஆனால், பேரவை நீண்டு கொண்டே செல்கிறது என்று தெரிவித்தார். பிரேமலதா விஜயகாந்த் இந்த பேச்சு அவையில் சிறிது நேரம் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்த்தது. ஏற்கனவே, நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரின் போது, பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசாத வரை பேரவை அமைதியாக செல்கிறது.
மேலும் படிக்க: திமுகவில் அதிரடி மாற்றம்.. 38 மாவட்டங்கள், 110 மாவட்ட செயலாளர்கள் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..
ஆதவ் பேச ஆரம்பித்தால் சண்டை களமாக மாறிவிடுகிறது
அவர் பேசத் தொடங்கினால், பேரவையில் வாக்குவாதம் ஏற்பட்டு, சட்டப்பேரவை, சண்டை பேரவை மாதிரி மாறி விடுவதாகவும், சட்டப்பேரவையின் மாண்பை காக்கும் வகையில் அனைத்து உறுப்பினர்களும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று செயல்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தார். அத்துடன், செப்டம்பர் 8- ஆம் தேதியுடன் பேரவை முடிவடையும் வரை பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேச வேண்டாம் எனவும், அவரை பேச அனுமதிக்க வேண்டாம் எனவும் பேரவை தலைவரிடம் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்திருந்தார்.
ஆதவ் அர்ஜூனாவை 2-ஆவது முறையாக விமர்சித்த பிரேமலதா
இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொடரிலும், பொதுப் பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது பிரேமலதா விஜயகாந்த் 2- ஆவது முறையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார். நேபாள நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் சிக்கி உள்ளனர். இதில், அவர்களை மீட்டு தமிழகம் அனுப்பி வைக்கவும், நிவாரண பணிகளை விரைந்து மேற்கொள்ளவும் ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட 4 அமைச்சர்கள் நேபாளம் சென்றுள்ளதால் அவர்கள் பேரவையில் பங்கேற்கவில்லை.
அமைச்சர் வன்னி அரசு பேச்சுக்கு சோபா மாடல் என திமுக கிண்டல்.. பேரவையில் காரசாரமான சூழல்!
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரம் தொடங்கி நடைபெற்றது. இதில், சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு உரையாற்றினார். அப்போது, தலித் பிரதிநிதித்துவம் மற்றும் திராவிட கட்சிகளின் அணுகுமுறை தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் முழக்கமிட்டனர். தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசு பேசுகையில், தலித் சமுதாயத்தின் அரசியல் உரிமை மற்றும் ஆட்சியில் அதிகார பகிர்வு குறித்து மிக காரசாரமான கேள்விகளை முன் வைத்திருந்தார். இதில், தலித் சமுதாயத்தை சேர்ந்த தன்னை சட்டமன்றத்தில் சுதந்திரமாக பேசவிடாமல் தடுக்கின்றனர். திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்கள் உள்ளன. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்த போதிலும், திமுக தனது ஆட்சிக் காலத்தில் அதிகாரத்திலும், அமைச்சரவையிலும் பங்கு வழங்கவில்லை.
அமைச்சர் வன்னி அரசு கூறிய வார்த்தை
தலித் தலைவர்களை பொதுத் தொகுதிகளில் போட்டியிட வைப்பதை சுட்டி காட்டி பெருமை பேசுவது. அவர்களை சம உரிமையோடு பார்க்காமல் பரிதாபத்தின் அடிப்படையில் அணுகுவதையே எடுத்துக்காட்டுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு வெறும் வெறும் 2 சட்டமன்ற உறுப்பினர்கள் மட்டுமே இருக்கும் நிலையில், தமிழக வெற்றிக் கழக அரசு அவர்களுக்கு மதிப்பு அளித்து அமைச்சரவையில் இடம் வழங்கி சமூக நீதியை நிலை நாட்டி உள்ளது என்று வன்னி அரசு தெரிவித்தார்.
மேலும் படிக்க: முதல்வர் விஜய் புகைப்படம் வாங்கியதிலேயே ஊழலா? மதுரை உயர்நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
சோபா மாடல்.. சோபா மாடல்.. என திமுகவினர் கிண்டல்
இதற்கு, எதிர்க்கட்சியினர் கடும் ஆக்ரோஷம் அடைந்து, அமைச்சர் வன்னி அரசு பேசிக் கொண்டிருந்த போதே, சோபா மாடல்.. சோபா மாடல்.. என்று கேலி, கிண்டல் செய்து குரல் எழுப்பினர். இதனை தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசின் பேச்சுக்கு திராவிட முன்னேற்ற கழக எம்எல்ஏக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், பலர் ஆவேசமாக எழுந்து ஒரே நேரத்தில் முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, அமைச்சர் வன்னி அரசை பேச விடாமல் தடுத்ததுடன், அவையில் அமலில் ஈடுபட்டனர்.
சட்டப்பேரவையில் காரசாரமான சூழல்
இதன் காரணமாக சட்டமன்றத்தில் சில நிமிடங்கள் காரசாரமான சூழல் நிலவியது. அப்போது, பேரவை தலைவர் அனைவரையும் அமருமாறு கூறினார். இதைத் தொடர்ந்து, அனைவரும் அமைதி ஆகினர். தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையே நிரூபித்தது. இதற்கு ஆதரவாக வாக்களித்த கட்சிகளின் தலைவர்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு தவெக சார்பில் சோபா வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதை தான் எதிர்க்கட்சிகள் ஷோபா மாடல் என்று கேலி செய்தனர்.
உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கடன்.. அமைச்சர் விஸ்வநாதன் அசத்தல் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் 6 துறைகளுக்கான மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், உயர் கல்வித்துறையில் பல்வேறு அறிவிப்புகளை அந்தத் துறையின் அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டு பேசினார். இதில், அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு கடந்த 2021- ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, அரசு மற்றும் அரசு பொறியியல், தொழில்நுட்ப உதவி பெறும் பல்வகை கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களுக்கு 2020- ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, சி.ஏ.எஸ். திட்டம் தொடர்பான பல்வேறு தீர்ப்புகளை முறையாக நீதிமன்ற ஆய்வு செய்து செப்டம்பர் 1- ஆம் தேதி முதல் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்படும். அரசு கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கல்லூரிகளில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களின் மாதாந்திர தொகுப்பூதியம் ரூ.35 ஆயிரமாகவும், அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரிகளில் பணிபுரிபவர்களுக்கு தொகுப்பூதியம் ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தப்படும்.
உயர்கல்வி மாணவர்களுக்கு ரூ. 20 லட்சம் வரை பிணையில்லா கடன்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள் மற்றும் அரசு பல வகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் 6 ஆயிரம் பேராசிரியர்கள் 3 கட்டங்களாக நியமிக்கப்படுவார்கள். மாணவர்கள் தடையின்றி உயர்கல்வி பயில்வதற்காக ரூ. 20 லட்சம் வரையிலான பிணையில்லாத கல்விக்கடன் வழங்க கல்வி உத்தரவாத திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக தொகுப்பு நிதி உருவாக்கப்பட உள்ளது. இந்த திட்டமானது 2026- 2027 கல்வி ஆண்டு முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு!
செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்துக்கு ரூ. 50 லட்சம்
இளைஞர்கள் உலகளாவிய வேலைவாய்ப்பு திறனை மேம்படுத்துவதற்காக தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில் ஜப்பான் மற்றும் ஜெர்மன் மொழி பெயர்ச்சி, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். இதே போல, செயற்கைக்கோள் வடிவமைக்கும் திட்டத்துக்காக பொறியியல் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 10 திட்டங்களுக்கு ரூ. 5 லட்சம் மொத்தம் ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
முதல் தலைமுறை மாணவர்களுக்கு கட்டண விலக்கு
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி, வாழ்வாதாரம், மருத்துவ செலவுக்காக உயர்கல்வியில் சேரும் 50 திருநர் மாணவர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்பட உள்ளது. இதற்காக, ரூ. 1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். ஆதிதிராவிடர், பழங்குடியினர் பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழுமையான கட்டண விலக்கு வழங்கப்பட உள்ளது என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… அறிவிப்புகளை அள்ளிக் கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன்!
தமிழக சட்டப்பேரவையில் 6 துறைகள் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். இதில், தமிழகத்தில் தற்போது காலியாக உள்ள 1,443 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 1,328 பணியிடங்கள் என மொத்தம் 2,271 பணியிடங்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக உடனடியாக நிரப்பப்படும். தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டால் 1417 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும். கல்வித்துறையில் 358 பேருக்கு விரைவில் கருணை அடிப்படையில் ஆன பணிகள் வழங்கப்படும்.அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மாதத்துக்கு ஒரு நாள் பேக் மற்றும் புக் இல்லாமல் பள்ளிக்கு செல்லலாம். 6- ஆம் வகுப்பு முதல் செயற்கை நுண்ணறிவு பாடம் அறிமுகம் செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
டி.என். அறிவு திட்டம் செயல்படுத்தப்படும்
2027- 2028 கல்வி ஆண்டு முதல் மாநிலம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் டி.என். அறிவு திட்டம் செயல்படுத்தப்படும். இந்த புதிய பாடத்திட்டம் ஒன்றாம் வகுப்பு முதல் 5- ஆம் வகுப்பு வரை அறிவு பவுண்டேஷன் 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை அறிவு டிஸ்கவரி, 9-ம் வகுப்பு முதல் 12- ஆம் வகுப்பு வரை அறிவு என்ற வளர்ச்சி கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டு தொடக்க நிலையில் வலுவான அடித்தளத்தையும் நடுநிலை நிலையில் ஆழமான புரிதலையும் மாணவர்களிடம் உருவாக்கும் வகையில் செயல்படுத்தப்பட உள்ளது.
மேலும் படிக்க: கொளத்தூரில் நான் வெற்றி பெற்றதாக அறிவிக்க வேண்டும்.. உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் வழக்கு!
சீருடையுடன் ஸ்போர்ட்ஸ் ஜெர்சி வழங்கப்படும்
அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச சீருடை மற்றும் ஸ்போர்ட்ஸ் ஜெர்சி வழங்கப்படும். ஓடி விளையாடு திட்டத்தின் கீழ் இனி பள்ளிகளில் ஒவ்வொரு நாளும் ஓ.டி. விளையாட்டு பிடி பாடப்பிரிவு என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மாணவர்களின் புத்தக சுமையை குறைப்பதற்காக மாதத்தில் ஒரு நாள் நோ பேக் டே திட்டம் செயல்படுத்தப்படும். பள்ளிகளில் தமிழ் பேச்சு எங்கள் உயிர் மூச்சு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதேபோல ஒளிரும் புன்னகை என்ற புதிய திட்டம் கொண்டுவரப்படும்.
ரூ. 22.36 கோடியில் வெற்றி பாதை திட்டம்
தமிழ்நாடு தன்னிலை கற்றல் திட்டத்தின் கீழ், முதல் கட்டமாக அரசு நடுநிலைப் பள்ளிகளில் 6- ஆம் வகுப்பு முதல் 8- ஆம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு கருப்பொருளாக இருக்கும். உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வு முன்னனி நிறுவனங்களில் இடம் பெறுவதற்காக ரூ.22.36 கோடியில் வெற்றி பாதை திட்டம் செயல்படுத்தப்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கு நாளிதழ் மற்றும் நூல்களை வாசிப்பதற்காக ரூ.1.45 கோடியில் வாசிப்பை நேசிப்போம் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். இதே போல, பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!
தமிழக சட்டப்பேரவையை சண்டைக்களமாக மாற்றுவதற்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கே. என். நேரு ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அவற்றையெல்லாம் சரி செய்யப்பட்டு தரமான ரேஷன் பொருட்கள் வழங்க முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பக்கம் கேமரா திருப்பட்டால் எப்படி ரூல்ஸ் போட முடியும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தகாத வார்த்தையில் பேசும் முன்னாள் அமைச்சர்கள்
முதல் முறை சட்டப்பேரவைக்கு வந்த எம்எல்ஏக்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைத்து வருகிறோம். மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன் வைக்கிறோம். இதே போல, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் பதில் தெரிவித்து வருகிறோம். ஆனால், சட்டப்பேரவையில் சிலர் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவதும் ஓடுவதும் மற்றும் அமைச்சர்கள் பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவதும் என ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும் படிக்க: செங்கல்பட்டு இளைஞர் கொடூர கொலை.. தவெகவில் இருந்து தந்தை- மகன் நீக்கம்!
சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி
இவர்கள் சட்டப்பேரவையை சண்டை போடும் இடமாக மாற்ற செயல்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா என்று முதலில் தெரிய வேண்டும். சட்டமன்றத்தில் எப்படியாவது மோதல் நடக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைவருக்கும் மான கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபாகும்.
ஜனநாயக முறைப்படி சட்டப் பேரவை நடக்க வேண்டும்
கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டார்கள். சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடைபெற வேண்டும் என்பதே உங்களது ஒரே நோக்கமாகும்.
மின்சார வாகன ஓட்டிகளுக்கு குட் நியூஸ்.. 20 ஆயிரம் சார்ஜிங் மையங்கள் அமைக்கப்படும்.. அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார்!
தமிழக சட்டப்பேரவையில் எரிசக்தி மற்றும் மின்சாரத்துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், துறை அமைச்சர் சி. டி. ஆர். நிர்மல் குமார் பேசினார். தொடர்ந்து, பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டார். இதில், தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் 2026- 2027 ஆம் ஆண்டில் மொத்தம் 50 ஆயிரம் புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தில் காலியாக உள்ள 2,558 பணியிடங்களை தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாகவும், 5 ஆயிரம் திறன் சார்ந்த மற்றும் திறன் சாராத மொத்தம் 10 ஆயிரம் பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்திட நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை பகுதியில் உள்ள 33 கிலோ வாட் துணை மின் நிலையங்களில் ரூ. 104 கோடி மதிப்பீட்டில் கூடுதலாக 33 கிலோ வாட் மின்னூட்டங்கள் படிப்படியாக அமைக்கப்படும்.
20 ஆயிரம் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும்
தமிழகத்தில் சுமார் 20,000 சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். தமிழ்நாடு தொடர் அமைப்பு கழகத்தின் 10 மிக உயர் அழுத்த துணை மின் நிலையங்களில் மின்மாற்றிகளின் மின்மாற்றிகளின் திறன் ரூ. 110.76 0 கோடி மதிப்பீட்டில் உயர்த்தப்படும். 33 கிலோ வாட் துணை மின் நிலையங்களில் ரூ.129.49 கோடி மதிப்பீட்டில் மின்மாற்றிகளின் திறன் உயர்த்தப்படும். மிக உயர் அழுத்த மின் துணை மின் நிலையங்களில் பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு சாதனங்களை ரூ.120.32 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
மேலும் படிக்க: “59 திமுக உறுப்பினர்களுக்கும் அரசு வழங்கும் கார் வேண்டாம்!”.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!
புதவிட பழுதை கண்டறிய சிறப்பு வாகனம் கொள்முதல்
ஆயுள் காலம் முடிந்த தகவல் தொடர்பு சாதனங்களை ரூ.92.3 கோடி மதிப்பீட்டில் மாற்றி அமைக்கப்படும். சென்னையில் 1750 இடங்களில் உள்ள பகிர்மான மின்மாற்றி கட்டமைப்புகள் ரூ.250 கோடி மதிப்பீட்டில் ஆர். எம். யு. மாற்றி அமைக்கப்படும். மிக உயர் அழுத்த புதைவிட பழுதை கண்டறிவதற்காக ரூ.17 கோடி மதிப்பீட்டில் சிறப்பு வாகனம் கொள்முதல் செய்யப்படும். நுகர்வோர்கள் தங்களது புகார்களை வாட்ஸ் ஆப் ஷாட்பாட் மூலமாக பதிவு செய்வதற்கு ரூ.14 லட்சத்தில் உருவாக்கப்படும். பணியிட மாறுதல் மற்றும் பணி உயர்வு ஆகியவற்றை ஆன்லைன் கவுன்சிலிங் நடத்துவதற்கு விண்ணப்பங்கள் உருவாக்கப்படும்.
கள ஆய்வின்றி வீடுகளுக்கு புதிய மின் இணைப்புகள்
தற்போது, மனிதவள மேலாண்மை அமைப்புடன் இணைந்து அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும். நீட்டிக்கப்பட்ட அல்லது மேம்பாட்டு பணி எதுவும் தேவைப்படாத ஒரு முறை வீட்டு மின் இணைப்பு விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு மின் பகிர்மான கழகத்தால் கள ஆய்வு இல்லாமல் சுய உறுதிமொழி (செல்ஃப் டிக்ளரேசன்) அடிப்படையில் அடிப்படையில் புதிய மின் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார்.
முதல்வர் விஜய் சிரிப்பதை பார்க்க தனி ஸ்கீரின் வேணும்.. பேரவையில் தவெக எம்எல்ஏ வைத்த விசித்திர கோரிக்கை!
தமிழக சட்டப்பேரவையில் துறைகள் வாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று வெள்ளிக்கிழமை ( ஆகஸ்ட் 21- ஆம் தேதி) காலை 9:30 மணிக்கு வழக்கம் போல சட்டப்பேரவை கூடியது. இதில், மதுரை வடக்கு சட்டமன்ற தொகுதியின் தமிழக வெற்றி கழக எம்எல்ஏ கல்லாணை தன்னுடைய தொகுதிகள் தொடர்பாகவும், கோரிக்கைகள் தொடர்பாகவும் பேசினார். அப்போது, ஒரே ஒரு தனிப்பட்ட கோரிக்கையை முன் வைப்பதாக சபாநாயகர் ஜே. சி. டி. பிரபாகரிடம் தெரிவித்தார். இதில், நான் சிறு வயதாக இருந்த போது, தலைவர் தளபதி ஜோசப் விஜய் எங்கு சென்றாலும் ஓடோடி சென்று பார்த்து வந்தோம். தற்போது, சட்டப் பேரவையில் அவரது அருகிலேயே அமரும் பாக்கியத்தை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வழங்கி உள்ளார்.
குலுங்கி குலுங்கி சிரித்த முதல் அமைச்சர் விஜய்
இதில், ஒரு சிறிய வருத்தம் உள்ளது. அது என்னவென்றால் முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் முகத்தை எங்களால் நேரடியாக பார்க்க முடியவில்லை. திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷை, சாமி அமைச்சர் என்று கூறிய போது, முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் குலுங்கி குலுங்கி சிரித்தார். இதனை, பேரவையில் எங்களால் பார்க்க முடியவில்லை. ஆனால், இந்த காட்சிகளை வீட்டுக்கு சென்று டிவியில் பார்த்து ரசித்தோம்.
மேலும் படிக்க: கார் விவகாரத்தில் உதயநிதி – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா இடையே கடும் வாக்குவாதம்..
விஜய் சிரிப்பதை பார்க்க தனி ஸ்கீரின் வேண்டும்
எதிர்க் கட்சிகள் தன்னுடைய அரசை பற்றியும், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் பற்றியும் குறை கூறினாலும் கூட, அதில், நகைச்சுவை இருந்தால் சிரிக்கிற ஒரே தலைவன் எங்கள தளபதி முதல் அமைச்சர் ஜோசப் விஜய் தான். மறைந்த மாபெரும் தலைவர் அண்ணா வழிவந்த எங்கள் அண்ணாவின் அழகிய முகத்தை பார்ப்பதற்கு சட்டப்பேரவையில் தனியாக ஒரு ஸ்கிரீன் அமைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும். இதனை, என்னுடைய தனிப்பட்ட கோரிக்கையாக முன் வைக்கிறேன் என்று தெரிவித்தார்.
பேரவையில் நிலவிய கலகலப்பான சூழல்
இதற்கு, தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் சிரித்த முகத்துடன் மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனால், பேரவையில் சிறிது நேரம் கலகலப்பான சூழல் நிலவியது. மதுரை வடக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டப் பேரவை உறுப்பினர் கல்லாணை வைத்த கோரிக்கை விசித்திரமாக பார்க்கப்படுகிறது.
மகளிர் சுய உதவிக் குழுவுக்கு பிரத்யேக மின்னணு வணிக தளம்.. பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!
தமிழக சட்டப்பேரவையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை மீதான விவாதம் இன்று புதன்கிழமை நடைபெற்றது. இதில், மேற்கண்ட துறைகள் சார்பில் முதல்வர் ஜோசப் விஜய் பதிலளித்து பேசினார். அப்போது, பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், மகளிர் சுய உதவி குழுக்கள் தயாரிக்கும் பொருள்களை சர்வதேச சந்தைகளில் சந்தைப்படுத்தும் வகையில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பிரத்தியேகமான மின்னணு வணிக தளம் அமைக்கப்படும். நிகழாண்டில் சிறப்பாக செயல்படும் ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 1 லட்சம் வீதம் ஊக்கத்தொகையாக வெற்றி பெண்கள் சுய உதவி குழு விருது வழங்கப்படும். திருநர்களின் நலனுக்காக ரூ. 3.17 கோடி மதிப்பீட்டில் ஒரு விரிவான திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், ஊரக பகுதிகளில் உள்ள 6,800 சுய உதவி குழுக்களுக்கு ரூ.102 கோடி சமுதாய முதலீட்டு நிதி வழங்கப்படும்.
13 ஆயிரம் சுய உதவி குழுக்களுக்கு ரூ.20 கோடி சுழல் நிதி
மேலும், ஊரக பகுதிகளில் உள்ள சுமார் 13,333 சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதியாக ரூ. 20 கோடி வழங்கப்படும். அத்துடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 2 கொடி மதிப்பீட்டின் மூலப்பொருள்கள் ஆதரவு வங்கி அமைக்கப்பட உள்ளது. தமிழகத்தில் சுமார் 10 ஆயிரம் பள்ளிகள் மற்றும் ஆயிரம் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மனநலம் காத்தல், மது மற்றும் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிப்பதற்காக ரூ. 60 லட்சம் கேடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தென்னிந்திய முதல்வர்கள் மாநாடு… அமித் ஷா தலைமையிலான குழுவில் சிஎம் விஜய்க்கு முக்கிய பொறுப்பு.. என்ன அது!
தமிழகம் முழுவதும் 100 வேலை வாய்ப்பு முகாம்கள்
மேலும், சுமார் 50 ஆயிரம் இளைஞர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பு மற்றும் சுய தொழில் வேலை வாய்ப்புகளுடன் கூடிய திறன் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 130 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் முன்னெடுக்கப்படும். தமிழக முழுவதும் மாவட்ட அளவில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 100 வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதே போல, கலை பண்பாட்டு துறையின் கீழ் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் மற்றும் வயிற்றுநர்கள் பணியிடங்களை மாணவர்கள் கல்வி நலனை கருத்தில் கொண்டு தொகுப்பூதியத்தில் இறப்பின் மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை அரசு அருங்காட்சியகம் டிஜிட்டல் மையம்
சிறந்த கலைஞர்கள் ஆசிரியர்களாக ரூ. 20 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கான மாத ஊதியம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதற்காக ரூ.45 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது சென்னை அரசு அருங்காட்சியகம் முழுமையாக டிஜிட்டல் மையமாகப்பட்டு இணையதள அருங்காட்சியகமாக அறிமுகப்படுத்தப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டு கொன்ற சம்பவம்.. குடும்பத்துக்கு தலா ரூ. 10 லட்சம்.. வனத்துறை அமைச்சர்!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், கர்நாடகா மாநிலத்தில் வனப்பகுதியில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உள்ளிட்டவர் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது, கர்நாடகாவில் சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களின் குடும்பத்துக்கு நிதி உதவி வழங்கப்படுமா என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி கே. பழனிசாமி கவனம் ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கேள்வி எழுப்பினார். அப்போது, அவர் பேசுகையில், நியாயமான விசாரணை நடைபெற வேண்டும் என்றால், இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
கர்நாடக அரசு அறிவித்த நிதி குறைவு
கர்நாடகா அரசு அறிவித்துள்ள நிதி மிக மிக குறைவாகும். எனவே, தமிழக அரசு பாதிக்கப்பட்ட தமிழர்களின் குடும்பத்தினருக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்தார். இதற்கு, இந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் தளி ராமச்சந்திரன் பேசுகையில், கர்நாடக மாநில வனத்துறை மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும். சிபிஐ விசாரணைக்கு கர்நாடக மாநில அரசு உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும் படிக்க: தவெக எம்எல்ஏ மீது 3 பிரிவுகளில் வழக்கு.. ராணிப்பேட்டையில் பெரும் பரபரப்பு.. என்ன காரணம்!
3 தமிழர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிதியுதவி
இதற்கு வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் எழுந்து, இதற்கு பதில் அளித்தார். இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய்யின் ஆணைக்கு இணங்க சுட்டு கொலை செய்யப்பட்ட 3 தமிழர்களுக்கும் தலா ரூ. 10 லட்சம் வழங்க வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு விரைவில் வழங்கப்படும் என்று வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் தெரிவித்தார். கர்நாடக மாநிலத்தில் வனப் பகுதியில் மான் வேட்டையாடுவதற்காக 4 தமிழர்கள் நாட்டு துப்பாக்கிகளுடன் வேட்டையாட சென்றதாக கூறப்படுகிறது.
கர்நாடகாவில் நிகழ்ந்த என்கவுண்டர் சம்பவம்
இது குறித்து தகவல் அறிந்த கர்நாடக மாநில வனத்துறை சம்பவ இடத்துக்கு சென்றது. அங்கு, வனத்துறை அதிகாரிகளுக்கும், தமிழர்களுக்கும் இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில், வனத்துறை அதிகாரிகள் துப்பாக்கியால் சுட்டதில் 3 தமிழர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் குண்டு காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
முதல்வருடன் ஆலோசித்து நிதியுதவி
இந்த சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு, தமிழக முதல்வர் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். தற்போது, தமிழக சட்டப்பேரவையில் இது தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பட்ஜெட் மீதனா விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழகத்தில் 2,500 செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். 3,594 மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 1,695 தொகுப்பூதிய செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும். சமூகம், குடும்பம், தனி மனித அளவில் ஆரோக்கியம் மேம்படுத்த "பாசிட்டிவ் ஹெல்த் பாலிசி" உருவாக்கப்படும். இது தொடர்பாக அனைத்து தகவல்களும் மக்களுக்கு கிடைக்க "நலம் 360" செயலி அறிமுகம் செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் ரூ. 10 கோடியில் மருத்துவ கட்டமைப்புக்கான வடிவமைப்பு திட்டம் கொண்டு வரப்படும். தமிழ்நாடு மருத்துவ நகரம் உருவாக்கப்பட்டு மருத்துவ சேவை ஆராய்ச்சி சேவைகள் வழங்கப்படும். செவிலியர்களுக்கு தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில் பணி வழங்கப்படும்.
உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள்
மருத்துவ துறையில் முதன்மை இடத்தை அடைய மருத்துவ நகரம் அமைக்கப்படும். உலக தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஆயுஷ் மருத்துவம் வழங்கப்படும். மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக ஒப்பந்த செவிலியர்களாக தேர்வு செய்யப்பட்டு தற்போது பணியில் இருந்து வரும் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியத்தில் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி உள்ளனர்.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!
பணி மூப்பு அடிப்படையில் செவிலியர்கள் நியமனம்
இதனை, பரிசீலனை செய்து அவர்களின் சேவையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 2500 பணியிடங்கள் காலமுறை ஊதியத்தில் உருவாக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.  மேலும், 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
115 அறிவிப்புகளை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்
ரூ. 51 கோடியில் நலம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல் நல பரிசோதனை. 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை 14 அடிப்படை பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 115 புதிய அறிவிப்புகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கியது. 4 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திங்கள்கிழமை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன் பேசினார். அப்போது, சட்டப்பேரவையில் சிலர் அப்பாவை காணும் என்று சொல்கின்றனர். அவர் ( முன்னாள் முதல்வர் மு. க. ஸ்டாலின்) இங்கு வரும்போது பாதி பேர் இருக்க மாட்டார்கள். ஆனால், நாங்கள் இருப்போம் என்று தெரிவித்தார். அப்போது, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சரும், அவை முன்னவருமான கே. ஏ. செங்கோட்டையன் எழுந்து, எங்கள் முதல்- அமைச்சர் ஜோசப் விஜய் இருக்கும் வரை இனி தமிழகத்தில் உங்களால் தலை தூக்க முடியாது.
திமுக வெற்றி பெறுவதற்கு வாய்ப்பே இல்லை
சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிவித்தார். இதற்கு, பதில் அளித்து பேசிய கே. கே. எஸ். எஸ். ஆர். ராமச்சந்திரன், திராவிட முன்னேற்ற கழகம் தேர்தலில் தோல்வியுற்று விழுந்து உள்ளது. ஆனால், விழுந்த வேகத்தில் மீண்டும் நிச்சமாக எழும். அதுதான் திராவிட முன்னேற்ற கழகம் என்று தெரிவித்தார். இதற்கு, அவை முன்னவர் கே. ஏ. செங்கோட்டையன், முன்னாள் முதல்- அமைச்சர் எம். ஜி. ஆர். இருந்தவரை திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறவில்லை.
மேலும் படிக்க: “ஆதாரம் என்கிட்ட இருக்கு!”.. பேரவையில் புள்ளிவிவரங்களுடன் பாய்ந்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா.. திமுக-வினருடன் கடும் வாக்குவாதம்!
எம்ஜிஆர் இருந்த வரை திமுக வெற்றி பெறவில்லை
புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர். இந்த கோட்டையில் அமர்ந்த பிறகு அவர் உயிருடன் இருந்த வரை திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறவில்லை என்பதே வரலாறு என்று தெரிவித்தார். அப்போது, குறுக்கிட்ட முன்னாள் அமைச்சர் கே. என். நேரு, கடந்த 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்றது. இதேபோல, 1986- ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலிலும் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றியே பதிவு செய்தது என்று தெரிவித்தார்.
ஆட்சி கலைப்பில் ஈடுபட்ட திமுக
இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சரும், அவை முன்னவருமான கே. ஏ. செங்கோட்டையன், கடந்த 1980- ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெற்று பாராளுமன்றத்திற்கு சென்றனர். அங்கு, ஆட்சியையும் கலைத்தனர். ஆனால், மீண்டும் நிரந்தர முதலமைச்சர் என்ற வரலாற்றை எம்ஜிஆர் தான் படைத்தார் என்று தெரிவித்தார்.
முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை மீதான விவாதம் இன்று திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின்போது, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுந்திருக்கவில்லை என்று அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு, திமுக எம்எல்ஏ ஓ. பன்னீர்செல்வம் பதில் அளித்ததுடன், கேள்வியும் எழுப்பி இருந்தார்.  இதில், அறநிலையத்துறை அமைச்சர் திடீரென எழுந்து முதல்வர் வரும் பொழுது எதற்காக எதிர்க்கட்சித் தலைவர் எழுந்து மரியாதை செலுத்தவில்லை என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த அவைக்கு பேரவை தலைவர் தான் தலைவர். பேரவை தலைவர் வரும்போது கட்சி வித்தியாசம் இன்றி அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்பது காலம் காலமாக கடைப்பிடித்து வருகின்ற ஒரு மரமாகும்.
பேரவையில் அங்கும் இங்கும் சென்று வணக்கும் செலுத்தும் முதல்வர்
முதல் அமைச்சராக இருப்பவர்கள் இந்த அவைக்குள் நுழைந்தவுடன் நேராக தங்கள் இருக்கைக்கு சென்று அங்கிருந்து வணக்கம் செலுத்தி விட்டு அமர்வது தான் மரபாகும். ஆனால், முதலமைச்சர் ஜோசப் விஜய் அவைக்குள் நுழைந்து நடந்து சென்று அங்கும், இங்கும் திரும்பி வணக்கம் செலுத்தி விட்டு பின்னர் தனது இருக்கைக்கு சென்று அமருகிறார். இது, புதிய வழக்கமாக இருக்கிறது. அதே வகையில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் வருகையின் போது எழுந்து நிற்க வேண்டும் என்றால் இந்த அவைக்குள் எதிர்க் கட்சித் தலைவர் வரும் போதும் அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நிற்க வேண்டுமா என்பதையும் பேரவை தலைவர் முடிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.
மேலும் படிக்க: ஐபிஎல் ஸ்டேடியத்தில் போதைப்பொருளா?.. பேரவையில் உதயநிதி vs அமைச்சர் சரத் கடும் மோதல்..
எதிர்க்கட்சி தலைவர் வரும்போது எழுந்து நிற்பார்களா
இதனை ஆளும் கட்சி உறுப்பினர்கள் உட்பட அனைத்து கட்சி உறுப்பினர்களும் எழுந்து நிற்பார்களா என விளக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதற்கு, சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம் அளித்து பேசுகையில், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் பேரவைக்கு வரும்போது உறுப்பினர்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஆனால், அவ்வாறு எழுந்து நின்று மரியாதை செலுத்துவது நமது பண்பாடு மற்றும் பாரம்பரியம் ஆகும்.
முதல்வர்- எதிர்க்கட்சி தலைவர் வரும் போது எழுந்துநிற்க தேவையில்லை
அந்த கண்ணியத்தை காப்பாற்ற வேண்டுமா இல்லையா என்பதை உறுப்பினர்களின் விருப்பத்துக்கு விட்டு விடுகிறேன். எனவே, யாரும் மரியாதை செலுத்தி ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்த விரும்பவில்லை. அவரவர்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை தங்களது மனதுக்கு ஏற்ப கொடுப்பது அவர்களது விருப்பம் என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவைக்கு 4 நாள்கள் பிரேக்… ஆக.17-இல் மீண்டும் பரபரக்கும் சட்டமன்றம்.. சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவிப்பு!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி ( புதன்கிழமை) கூடியது. முதல் நாளான அன்று தமிழக அரசின் பொது நிதிநிலை அறிக்கையை நிதி துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து சுமார் 2:30 மணி நேரம் பேசி இருந்தார். இதை தொடர்ந்து, ஆகஸ்ட் 6- ஆம் தேதி ( வியாழக்கிழமை) வேளாண் நிதி நிலை அறிக்கையை உழவர் நலன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து 2 மணி நேரம் பேசி இருந்தார். இந்த இரு நிதிநிலை அறிக்கைகளும் தாக்கல் செய்த போது, பல்வேறு திட்டங்கள் மற்றும் மற்றும் பல்வேறு அறிவிப்புகள், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை தெரிவிக்கப்பட்டு இருந்தன. தற்போது, இந்த இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
இரு பட்ஜெட்டுகள் மீதான விவாதம்
அதன்படி, கடந்த 7, 10, 11 ஆகிய தேதிகளில் பொது நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் நடைபெற்ற போது, ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசினர். இவர்களுக்கு, துறைகளின் அமைச்சர்கள் பதில் அளித்தனர். இதைத் தொடர்ந்து, இன்று ஆகஸ்ட் 12- ஆம் தேதி பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்திற்கு நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் மற்றும் வேளாண் துறை அமைச்சர் வினோத் ஆகியோர் பதில் அளித்தனர். பின்னர், இன்றைய கூட்டம் நிறைவடைவதாக பேரவை தலைவர் அறிவித்தார்.
மேலும் படிக்க: “50% எம்.பி இடங்கள் அதிகரித்தாலும் ஆபத்துதான்!”.. தொகுதி மறுவரையறை குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எச்சரிக்கை!
தொடர்ச்சியாக 4 நாள்கள் விடுமுறை
தொடர்ந்து, நாளை ஆகஸ்ட் 13- ஆம் தேதி மற்றும் நாளை மறுநாள் ஆகஸ்ட் 14- ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் நடைபெறாது. அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 15- ஆம் தேதி சுதந்திர தினம் என்பதாலும், அதற்கு மறுநாள் ஆகஸ்ட் 16- ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் தொடர்ச்சியாக 4 நாட்கள் சட்டப் பேரவைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பின்னர் ஆகஸ்ட் 17- ஆம் தேதி ( திங்கள்கிழமை) சட்டப்பேரவை மீண்டும் கூட உள்ளது. அன்றைய தினம் முதல் துறை வாரியாக மானிய கோரிக்கை விவாதம் தொடங்கி நடைபெற உள்ளது.
ஆக. 17- இல் மானிய கோரிக்கை விவாதம்
முதல் நாளில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, இயற்கை சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை ஆகியவை மீதான மானிய கோரிக்கைகள் விவாதம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, மற்ற துறைகள் வாரியான கோரிக்கை விவாதம் நடைபெறும் என்று பேரவை தலைவர் தெரிவித்தார்.
விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
தமிழக அரசு தாக்கல் செய்த பொது நிதிநிலை அறிக்கை மற்றும் விவசாய நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த விவாதத்தில் பிரேமலதா விஜயகாந்த் எம். எல். ஏ. பேசியதாவது: தமிழக சட்டமன்றம் கூடிய முதல் நாளிலிருந்து கடலூர் மாவட்டத்தில் உள்ள விருதாச்சலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறேன். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கிறேன். இதற்கு தனியாக பட்ஜெட் ஒதுக்கினால்தான் தனி மாவட்டமாக அறிவிக்க முடியும். விருதாச்சலம் தொகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நெல்கள் உரிய பாதுகாப்பின்றி மழையில் நனைந்து கொண்டிருக்கின்றன. இதனை துறை சார்ந்த அமைச்சரும், அரசும் கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த ஆட்சி காலத்தில் சுமார் இரு நாட்களில் நெல்களை கொள்முதல் செய்து விடுவர்.
நெல்கள் மழையில் நனைந்து வீணாகின்றன
ஆனால், தற்போது புதிய ஆட்சி அமைந்திருப்பதால் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் உள்ளது. இதனால், பல லட்சம் விவசாயிகள் அவதி அடைந்து வருகின்றனர். வேளாண் துறை அமைச்சர் வினோத்தின் சொந்த ஊரான கும்பகோணத்திலும் பல்வேறு இடங்களில் நெல்கள் கொள்முதல் செய்யப்படாமல் மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. தமிழகத்தில் தற்போது மழை பெய்து வரும் நிலையில் இதனை சேமித்து வைக்கும் வகையில் குளம், ஏரிகள் உள்ளிட்டவற்றை தூர்வார வேண்டும்.
மேலும் படிக்க: காவிரி உரிமையில் எந்த சமரசமும் இல்லை; மேகதாது அணையை தடுக்க அனைத்து சட்ட நடவடிக்கைகளும் தொடரும்” – அமைச்சர் என். ஆனந்த் உறுதி
தண்ணீருக்காக கையேந்தி நிற்க வேண்டாம்
தடுப்பணைகள் கட்ட வேண்டும். இதன் மூலம் மற்ற மாநிலங்களில் தண்ணீருக்காக கையேந்தி நிற்பது தவிர்க்கப்படும். தமிழக முதல்வர் விஜய் அனைத்து கட்சிகளையும் ஒன்றாக திரட்டி நீட் தேர்வு, காவிரி நீர் உள்ளிட்ட விவரங்களுக்காக பிரதமர் மோடியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். விவசாய பட்ஜெட்டில் அனைத்து தரப்பினரும் பெரிதாக எதிர்பார்த்த விவசாய கடன் முழு தள்ளுபடி என்ற அறிவிப்பு வெளியாகவில்லை. கர்நாடகாவில் இருந்து உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.
முதல்வர் பின்னால் ஒட்டுமொத்த தமிழகமும் நிற்கும்
காவிரி நீர் நமது உரிமை. அதை தர வேண்டியது கர்நாடக அரசின் கடமை. இதனை யாரும் மாற்ற முடியாது. காவிரி நீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்காக தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக ஒட்டுமொத்த தமிழகமும் பின்னால் நிற்கும். முதல்வர் கர்நாடகா செல்ல வேண்டும் என்ற முடிவுக்கு தேமுதிக துணை நிற்கும். முதல்வருக்கு தலைகுனிவு ஏற்பட்டால் ஒட்டுமொத்த தமிழகமும் வெகுண்டெழும் என்று தெரிவித்தார்.
திமுக திட்டங்கள் மீது ஒட்டப்பட்ட வெற்றி லேபிள் – மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
சென்னை, ஆகஸ்ட் 6 : சட்டமன்றத்தில் தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அது மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சட்டமன்றத்தில் தமிழக வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் ஆகஸ்ட் 6, 2026 இன்று தாக்கல் செய்தார். இந்த நிலையில், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்க ரூ.2 கோடியில் உழவர் செயற்கை நுண்ணறிவுத் திட்டம்’ உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
தமிழக வேளாண் பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்
இந்த நிலையில் இதுகுறித்து தனது விமர்சனங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரது பதிவில், வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் தமிழக வேளாண் பட்ஜெட் 2026 என குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க : Tamil Nadu Agriculture Budget 2026: உழவர் AI செயலி திட்டம்.. விதைப்பு முதல் விற்பனை வரை டிஜிட்டல் வழிகாட்டல்!!
மேலும் அவரது பதிவில், மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது. கடந்த திமுக அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு நினைக்கிறதா? குறுவை சாகுபடி பாதித்து அரசின் உதவிக்கரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் டெல்டா உழவர்களுக்கு எதுவுமில்லாத, வெற்று பட்ஜெட்டாக இந்த வேளாண் நிதிநிலை அறிக்கை அமைந்திருக்கிறது.
மு.க.ஸ்டாலினின் எக்ஸ் பதிவு
வறட்சி பற்றி பேசாமல், புகழ்ச்சி பாடி முதலமைச்சரின் உச்சிகுளிர பாராட்டுமழை பொழியப் பயன்பட்டதுதான் #TNAgriBudget2026.
மற்றுமொரு பெயர்மாற்ற நிகழ்வாக மட்டுமே நடந்து முடிந்துள்ளது.#DravidianModel அரசின் திட்டங்களின் மேல் 'வெற்றி' என்ற லேபிளை ஒட்டினால் வேலை முடிந்தது என்று இந்த அரசு… pic.twitter.com/YlD3WedXB3
— M.K.Stalin (@mkstalin) August 6, 2026
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை உரத்த குரலில் இந்தக் கூட்டத்தொடர் முழுவதும் கழக உறுப்பினர்கள் எழுப்புவார்கள். உறக்கத்தில் இருக்கும் அரசு விழித்துக் கொண்டு பதில் சொல்லியாக வேண்டும். தீர்வு கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க : Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி வான்மகள் திட்டம்” பெண்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா.. என்ன அது!
இந்த நிலையில் பட்ஜெட் நிகழ்வுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக அரசு வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்தது என்று சொல்வதை விட, முழுக்க முழுக்க முதல்வருக்கு ஜால்ரா அடித்து புகழுரை செய்து, அதாவது மரபுக்கு மீறிய செயல்களை வேளாண்துறை அமைச்சர் சட்டப்பேரவையில் செய்துள்ளார். திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டத்தை எல்லாம் புது திட்டம் போல் பெயர் மாற்றி, ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து அறிவித்துள்ளனர் என்றார்.
TamilNadu Agriculture Budget: தஞ்சையில் நம்மாழ்வார் பெயரில் கல்லூரி.. விவசாயிகளுக்கு பல்வேறு புதிய அறிவிப்புகள்!
ஆகஸ்ட் 6, 2026: தமிழ்நாட்டின் 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், விவசாயிகளின் நலன், வேளாண் கல்வி, தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நம்மாழ்வார் பெயரில் புதிய கல்லூரி:
வேளாண் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவர்களின் களப்பயிற்சிக்காக ரூ.3 கோடி மதிப்பில் ஆறு புதிய பேருந்துகள் வாங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் சாக்கோட்டையில் நம்மாழ்வார் பெயரில் ரூ.5 கோடி செலவில் புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்.. என்னென்ன திட்டங்கள்?
நஞ்சில்லா விவசாய முறைகளை ஊக்குவித்து, அதற்கான சந்தை வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில், நீலகிரி மாவட்டம் உதகையில் ரூ.5 கோடி மதிப்பில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும். மேலும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குகளும் அமைக்கப்பட உள்ளன.
வேளாண் பட்ஜெட்டில் இடம்பெற்ற முக்கிய அறிவிப்புகள்:
வேளாண்மை பொறியியல் துறையை வலுப்படுத்தும் வகையில், திருக்கோவிலூர், முசிறி, காரைக்குடி, தாராபுரம் மற்றும் கும்பகோணம் ஆகிய இடங்களில் ரூ.4.6 கோடி செலவில் வேளாண்மை பொறியியல் விரிவாக்க மையங்கள் அமைக்கப்படும்.
வேளாண் இயந்திரங்களை பராமரிக்கும் 15 மையங்களுக்கு 50 சதவீத மானியம் வழங்க ரூ.1.12 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், 100 விவசாயிகளுக்கு கதிரடிக்கும் களங்கள் அமைக்க ரூ.2.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
'வான்மகள்' திட்டத்தின் கீழ், 100 பெண்கள் உள்பட 500 பேருக்கு ட்ரோன் இயக்கும் பயிற்சி மற்றும் உரிமம் வழங்கப்படும். அதில் பயிற்சி பெற்ற 50 பெண்களுக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 24 ஆயிரம் விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் கருவிகள் வழங்கப்பட உள்ளன. சிறந்த உயிர்ம விவசாயிகளுக்கு 'நம்மாழ்வார் விருது' ரூ.11 லட்சம் பரிசுத் தொகையுடன் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர் உர பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் ரூ.4,000 ஊக்கத்தொகை வழங்கப்படும். அதேபோல், ரூ.122.51 கோடி மதிப்பில் மண்வள பாதுகாப்பு இயக்கம் செயல்படுத்தப்படும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட 'உழவர்' செயலி உருவாக்க ரூ.2 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், காட்டுப்பன்றிகளால் ஏற்படும் பயிர் சேதத்தைத் தடுக்க ரூ.7.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் சிறு, குறு விவசாயிகள் மற்றும் இயற்கை வேளாண்மை மேற்கொள்ளும் உழவர்களை ஊக்குவிக்கும் வகையில், மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு விருதுகள் மற்றும் ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட 10 முக்கிய பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் மூன்று விவசாயிகளுக்கு முறையே ரூ.2 லட்சம், ரூ.1.50 லட்சம் மற்றும் ரூ.1 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்தப் போட்டியின் மூலம் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 30 சிறந்த சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு பரிசுகள் வழங்க ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
வேளாண் கல்வி, தொழில்நுட்பம், இயற்கை விவசாயம் மற்றும் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்புகள், விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.
விவசாய பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்.. எடப்பாடி பழனிசாமி!
தமிழக வெற்றி கழக அரசின் நிகழ் ஆண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் இன்று வியாழக்கிழமை ( ஆகஸ்ட் 6- ஆம் தேதி) தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தவெக அரசின் முதல் வேளாண்மை சட்டை பெரும் எதிர்பார்ப்புடன் எதிர்பார்த்து இருந்த விவசாயிகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 20 துறைகள் ஒன்றாக இணைக்கப்பட்டு வேளாண் பட்ஜெட்டை அறிவித்திருந்தனர். அது போலவே, தற்போதும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளுக்கு பயனளிக்கக் கூடிய ஒரு முக்கிய திட்டம் கூட இடம் பெறவில்லை.
வேளாண் பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க்
தவெக அரசு ஆட்சிக்கு வந்தால் ஒரு குவிந்தால் நெல்லுக்கு ரூ.3500, கரும்பு டன்னுக்கு ஆதார விலையாக ரூ.4500 வழங்கப்படுவதாக தெரிவித்திருந்தனர். இந்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. விவசாயிகளை ஏமாற்றுகிற நாடக பட்ஜெட் ஆகவே உள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட்டுக்கு மைனஸ் பூஜ்ஜியம் மார்க் கொடுக்கலாம். அதிமுக ஆட்சிக்காலத்தில் குடிமராமத்து மூலமாக ஏரிகள், குளங்கள், குட்டைகள் அனைத்தும் தூர்வாரப்பட்டது. இதில், பல்வேறு திட்டங்களை இணைத்து வேளாண் பட்ஜெட்டில் அறிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி வான்மகள் திட்டம்” பெண்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா.. என்ன அது!
20 துறைகளுக்கு எதற்காக அமைச்சர்
பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 16,000 ஏரிகளில் 6 ஆயிரம் ஏரிகள் மட்டுமே தூர்வாரப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் தூர்வாரப்பட்ட ஏரிகளால் தற்போது தண்ணீர் இருந்து வருகிறது. 20 துறைகளையும் ஒன்றாக இணைத்து பட்ஜெட் அறிவிக்கப்பட்டால் அந்த துறைகளுக்கு எதற்காக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற வேண்டும். அத்துடன் அந்த 20 துறைகளுக்கு எதற்காக அமைச்சர்கள் இருக்கின்றனர். மேகதாது அணை மற்றும் காவிரி நீர் விவகாரம் தொடர்பாக எதுவும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்படவில்லை.
அமைச்சர் 2.30 மணி நேரம் பேசியது மட்டுமே சாதனை
வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத் சுமார் 2:30 மணி நேரம் பேசியது தான் வேளாண் பட்ஜெட்டின் சாதனையாக பார்க்கப்படுகிறது. மற்றபடி அதில் சாதனை என்று வேறு எதுவும் இல்லை. தமிழக வெற்றி கழகம் தேர்தல் வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் அறிவிப்பதாக இடம் பெறவில்லை என்று தெரிவித்தார்.
Tamilnadu Agriculture Budget 2026: அதிக மகசூல் பெறும் விவசாயிகளுக்கு லட்சங்களில் ரொக்கப் பரிசு.. அரசின் முக்கிய விருதுகள் & தகுதிகள்..
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், பயிர் உற்பத்தியை அதிகரிக்கும் சிறுகுறு விவசாயிகள் மற்றும் இயற்கை முறையில் சாகுபடி மேற்கொள்ளும் உழவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு மாநில மற்றும் மாவட்ட அளவிலான விருதுகளும், லட்சக்கணக்கான ரொக்கப் பரிசுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், விவசாயிகள் அரசின் அனைத்துச் சேவைகளையும் ஒரே இடத்தில் பெறும் வசதியாகப் புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களுக்கான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
மக்கள் சேவகர் அஞ்சலி அம்மாள் சிறுகுறு விவசாய விருது:
சிறுகுறு விவசாயிகளிடையே ஆரோக்கியமான போட்டியினை உருவாக்கி, சாகுபடி உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன. சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள் உள்ளிட்ட 10 முக்கியப் பயிர்களில் அதிக மகசூல் பெறும் முதல் 3 விவசாயிகளுக்கு முறையே ரூ.2 லட்சம், ரூ.1.50 லட்சம், ரூ.1 லட்சம் வீதம் வழங்கப்படும். இப்போட்டியின் மூலம் மாநில அளவில் தேர்வு செய்யப்படும் 30 சிறந்த சிறுகுறு விவசாயிகளுக்குப் பரிசுகள் வழங்க ₹50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட அளவிலான 'வெற்றி விவசாயி விருது':
மாவட்ட அளவில் விவசாயிகளின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் இப்புதிய விருது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2 ஏக்கர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி உள்ளிட்ட 9 பயிர்களில் ஏதேனும் ஒன்றைச் சாகுபடி செய்து அதிக மகசூல் பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.25,000, மாவட்ட அளவில் மொத்தம் 90 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டுப் பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இதற்கென ரூ.67.50 லட்சம் மாநில நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
சிறந்த உயிர்ம விவசாயிக்கான 'நம்மாழ்வர் விருது':
தமிழ்நாட்டில் இயற்கை மற்றும் உயிர்ம வேளாண் முறைகளைப் பரவலாக்கும் நோக்கிலும், மண்ணையும் மனித ஆரோக்கியத்தையும் காக்கும் விவசாயிகளைச் சிறப்பிக்கும் நோக்கிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. உயிர்ம முறையில் சாகுபடி செய்து அசத்தும் 5 சிறந்த விவசாயிகளுக்குப் பாராட்டுப் பத்திரத்துடன் தலா ரூ.2,00,000 ரொக்கப் பரிசு வழங்கப்படும். இத்திட்டத்திற்காக ₹11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
8 புதிய ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள்:
வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் அனைத்து நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் அதிநவீனத் தொழில்நுட்ப ஆலோசனைகளை விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடையும் வகையில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையங்கள் கட்டப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, 300 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்புக் கிடங்குடன் கூடிய 8 புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026: உழவர் AI செயலி திட்டம்.. விதைப்பு முதல் விற்பனை வரை டிஜிட்டல் வழிகாட்டல்!!
Tamil Nadu Agriculture Budget 2026 : விவசாய பட்ஜெட்: எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு.. முழு விவரம்!
தமிழக அரசின் நிகழாண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில், அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட நிலையில், எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்ற விவரத்தை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
விவசாயிகள் வருமான மேம்பாட்டு ஆணையத்துக்கு ரூபாய் 5.20 கோடி ஒதுக்கீடு.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக ரூ. 12 கோடி ஒதுக்கீடு.
உழவர் சந்தைகளை புணரமைப்பதற்காக ரூ.20 கோடி ஒதுக்கீடு.
வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம் அமைப்பதற்காக ரூ. 4 கோடி ஒதுக்கீடு.
நீலகிரி மாவட்டம், ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் அமைப்பதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு.
நம்மாழ்வார் பெயரில் உயிர்ம வேளாண்மை பட்டைய படிப்பு கல்லூரி அமைப்பதற்காக ரூ. 5 கோடி ஒதுக்கீடு.
தமிழ்நாடு சிறு தானிய இயக்கம் அமைப்பதற்காக ரூ. 63.81 கோடி ஒதுக்கீடு.
வேளாண் பல்கலைக்கழக மாணவர் களப்பயிற்சிக்காக ரூ. 3 கோடி ஒதுக்கீடு.
வேளாண் பல்கலைக்கழக விடுதிகள் முதல்...
வேளாண்மை பல்கலை மாணவர் விடுதிகள் அமைப்பதற்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு.
பருத்தி மறுமலர்ச்சி இயக்கத்துக்காக ரூ. 27.21 கோடி ஒதுக்கீடு.
காட்டுப்பன்றிகள் சேத தடுப்பு திட்டம் ரூ. 7.35 கோடி ஒதுக்கீடு.
கரும்பு சாகுபடி மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 9 கோடி ஒதுக்கீடு.
பனை பாதுகாப்பு இயக்கத்துக்கு ரூ. 2 கோடி ஒதுக்கீடு.
ஏற்றுமதிக்கான நஞ்சற்ற நன்னெறி சாகுபடிக்காக ரூ. 8. 43 கோடி.
தென்னை சிறப்பு திட்டம் ரூ.41 கோடி ஒதுக்கீடு.
உயிர்ம வேளாண் பட்டய படிப்பு கல்லூரிக்கு ரூ. 15 கோடி.
வேளாண் நுண்ணறிவு சந்தை முதல்...
க்யூ ஆர் கோடுடன் விதை சான்றிதழ் ரூ. ஒரு கோடி.
வேளாண் நுண்ணறிவு சந்தை மகத்துவ மையம் ரூ.4 கோடி.
உழவர் சந்தைகளில் மின்னணு விலை பலகைகள் ரூ. 1.50 கோடி.
வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் ரூ. 10 கோடி.
வான்மகள் ட்ரோன் திட்டம்- மகளிருக்கு பயிற்சி ரூ. 4 கோடி.
2 இடங்களில் 1000 டன் சேமிப்பு கிடங்கு வசதி அமைக்க ரூ. 4.80 கோடி. உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
Tamil Nadu Agriculture Budget 2026: உழவர் AI செயலி திட்டம்.. விதைப்பு முதல் விற்பனை வரை டிஜிட்டல் வழிகாட்டல்!!
சென்னை, ஆகஸ்ட் 06: விவசாயிகளுக்குச் சரியான நேரத்தில் தகவல்களைக் கொண்டு சேர்ப்பது, சரியான நேரத்தில் பெய்யும் மழைக்கு நிகரானது என்பதை உணர்ந்து, தமிழ்நாடு அரசு 2026–2027ஆம் நிதியாண்டுக்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையில், 'உழவர் செயற்கை நுண்ணறிவு செயலியை'  அறிமுகப்படுத்தியுள்ளது. நவீனத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயிகளின் அன்றாடச் சாகுபடிப் பணிகளை எளிமையாக்கி, அவர்களின் வருமானத்தைப் பெருக்குவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கமாகும்.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
தொழில்நுட்பங்களின் ஒருங்கிணைப்பு:
இத்திட்டம் அதிநவீன செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) மற்றும் இயந்திரக் கற்றல் (Machine Learning - ML) தொழில்நுட்பங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது. பயிர் விதைப்பு செய்யும் காலம் தொடங்கி, அறுவடை செய்து சந்தைக்கு எடுத்துச் செல்லும் வரையிலான அனைத்து நிலைகளிலும் தேவையான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் விவசாயிகளுக்கு இதன் மூலம் உடனுக்குடன் வழங்கப்படும்.
வழங்கப்படவுள்ள முக்கியச் சேவைகள்:
துல்லியமான வானிலை முன்னறிவிப்பு: நிகழ்நேர தட்பவெப்பநிலை மாற்றங்கள், மழைப்பொழிவு குறித்த துல்லியமான தகவல்கள் உடனுக்குடன் கைபேசிக்கு அனுப்பப்படும்.
மண் நலம் மற்றும் மண் வள ஆலோசனைகள்: விவசாயிகளின் நிலப்பகுதியின் மண் தன்மைக்கேற்ப, என்ன வகையான உரங்களைச் சமசீராகப் பயன்படுத்த வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.
பூச்சி மற்றும் நோய் மேலாண்மை: பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைத் தொடக்க நிலையிலேயே கண்டறிந்து, அவற்றுக்கான உடனடித் தீர்வுகள் மற்றும் மருந்து தெளித்தல் ஆலோசனைகள் வழங்கப்படும்.
பருவநிலைக்கு ஏற்ற பயிர் தேர்வு: மாறிவரும் காலநிலை மற்றும் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப எந்தெந்தப் பயிர்களைச் சாகுபடி செய்தால் அதிக விளைச்சல் பெற முடியும் என்ற தொழில்நுட்ப ஆலோசனைகள் வழங்கப்படும்.
சந்தை நிலவரம் & விலை விவரங்கள்: பல்வேறு சந்தைகளில் விளைபொருட்களுக்கான அன்றாட நிலவரம், தேவைகள் மற்றும் சந்தை விலைகள் குறித்த புதுப்பிப்புகள் உடனுக்குடன் தெரிவிக்கப்படும்.
குரல்வழிச் சேவைகள்: எழுத்து வடிவிலான தகவல்களைப் படிக்கச் சிரமப்படும் விவசாயிகளும் எளிதாகப் பயன்படுத்தும் வகையில், குரல்வழியாகவே உரையாடித் தங்களது சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ளும் சிறப்பு வசதி இதில் இடம்பெறும்.
அரசுச் திட்டங்கள் & மானிய விவரங்கள்: வேளாண்மைத் துறை வாயிலாகச் செயல்படுத்தப்படும் அரசு நலத்திட்டங்கள், மானியங்கள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்த முழு விவரங்களும் இதில் இடம்பெறும்.
விவசாயிகள் பயன்பெறும் முறை: இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து அறிவுசார் வேளாண் சேவைகளையும் விவசாயிகள் தங்களின் தொலைபேசி மற்றும் கைபேசி (Mobile Phone) வாயிலாகவே மிகவும் எளிமையான முறையில் பெற முடியும்.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget: உழவர் ஐடி பெற்ற விவசாயிகளுக்கு ‘மண்வள அட்டை’.. அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!!
நிதி ஒதுக்கீடு:
Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி வான்மகள் திட்டம்” பெண்களுக்கு இப்படி ஒரு அறிவிப்பா.. என்ன அது!
தமிழக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். இதில், அவர் வெளியிட்ட பல்வேறு அறிவிப்புகளில் முக்கிய அறிவிப்பாக வெற்றி வான்மகள் திட்டம் இடம் பெற்றுள்ளது. இந்த திட்டமானது முழுக்க முழுக்க பெண்கள் பயன அடைவதற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெற்றி வான்மகள் திட்டம் இந்தியாவின் ட்ரோன் தொழில் நுட்பம், சரக்கு போக்குவரத்து, கட்டுமானம், கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்காக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச பெண் விவசாயிகளாக அறிவித்துள்ள நிலையில் பெண்களை ட்ரோன் இயக்குபவர்களாக மாற்றுவதற்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது
ரூ. 1.5 கோடியில் பெண்கள் ட்ரோன்கள் இயக்கும் பயிற்சி
மேலும், வேளாண் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்தல் ஆகியவற்றை எளிதாக்கப்படுவதுடன் ஆள் பற்றாக்குறைகளை எதிர்கொள்வதற்காக தகுதி உள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு மாநில அரசு சார்பில் ட்ரோன் இயக்கும் பயிற்சி வழங்கப்படும். இந்த பயிற்சியானது ரூ. 1.50 கோடில் செலவில்  வழங்கப்பட உள்ளது. பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும். விவசாயம் காப்பதற்காக வான்மகள் படை உருவாக்கப்பட உள்ளது.
உழவர் சந்தைகள் புனரமைப்பு
உழவர் சந்தைகள் புனரமைப்பதற்காக நடப்பாண்டில் 8 உழவர் சந்தைகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தவும், சென்னையில் உள்ள பல்லாவரம், ஆவடி ஆகிய உழவர் சந்தைகளை நவீன ஒருங்கிணைந்த உழவர் சந்தைகளாக மறுசீரமைக்கவும், பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படாமல் உள்ள வேப்பந்தட்டை உழவர் சந்தை வேம்பலூருக்கு இடம் மாற்றம் செய்யவும், திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி உழவர் சந்தையை மீண்டும் பழைய இடத்துக்கு இடமாற்றம் செய்து புதிய கட்டடம் கட்டவும் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
உழர் சந்தைகளில் மின்னனு விலை பட்டியல்
Tamil Nadu Agriculture Budget: உழவர் ஐடி பெற்ற விவசாயிகளுக்கு ‘மண்வள அட்டை’.. அமைச்சர் விக்னேஷ் முக்கிய அறிவிப்பு!!
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2026–2027ஆம் நிதியாண்டிற்கான வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையில், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும், மண்வளத்தைப் பாதுகாக்கவும் மற்றும் நெல் விதை உற்பத்தியைப் பெருக்கவும் பல்வேறு சிறப்பு நிதி ஒதுக்கீடுகளும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
இயற்கை விவசாயிகளுக்குக் கட்டண விலக்கு:
இயற்கை வேளாண்மையை ஊக்குவிக்கும் வகையில் நிரந்தர மண்புழு உரக்கூடங்கள் அமைக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேசிய உயிர்ம உற்பத்தித் திட்டத்தில் புதிதாகப் பதிவு செய்யும் விவசாயிகளுக்கான பதிவுக்கட்டணம் மட்டுமின்றி, மாறுதல் காலத்தில் உள்ள விவசாயிகளுக்கான புதுப்பித்தல் கட்டணமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு இலவச உயிர்ம சான்றிதழ் வழங்கப்படும். இயற்கை விளைபொருட்களின் தரத்தை உறுதிசெய்து, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சந்தைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய ஏதுவாக, நச்சுப் பரிசோதனை கட்டணத்திற்கு 100% மானியம் வழங்க ரூ.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மண்வளப் பாதுகாப்பு இயக்கம்:
2026–2027ஆம் நிதியாண்டில் 10 சிறப்பு கூறுகளுடன் ₹122.51 கோடி நிதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். களர், உவர் நிலச் சீர்திருத்தம்: களர் மற்றும் உவர் தன்மையால் பாதிக்கப்பட்ட 2,000 ஏக்கர் நிலங்களை மீட்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு. மண்நல மேம்பாட்டுத் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணர்வுப் பணிகளுக்கு ரூ.2 கோடி நிதி. பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் பசுமைக்குடில் வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் முறைகளைப் பின்பற்றும் விவசாயிகளுக்கு கார்பன் வர்த்தகம் மூலம் கூடுதல் வருமானம் ஈட்ட 2,000 ஏக்கரில் செயல்விளக்கம் அமைக்க ரூ.60 லட்சம் ஒதுக்கீடு.
மத்திய அரசு நிறுத்திய நெல் விதை மானியம்:
தரமான நெல் விதை உற்பத்தி மற்றும் விநியோகத்திற்கான மானியத்தை 2026-27 நிதியாண்டு முதல் ஒன்றிய அரசு நிறுத்திவிட்டது. ரூ.34.72 கோடி மாநில நிதி ஒதுக்கீடு: இருப்பினும், விவசாயிகளின் நலன் கருதி, தமிழ்நாடு அரசே முழுச் செலவையும் ஏற்று 7,730 மெட்ரிக் டன் சான்று நெல்விதை உற்பத்தி மானியம் மற்றும் 14,570 மெட்ரிக் டன் விதைகளை மானியத்தில் விநியோகிக்க ரூ.34.72 கோடி மாநில நிதியை ஒதுக்கியுள்ளது.
இதையும் படிக்க: 6 நிமிடம் முதல்வரை புகழ்ந்த அமைச்சர்.. கொதித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. எண்ட் கார்டு போட்ட சபாநாயகர்!
"மண்வள அட்டை" திட்டம்:
Tamil Nadu Agriculture Budget 2026 : “வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம்” இனி பெண்களும் விவசாயி ஆகலாம்! அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு!
தமிழக வெற்றிக்கழக அரசின் 2026 2027 ஆம் நிதியாண்டுக்கான விவசாய நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், முக்கிய அறிவிப்புகளில் ஒன்றாக வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இதில், வீட்டு தோட்டங்களில் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் இயற்கை உரங்களை பயன்படுத்தி வீட்டிலேயே மாடி தோட்டங்கள்  மூலமாக காய்கறிகள், பழங்கள் உற்பத்தி செய்யலாம். இதில்,  ஊட்டச்சத்து பாதுகாப்பு உறுதிப்படுத்துவதுடன் நகர்ப்புறங்களில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளிலும், கிராமப் பகுதிகளில் நிலப் பகுதிகளிலும் உயிரிகள் தோட்டம் உள்ளிட்டவை மூலமாக காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட செடி, மரங்களை வளர்ப்பதற்காக "வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம் ரூ. 10 கோடியில் செயல்படுத்தப்படும். மேலும், டித்தோட்டம் அமைப்பதற்காக இடுபொருள்கள், விதைகள், நிழல்வலை குடில்கள் உள்ளிட்டவை வழங்கப்படும்.
வேளாண் இயந்திரங்கள் வாடகை மையம்
இந்த ஆண்டு முதல் சூரிய கூடார விளக்கு அமைப்பதற்காக வழங்கப்படும் தொகை 3,50,000- த்தில் இருந்து  4, 40,000 - ஆக உயர்த்தி வழங்கப்படும். பெண் விவசாயிகளிடையே வேளாண் இயந்திரங்களை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டத்தில் பெண் விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். வேளாண் இயந்திர வாடகை மையங்கள் அமைக்கப்படும். இதில், விவசாயிகள் தங்களுக்கு தேவையான வேளாண் இயந்திரங்கள், கருவிகள், பூச்சிக்கொல்லி மருந்து கருவிகள் உள்ளிட்டவற்றை குறைந்த வாடகையில் பெற்றுக் எடுத்துக் கொள்ளலாம்.
சூரிய ஒளி பம்பு செட் திட்டம்
6 நிமிடம் முதல்வரை புகழ்ந்த அமைச்சர்.. கொதித்த திமுக எம்.எல்.ஏக்கள்.. எண்ட் கார்டு போட்ட சபாநாயகர்!
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய அமைச்சர், தனது உரையின் தொடக்கத்தில் உழவுத் தொழிலின் சிறப்புகளையும், முதலமைச்சரின் பெருமைகளையும் கவிதைகளாகவும், இலக்கிய மேற்கோள்களாகவும் அடுக்கிக் கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் அமைச்சர் கவிதை வாசிப்பதைத் தொடர்ந்து நீடித்ததால், "அறிக்கையை மட்டும் விரிவாகப் படியுங்கள்" என்று சபாநாயகர் குறுக்கிட்டு முடிவுக்குக் கொண்டுவந்த சுவாரசியமான சம்பவம் சட்டமன்றத்தில் அரங்கேறியது.
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026 LIVE: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அப்டேட்ஸ்!
திருக்குறள் வரிகளுடன் தொடக்கம்:
வேளாண் பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசத் தொடங்கிய அமைச்சர், திருக்குறளின் "உழுவார் உலகத்தார்க்கு ஆணி..." என்ற குறளையும், கவிச்சக்கரவர்த்தி கம்பரின் "உலகெல்லாம் ஒளிவிளங்கும் உழவர் உழும் உழவாலே..." என்ற வரிகளையும் மற்றும் அவ்வையாரின் பாடல் வரிகளையும் மேற்கோள் காட்டி உழவுத் தொழிலின் உன்னதத்தைப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
முதலமைச்சருக்கு புகழாரம்:
தொடர்ந்து முதலமைச்சரைப் போற்றிப் புகழ்ந்து அடுக்கடுக்கான கவிதை வரிகளை அமைச்சர் வாசித்தார். "பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயக முதல்வர் நீங்கள்! திரைமன்றங்களில் மட்டுமல்ல, சட்டமன்றத்திற்கும் நாயகன் நீங்கள்தான்!" "உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழலைக்களையெடுத்து மக்களாட்சி என்னும் மரத்தைப் பிடித்து நிற்கும் 'கோட் சூட் போட்ட விவசாயி' நீங்கள்!"
விசில் என்பது ஒளியல்ல, அது பாமரர்களின் மொழி... ஊரையெல்லாம் நாற்றமெடுத்த ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் ஒருவரும் இல்லை!. "இனி எப்போதும் தமிழ்நாட்டின் தலைப்புச் செய்தி ஒன்றில் நீங்கள் பேசுவதாக இருக்கும், இல்லை உங்களைப் பற்றிப் பேசுவதாக மட்டும்தான் இருக்கும்!"
இதையும் படிக்க: Tamil Nadu Agriculture Budget 2026: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்… விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன?
'எண்ட் கார்டு' போட்ட சபாநாயகர்:
Tamil Nadu Agriculture Budget 2026 : விவசாயிகளுக்கு அடித்தது ஜாக்பாட்.. ரூ.4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை..பட்ஜெட்டில் அறிவிப்பு!
தமிழக அரசின் 2026-2027- ஆம் ஆண்டுக்கான விவசாய நிதி நிலை அறிக்கை இன்று தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து விவசாய நலத்துறை அமைச்சர் வினோத் பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகள் உயிர்ம உர பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ரூ.4 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும். மேலும், மண்வளத்தை காப்பதற்காகவும், மண் புழுக்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காகவும் உயிர்ம உர பயன்பாட்டை விவசாயிகள் ஊக்குவிக்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதற்காக நிலையான வேளாண்மை மேம்படுத்துவோம் தரிசு நிலங்கள் மீட்டெடுக்கப்பட்டு மலைவேம்பு, செம்மரம் உள்ளிட்ட பொருளாதார மதிப்புமிக்க மரங்களை ஏக்கருக்கு 200 மரக்கன்றுகள் வீதம் நடவு செய்து வேளாண் காடுகள் உருவாக்கப்படும்.
விவசாயிகளுக்கு விதைகள் அளிக்கப்படும்
விவசாயிகள் சான்று விதைகளை பயன்படுத்துவதால் 25 சதவீதம் வரை மகசூலை அதிகரிக்க இயலும். இதனை நோக்கமாகக் கொண்டு தமிழ்நாடு மாநில விதைகள் மேம்பாட்டு முகமை மூலமாக அரசு விதை பண்ணைகள் விவசாய நிலங்களில் நெல், சிறுதானியங்கள், பயிர் வகைகள், எண்ணெய் வித்துகள், பருத்தி போன்ற பயிர்களுக்கு விதை பண்ணைகள் அமைத்து 43 ஆயிரம் சான்று விதைகள் ரூ. 250 கோடி தமிழ்நாடு மாநில விதை மேம்பாட்டு முகமையிலிருந்து கொள்முதல் செய்து விவசாயிகளுக்கு மத்திய மாநில அரசு திட்டங்களின் கீழ் விநியோகம் செய்யப்படும்.
ரூ. 7.35 கோடியில் காட்டு பன்றிகள் தடுப்பு நடவடிக்கை
இதன் மூலம் சுமார் 10 லட்சம் விவசாயிகள் பயனடைவார்கள். காட்டு பன்றிகள் சேத தடுப்பு திட்டத்தின் கீழ் வனவிலங்குகளில் இருந்து பயிர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனை தடுப்பதற்காக நவீன கருவிகள் மானிய விலையில் வழங்கப்படும். மேலும் இதற்கான திட்டம் ரூ.7.35 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளது.  காட்டுப் பன்றிகள் மட்டுமின்றி யானை உள்ளிட்ட விலங்குகளால் பயிர்களை சேதப்படுத்துவது தடுக்கப்படும்.
சீமை கருவேல மரங்கள் அகற்ற நடவடிக்கை
Tamil Nadu Agriculture Budget 2026: தமிழக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல்… விவசாயிகள் எதிர்பார்ப்பு என்ன?
ஆகஸ்ட் 6, 2026: தமிழகத்தில் 2026-27ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட் இன்று (ஆகஸ்ட் 6) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண்மைத் துறை அமைச்சர் வினோத், காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டப்பேரவை கூட்டத்தில் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். நேற்று (ஆகஸ்ட் 5) தமிழக அரசின் 2026-27ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அதன் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது. இருப்பினும், தேர்தல் வாக்குறுதிகளில் இடம்பெற்ற பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறாதது பொதுமக்களிடையே சற்று ஏமாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, விவசாயக் கடன் தொடர்பாக முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என விவசாயிகள் எதிர்நோக்கி உள்ளனர்.
வேளான் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள் என்ன?
நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, இன்று தாக்கல் செய்யப்படும் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகள் நலன் சார்ந்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீதமும், பெரிய விவசாயிகளுக்கு 50 சதவீதமும் பயிர்க் கடன் தள்ளுபடி அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது.
மேலும் படிக்க:  பட்ஜெட்டில் இடம்பெற்ற 8 ‘வெற்றி’ திட்டங்கள்… இதை கவனிச்சிங்களா?
மேலும், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் மற்றும் வேளாண் வணிகம் ஆகிய நான்கு துறைகளையும் ஒருங்கிணைக்கும் 'உழவர் தொடர்பு அலுவலர் திட்டம் 2.0' முழுவீச்சில் செயல்படுத்தப்பட வேண்டும் என்பது விவசாயிகளின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், விவசாயிகள் பல்வேறு அலுவலகங்களுக்கு தனித்தனியாகச் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர்கள் கருதுகின்றனர்.
விவசாயிகளின் எதிர்ப்பார்ப்பு என்ன்?
அதேபோல், நெல் குவிண்டாலுக்கு ரூ.3,500 ஆதார விலையும், கரும்பு டன்னுக்கு ரூ.4,500 ஆதார விலையும் நிர்ணயிக்க வேண்டும் என்றும், சந்தை விலை சரிவடையும் சூழலில் இழப்பை அரசே ஏற்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பால் உற்பத்தியாளர்களும் தங்களது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அதன்படி, எருமைப் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.60 ஆகவும், பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.50 ஆகவும் உயர்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் படிக்க: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்.. அறிவிப்புகள் எப்படி இருக்கும்?
மேலும், அனைத்து வகையான வேளாண் விளைபொருட்களையும் அரசு நேரடியாக கொள்முதல் செய்வதை கட்டாயமாக்கும் வகையில் தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
Tamil Nadu Budget 2026: பட்ஜெட்டில் இடம்பெற்ற 8 ‘வெற்றி’ திட்டங்கள்… இதை கவனிச்சிங்களா?
சென்னை, ஆகஸ்ட் 06: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026–2027ஆம் நிதியாண்டுக்கான மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் நேற்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மகளிர் நலன், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு பல முக்கியத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
மேலும் படிக்க: Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!
பட்ஜெட்டில் முத்திரை பதிக்கும் 8 'வெற்றி' திட்டங்கள்:
மாநிலத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தையும் பொருளாதாரத்தையும் உயர்த்தும் நோக்கோடு ‘வெற்றி’ என்ற பெயரில் 8 சிறப்புத் திட்டங்களை அரசு அறிவித்துள்ளது.
வெற்றி மடிக்கணினி திட்டம்: கல்லூரி மாணவர்களின் டிஜிட்டல் கற்றலை ஊக்குவிக்க இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டம்.
வெற்றி திறன் பயிற்சி திட்டம்: கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலையில்லா இளைஞர்களின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்த நவீன தொழிற்பயிற்சிகள்.
வெற்றி தமிழகம் தொலைநோக்கு திட்டம்: மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் தொழில்துறையையும் அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல உத்தி சார்ந்த நடவடிக்கை.
வெற்றி தொழில் முனைவோர் திட்டம்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமூகத்தினரை தொழிலதிபர்களாக மாற்ற சிறப்பு நிதியுதவி.
வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு திட்டம்: கைம்பெண்கள், ஆதரவற்ற பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 100% அரசு மானியத்தில் ஆடுகள் வழங்கி வாழ்வாதாரம் அளித்தல்.
வெற்றி வீடு திட்டம்: குறைந்த வருவாய் ஈட்டும் குடும்பங்கள் மற்றும் இளைஞர்களுக்கு எளிய முறையில் பாதுகாப்பான வீட்டு வசதி.
வெற்றி 150 திட்டம்: கிராமப்புற வேலை உறுதித் திட்டம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுச் செயல்பாடுகளை ஒருங்கிணைத்து வலுப்படுத்துதல்.
TN வெற்றி திட்டம்: கிராமப்புறங்களில் சாலைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்புகளைத் தரம் உயர்த்துதல் ஆகிய 8 வெற்றித் திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.
மேலும் படிக்க : சூரிய ஒளி மின் அமைப்புக்கு பொதுமக்களுக்கு ரூ.1 லட்சம் மானியம்.. பட்ஜெட்டில் வந்த சூப்பர் அறிவிப்பு!
சமூக நலன், மகளிர் மற்றும் சுகாதார மேம்பாடு:
அண்ணனின் சீர் திட்டம்: திருமணமாகும் தகுதியுள்ள பெண்களுக்கு 8 கிராம் (1 சவரன்) தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கீடு.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1 கிராம் தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கு  ரூ.560 கோடி ஒதுக்கீடு.
மக்கள் நல்வாழ்வுத் துறை: சுகாதாரத் துறைக்கு மொத்தம் ரூ.23,357 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Agriculture Budget 2026 Highlights: தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்.. என்னென்ன திட்டங்கள்?
TVK Government Tamil Nadu Agriculture Budget 2026 News Updates in Tamil:  ஆகஸ்ட் 6ம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார். வேளாண் துறையை பொருத்தவரை பல எதிர்பார்ப்புகள்  இருந்த நிலையில் இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.விவசாயம் சார்ந்த பல அறிவிப்புகளை அமைச்சர் வெளியிட்டார். ஆகஸ்ட் 06ம் தேதி காலை 9.30 மணிக்கு வேளாண் பட்ஜெட் தாக்கலானது . முன்னதாக நேற்று தவெக அரசு பொறுப்பேற்று கிட்டத்தட்ட 100 நாட்களை நெருங்கியுள்ள நிலையில் தங்களது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் 5ம் தேதி தாக்கல் செய்தனர். தவெகவின் முதல் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். சரியாக காலை 10 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கிய அமைச்சர் 12.31 மணிக்கு முடித்தார்.
வீடியோ
பட்ஜெட் தொடர்பான சில கேள்வி பதில்கள்
1. தமிழ்நாடு பட்ஜெட் என்றால் என்ன?
தமிழ்நாடு அரசின் ஓராண்டுக்கான வரவு-செலவுத் திட்டமே தமிழ்நாடு பட்ஜெட் ஆகும். இதில் அரசின் வருவாய், செலவுகள், புதிய திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன.
2. வேளாண் பட்ஜெட் என்றால் என்ன?
விவசாயம், பாசனம், கால்நடை, மீன்வளம், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக தனியாக தாக்கல் செய்யப்படும் நிதித் திட்டமே வேளாண் பட்ஜெட்.
3. தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரங்களை எங்கு பார்க்கலாம்?
தமிழக பட்ஜெட்.. “Blast Blast” இல்ல “Waste Waste”… மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம்!
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று புதன்கிழமை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் குறித்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்த வகையில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதல்வருமான மு. க. ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தமிழக பட்ஜெட் ரீல்ஸ் சி. எம்.- க்கு புரியும் மொழியில் சொல்ல வேண்டும் என்றால் BLAST BLAST- ஆக இருக்கும் என எதிர்பார்த்த மக்களுக்கு WASTE WASTE- என சொல்லும் படி தான் உள்ளது. அது மட்டும் இன்றி திராவிட முன்னேற்ற கழக அரசின் திட்டங்களின் ரீமேக் வெர்ஷன் பட்ஜெட் ஆகவும் உள்ளது.
பட்ஜெட்டில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவுமில்லை
இதனை மக்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால், விவசாயிகளின் பிரச்சனை, மின் கட்டண குளறுபடி பிரச்சனை, விலைவாசி உயர்வு பிரச்சினை என எவை பற்றியும் கவலைப்படாமல் தமிழகத்துக்கு தேவையான புதிய தொலைநோக்குத் திட்டங்களை அறிவிக்காத பட்ஜெட்டாக உள்ளது. அது மட்டும் இன்றி மகளிருக்கான ரூ.2,500 உரிமைத் தொகை, வேலை இல்லாத இளைஞர்களுக்கு ரூ.4 ஆயிரம், ஓராண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள், விவசாயிகளுக்கு முழு பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகள் எதை பற்றியும் பட்ஜெட்டில் மூச்சு விடவில்லை.
மேலும் படிக்க: Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!
தவெக அரசின் பட்ஜெட்டுக்கு பூஜ்ஜியம் மார்க்
மொத்தத்தில் சொந்தமாகவும் யோசிக்காத மற்றும் சொன்னதை எதையும் செய்யாத, சுரத்தில்லாத- புஸ்வான பட்ஜெட் ஆகவே ரீல்ஸ் அரசின் முதல் பட்ஜெட் அமைந்துள்ளது இன்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதே போல, பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பின்னர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறுகையில்: தமிழக வெற்றிக் கழக அரசுக்கும், இன்று வெளியான பட்ஜெட்டுக்கும் மிகப்பெரிய பூஜ்ஜியம் மார்க் கொடுக்கலாம்.
வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவர்
தமிழக வெற்றிக் கழக அரசின் வாக்குறுதிகளை எப்போது நிறைவேற்றுவார்கள் என்று தகவல் இல்லை. மாற்றம் மாற்றம் எனக் கூறும் தமிழக வெற்றிக் கழக அரசு திமுக அரசு கொண்டு வந்த திட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்து, ஸ்டிக்கர் ஒட்டி உள்ளது. திமுக கொண்டு வந்த திட்டத்திற்கு பெயரை மாற்றுவதற்கு எதற்காக அதிகாரிகளுடன் ஆலோசனை செய்தார்கள் என்று தெரியவில்லை. தேர்தல் வாக்குறுதியில் சொன்ன எதுவுமே பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்று தெரிவித்தார்.
ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் – கோவையில் தொழில்துறையினர் கருத்து
சென்னை, ஆகஸ்ட் 5 : தமிழக வெற்றிக்கழகம் சமர்பித்துள்ள முதல் பட்ஜெட், தொழில்துறையினருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லாததால் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்டாக அமைந்துள்ளதாக ரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆகஸ்ட் 5, 2026 இன்று புதியதாக ஆட்சியமைத்துள்ள தவெக அரசின் பட்ஜெட் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதில் பல அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட்
இந்த நிலையில் தமிழக பட்ஜெட் குறித்து கோவையில் தொழில் துறையினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இது குறித்து இரயில்வே உற்பத்தியாளர் நல சங்கத்தின் தலைவர் சுருளிவேல் செய்தியாளர்களிடம் கூறியதாவது. தமிழக அரசு முதல் முறை தாக்கல் செய்துள்ள பட்ஜெட் எங்களுக்கு முழுக்க ஏமாற்றத்தை அளிப்பதாகவும், அரசிடம் நாங்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருந்தோம். மின் கட்டணத்தில் நிலை கட்டணத்தை குறைக்க வேண்டும் என, தமிழக முதல்வரை கடந்த வாரம், சந்தித்து மனு அளித்துள்ளோம். எதாவது ஒரு கோரிக்கையை மட்டும் முன் வையுங்கள் என்று முதல் கூறினார். அப்பொழுது கூட நிலை கட்டனத்தை, பாதியாக குறைக்க தெரிவித்தோம். இது சம்பந்தமாக உரிய பரிசீலனை நடத்தி நல்ல அறிவிப்பு வெளியிடுவதாக முதல்வர் எங்களிடம் கூறினார். ஆனால் அது குறித்து தற்போது எந்த அறிவிப்பும் அவர் வெளியிடாதது முழு ஏமாற்றத்தை அளிக்கின்றது என்று தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், இதன் பின்னால் ஏதேனும் அறிவிப்பு வருமா என்பது எங்களுக்கு தெரியவில்லை. நிலை கட்டணத்தை பாதியாக குறைத்தால் மட்டுமே குறுந்தொழிலுக்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் ஐந்து புதிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது, அவை அனைத்தும் சிப்காட் மூலமாக துவங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்,
அந்த ஐந்து தொழில்பேட்டைகளிலும் குறுந்தொழிலுக்கு என்று சலுகை விலையில் பல்வேறு திட்டங்கள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும், அதற்கான அறிவிப்பும் பின்னால் வரும் என்று எதிர்பார்ப்பும் தொழில்துறையினருக்கு உள்ளதாக தெரிவித்தார். புதியதாக தொழில் கொள்கைகள் என்ற ஒரு திட்டத்தை தெரிவித்துள்ளனர், அந்த கொள்கையில் குறுந்தொழில்களுக்கு என்று ஒரு சில கொள்கைகள் கொண்டு வர வேண்டும் என்றும், இது குறித்து எங்களிடம் உரிய பேச்சு வார்த்தை நடத்தி, அதில் உள்ள இடையூறுகள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்கள், தெரிந்து பின்னர் அது குறித்து அறிவிப்பை வெளியிட வேண்டும் இதற்கான கருத்துக்கணிப்பு கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,
குறுந்தொழில் முனைவோர்களுக்கு வட்டி மானியம் தர வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும், கடந்த காலங்களில் மாவட்ட தொழில் மையத்தில் 6 விழுக்காடுகள் வரை தொழில் மானியம் வழங்கிவந்த நிலையில் தற்போது 12 சதவீதம் வழங்கப்பட்டு வருகின்றது. எனவே பழைய திட்டத்தின் கீழ் மீண்டும் தொழில் தொல்லையினருக்கு ஆறு சதவீத வட்டி மானியத்தில் கடன் உதவி வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அப்படி தொடரும் பட்சத்தில் பல்வேறு புதிய தொழிற்சாலைகள், உருவாக வாய்ப்பு ஏற்படும் என்று கூறியவர், தொழில் துறைக்கு கடந்த பட்ஜெட்டின் பொழுது வழங்கப்பட வேண்டிய கடன் தொகை 100 கோடிக்கு மேல் நிலுவையில், இருந்து வருகின்றது, மீதமுள்ள 258 கோடி மட்டுமே தமிழகத்தால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திற்க்கு தொழில் துறையினருக்கு கூடுதலாக மேலும் தேவைப்படும் என்று தெரிவித்தார். தமிழகத்தில் புதிய புதிய தொழில்கள் உருவாக்கினால் மட்டுமே தமிழகத்தின் தேவைகளுக்கு ஏற்ப உற்பத்தி பெருகும் என்று கூறியவர், முதலீட்டு மானியங்களை தமிழக அரசு தர முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அரசுகள் தொழில் துறையினருக்கு பல்வேறு மானியங்களை வழங்கி வருகின்றது, அதேபோல் தமிழகத்திலும் அரசு வழங்க முன் வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை?
தற்போது அறிவிக்க பட்ட பட்ஜெட் ஓரளவிற்கு வரவேற்பதாக இருந்தாலும், இன்னும் கூடுதல் திட்டங்களை அறிவித்திருக்கலாமோ என்ற எதிர்பார்ப்பும் உள்ளது என்றார். புதியதாக ஆட்சி அமைத்துள்ள அரசு என்பதால் இத்தகைய பட்ஜெட் குறித்த விமர்சனங்களை வைக்க முடியாமல் இருந்தாலும் இனி வரும் காலங்களில் கூடுதலாக திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
தமிழக வெற்றி கழகம் தங்களது தேர்தல் அறிக்கையில் தொழில்துறையினர் சந்தித்து வருகின்ற நிலை கட்டணத்தை பாதியாக குறைப்பதாக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்திருந்தனர், ஆனாலும் அது பற்றி எந்த அறிவிப்பும் வெளியிடாதது வருத்தமளிக்கிறது என்று தெரிவித்தார். இதே நிலை கட்டணம் தொடர்ந்தால் தமிழகத்தில் சிறு தொழில் நிறுவனங்கள் தங்களது உற்பத்தியை திறனை இழக்கக்கூடும், இதனால் தொழிற்சாலைகள் மூடப்படும் நிலை ஏற்படும். தொழில் துறையினர் பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளாக கூடும் என்று எச்சரித்துள்ளார்.
Tamil Nadu Budget 2026 Update: தமிழ்நாடு பட்ஜெட் அறிக்கையை தமிழில் பதிவிறக்கம் செய்வது எப்படி?
சென்னை, ஆகஸ்ட் 05: தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2026–2027ஆம் நிதியாண்டுக்கான மாநில அரசின் வரவு செலவுத் திட்டம் இன்று முறைப்படி தாக்கல் செய்யப்பட்டது. நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் இந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, கல்வி, மகளிர் நலன், கட்டமைப்பு மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை மையமாகக் கொண்டு பல முக்கியத் திட்டங்களும் நிதி ஒதுக்கீடுகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 LIVE Updates: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!
இலவச மின்சாரம் 200 யூனிட்டாக உயர்வு:
முதலமைச்சரின் அறிவிப்பிற்கு இணங்க, இரு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீட்டு நுகர்வோருக்கு வழங்கப்படும் விலையில்லா மின்சாரம் உயர்த்தப்பட்டுள்ளது. 100-லிருந்து 200 யூனிட்டாக உயர்வு: விலையில்லா மின்சாரத்தின் அளவு 100 யூனிட்டிலிருந்து 200 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக இத்திருத்த வரவு செலவுத் திட்டத்தில் ரூ. 1,545 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வீட்டு உபயோக நுகர்வோர் மற்றும் விவசாயிகளுக்கான மின் மானியத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ. 18,860 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் TANGEDCO இழப்பீட்டு நிதியாக ரூ. 5,000 கோடி வழங்கப்படுகிறது.
பட்ஜெட் 2026 அறிக்கையை பதிவிறக்கம் செய்வது எப்படி?
2026–2027ஆம் நிதியாண்டுக்கான முழு பட்ஜெட் உரை, கொள்கை விளக்கக் குறிப்புகள் மற்றும் நிதி ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ தரவுகளைப் பொதுமக்கள் மற்றும் ஆய்வாளர்கள் எளிதாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழ்நாடு அரசு நிதித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://financedept.tn.gov.in/ மூலம் இதனைப் பெறலாம்.
1.அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்:உங்கள் உலாவியில் (Browser) https://financedept.tn.gov.in/ என்ற முகவரியைத் திறந்து, தமிழ்நாடு அரசின் நிதித் துறை முகப்புப் பக்கத்திற்குச் செல்லவும்.
2. பட்ஜெட் பிரிவைத் தேர்வு செய்யவும்:முகப்புப் பக்கத்தில் உள்ள "Budget என்ற பட்டனை கிளிக் செய்யவும்.
3. அதில், பட்ஜெட் Speech என்பதை தேர்வு செய்து,பட்ஜெட் ஆவணங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் கிடைக்கும். அதில் "Budget Speech in Tamil (தமிழ் பட்ஜெட் உரை)" என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
4. PDF பதிவிறக்கம் செய்யவும்:இணைப்பைச் சொடுக்கியதும் முழு பட்ஜெட் அறிக்கை PDF வடிவில் திரையில் தோன்றும். அதனைப் பதிவிறக்கம் (Download) செய்து சேமித்துக் கொள்ளலாம்.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் செப்.8 வரை நடைபெறும்.. சபாநாயகர் அறிவிப்பு!
தமிழக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) தாக்கல் செய்தார். சுமார் 2.5 மணி நேரம் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற நிலையில், கூட்டத்தை நாளை காலை 10 மணி வரை ஒத்திவைத்து சபாநாயகர் ஜே. சி. டி. உத்தரவிட்டார். இதை தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் அமைதியாக முறையில் நடைபெற்றதற்கு அனைத்து எம்எல்ஏக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வேளாண்மை துறையின் திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை நாளை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன. முன்னதாக இன்று காலை அலுவல் ஆய்வு குழு கூட்டம் நடைபெற்றது. இதில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
அதன்படி, தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை மற்றும் வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான பொது விவாதம் மற்றும் பதிவு சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு, துறை வாரியான மானிய கோரிக்கைகள் பேரவையில் முன்மொழிபட்டு, அதன் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்புகள் தொடர்பான முடிவுகள் எடுக்கப்பட்டிருந்தன.
6- ஆம் தேதி வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்.
7- ஆம் தேதி மறைந்த முன்னாள் எம்எல்ஏக்கள், திரை பிரபலங்களுக்கு இரங்கல் குறிப்பு.
8 மற்றும் 9- ஆம் தேதி சட்டப்பேரவை விடுமுறை.
10- ஆம் தேதி திருத்திய நிதிநிலை அறிக்கை மற்றும் திருத்திய வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம்.
11- ஆம் தேதி பொது விவாதம் தொடரும்.
12- ஆம் தேதி பொது விவாதம் மற்றும் பதிலுரை.
13- ஆம் தேதி முதல் துறை ரீதியான மானிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு அந்த கோரிக்கைகள் அனைத்தும் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொள்ளப்படும். அதன்படி, ஒவ்வொரு நாளும் பேரவை காலை 9:30 மணிக்கு கூடும்.
இதனிடையே, சுதந்திர தினம் வருவதால் 13, 14, 15 ஆகிய தினங்கள் பேரவை நிகழ்வு கிடையாது. அதன்படி செப்டம்பர் 8- ஆம் தேதி வரை தமிழக சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெறும்.
டிஜிட்டல் தமிழ்நாடு 2.0.. வாட்ஸ்அப்பில் 275 அரசுச் சேவைகள்.. இ-சேவை 2.0 திட்டம் அறிமுகம்.. பட்ஜெட்டில் மெகா அறிவிப்புகள்!
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் 2026–2027ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், தமிழ்நாட்டை தொழில்நுட்பச் சக்தியாக மாற்றும் நோக்கில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) துறைக்கு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்த வரவு செலவுத் திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்காக ஒட்டுமொத்தமாக ரூ.398 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஈ-சேவை 2.0' & வாட்ஸ்அப்பில் 275 சேவைகள்: பொதுமக்களுக்கு அரசுச் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில் டிஜிட்டல் கட்டமைப்பு தரம் உயர்த்தப்படுகிறது. மாநிலம் முழுவதும் செயல்பட்டு வரும் அனைத்து ஈ-சேவை மையங்களும் அதிவேக இணைய இணைப்பு மற்றும் கூடுதல் மக்கள் நலச் சேவைகளுடன் 'ஈ-சேவை 2.0' மையங்களாக மேம்படுத்தப்படும். தற்போது 20 துறைகளின் 76 சேவைகளை வழங்கி வரும் 'நம்ம அரசு' WhatsApp Chatbot வசதியானது, இனி 275 அரசு சேவைகளை வழங்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.
மாநிலத்தின் நிர்வாகச் செயல்பாடுகளை விரைவுபடுத்தவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும் தொழில்நுட்பத் துறையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சுகாதாரம், விவசாயம், கல்வி, குடிமக்கள் சேவைகள், நகர்ப்புற நிர்வாகம் மற்றும் சமூக நலன் ஆகிய முக்கியத் துறைகளில் செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த முன்முயற்சிகள் தீவிரப்படுத்தப்படும்.
ஸ்மார்ட் மீட்டர்கள்: சென்னை மாநகரில் உள்ள அனைத்து நுகர்வோர்களுக்கும், மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் வணிக நுகர்வோர்களுக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் பொருத்தப்படும். பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்துடன் இணைந்து 'புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் வீடுகளின் கூரையில் சோலார் பேனல் பொருத்தும் நுகர்வோருக்கு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
20,000 EV சார்ஜிங் நிலையங்கள்: பொது மற்றும் தனியார் பங்களிப்புடன் அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். அடுக்குமாடி குடியிருப்பு நலச் சங்கங்கள் அமைக்கும் EV சார்ஜிங் நிலையங்களுக்கும் அரசு மானியம் வழங்கும். பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்துடன் இணைந்து 'புதிய வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் கீழ் வீடுகளின் கூரையில் சோலார் பேனல் பொருத்தும் நுகர்வோருக்கு அரசு சார்பில் ரூ. 1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். இதற்காக ரூ. 50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Budget 2026: சென்னையில் 3 புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிப்பு; விரைவில் திட்ட அறிக்கை.. பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..
ஆகஸ்ட் 5, 2026: 2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள் மற்றும் புதிய வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. பள்ளிக்கல்வி, உயர்கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னையில் மெட்ரோ ரயில் சேவையை மேலும் விரிவுபடுத்தும் திட்டமும் முக்கிய இடம் பெற்றுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் - 3 புதிய வழித்தடம்:
அதன்படி, சென்னை மெட்ரோ ரயில் சேவையை மூன்று புதிய வழித்தடங்களில் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) விரைவில் தயாரிக்கப்படும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதிலும், விரைவான மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதிலும் மெட்ரோ ரயில் சேவை முக்கிய பங்காற்றி வருகிறது. தினமும் லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் நீண்ட தூர பயணிகள் மெட்ரோ ரயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது சென்னையில் நீல வழித்தடம் (Blue Line) மற்றும் பச்சை வழித்தடம் (Green Line) ஆகிய இரண்டு வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. மேலும், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை விரைவாக நிறைவு செய்ய அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!
முக்கியத்துவம் என்ன ?
இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மூன்று புதிய வழித்தடங்களுக்கான திட்ட அறிக்கைகளை தயாரித்து அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட உள்ளது. இந்த வழித்தடம் செயல்பாட்டுக்கு வந்தால், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகள் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை விரைவாகவும், போக்குவரத்து நெரிசல் இன்றியும் சென்றடைய முடியும்.
இதேபோல், கோயம்பேடு முதல் ஆவடி வழியாக பட்டாபிராம் வரை புதிய மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட உள்ளது. இது மேற்கு சென்னை, ஆவடி மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் வசிக்கும் மக்களின் நீண்டகால போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: சென்னை கூவத்தில் படகு சவாரி.. சுத்தப்படுத்த சர்வதேச டெண்டர்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
மேலும், பூந்தமல்லி முதல் ஸ்ரீபெரும்புதூர் வழியாக சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழித்தடம் ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றியுள்ள தொழிற்பேட்டைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் எதிர்காலத்தில் அமையவுள்ள பரந்தூர் பசுமை விமான நிலையத்துடன் இணைப்பை மேம்படுத்தும் முக்கிய திட்டமாக கருதப்படுகிறது.
தவெக அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை.. எடப்பாடி கடும் விமர்சனம்!
தமிழக அரசின் நிகழாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இதில், பல்வேறு அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கான நதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு இருந்தார். இந்த பட்ஜெட் தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: காவிரி தீர்ப்பை இவர்களால் காப்பாற்ற முடியுமா. கடனை அடைக்காமல் புதிய திட்டத்திற்கு எப்படி நிதி ஒதுக்கீடு செய்ய முடியும். நிதி கசிவு இருக்கிறது என்கிறார்கள். கடந்த திமுக ஆட்சியிலும் இதயத்தையும் சொன்னார்கள் இப்போதும் இதையே சொல்கிறார்கள். தமிழக வெற்றிக்கழக அரசின் பெரும்பாலான வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை ரூல்ஸ் வெளியிடுவதை அவர்களுக்கு வேலையாக உள்ளது மகளிர் உரிமைத் தொகை பயிர் கடன் ரத்து விலையில்லா சிலிண்டர் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெறவில்லை.
தமிழகத்தின் கடன் சுமையை குறைக்க வேண்டும்
தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமைந்த குறுகிய காலத்தில் ரூ.20,000 கோடி கடன் வாங்கி இருக்கிறார்கள். ரூ.10.98 லட்சம் கோடி கடனை எப்படி அடைக்கப் போகிறார்கள். நிதி ஆதாரத்தை பெருக்குவதற்கு குழு அமைத்தால் போதாது. தாலிக்கு தங்கம், விலையில்லா கறவை மாடுகள் போன்ற திட்டங்கள் அதிமுகவின் திட்டங்கள் என்று தெரிவித்தார். இதே போல, தேமுதிக பொது செயலாளர், எம்எல்ஏவும் ஆன பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது: புதிய தொழிற்சாலைகள் குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் எதுவும் இல்லை. முழு பயிர் கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பும் இல்லை. 10 லட்சம் கோடிக்கு மேல் தமிழகம் கடனில் இருப்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன்.
மின்சார பேருந்து இயக்கம் வரவேற்கத்தக்கது
சென்னை கூவத்தில் படகு சவாரி.. சுத்தப்படுத்த சர்வதேச டெண்டர்.. அமைச்சர் சொன்ன ஹேப்பி நியூஸ்!
சென்னை, ஆகஸ்ட் 05: தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் 2026–2027ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், சென்னை பெருநகரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் நகர்ப்புற பகுதிகளை உலகத் தரத்திற்கு உயர்த்தும் வகையில் 'முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்' அறிவிக்கப்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ள இப் புதிய பெருந்திட்டத்திற்காக நடப்பு நிதியாண்டில் ரூ. 2,117 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 LIVE Updates: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!
நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டம்:
2031-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் நகரங்கள் எவ்வாறு இயங்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இத்திட்டத்தின் கீழ் முக்கிய அம்சங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அதன்படி, குடிநீர் வழங்கல் மற்றும் நிலத்தடி கழிவுநீர் வடிகால் அமைப்பு, ஒருங்கிணைந்த திடக் கழிவு மேலாண்மை, நகர்ப்புற நீர்நிலைகளின் பாதுகாப்பு மற்றும் பசுமைப் பரப்பு விரிவாக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு, செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த மின்-ஆளுமை மற்றும் பொது சுகாதார மேம்பாடு ஆகிய திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
கூவம், அடையாறு சீரமைப்புக்குச் 'சர்வதேச டெண்டர்':
வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை நகரத்தின் குடிநீர் ஆதாரங்களாக இருந்த கூவம் மற்றும் அடையாறு ஆறுகள் கழிவுநீர் நதிகளாக மாறியிருப்பது வேதனையளிப்பதாகத் தெரிவித்த நிதி அமைச்சர், அதை மீட்டெடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்கும் என்றார். தென்கொரியாவின் சியோல் நகரில் உள்ள 'செங்ஜியான்' நதி மற்றும் சிங்கப்பூரின் 'கலாங்' நதி ஆகியவை மறுசீரமைக்கப்பட்டு உலக அளவில் புகழ்பெற்ற அடையாளங்களாக மாறியதைப் போல கூவமும் அடையாறும் மாற்றப்படும்.
கூவம் மற்றும் அடையாறு ஆறுகளைச் சிங்கப்பூர், சியோல் நதிகளின் பாணியில் சென்னையின் பெருமைமிகு அடையாளமாக மாற்றச் சர்வதேச அளவில் டெண்டர் கோரப்படும். இத்திட்டத்திற்கான விரைவு சாத்தியக்கூறு அறிக்கை மற்றும் விரிவான திட்ட அறிக்கை உடனே தயார் செய்யப்படும். கூவம் மற்றும் அடையாற்றில் பொதுமக்கள் படகு சவாரி செய்வதையும், நதிக்கரைகளில் உடற்பயிற்சி கூடம், நடைபாதை மற்றும் தூய்மையான காற்றை சுவாசிக்கும் சூழலையும் த.வெ.க அரசு உறுதி செய்யும் என்றார்.
ரூ.3,108 கோடியில் 'ரிங் மெயின்' குடிநீர் திட்டம்:
சென்னை மாநகரம் முழுமைக்கும் தடையற்ற மற்றும் சீரான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், சென்னையின் அனைத்து முக்கியக் குடிநீர் ஆதாரங்களையும், குடிநீர் விநியோக நிலையங்களுடன் இணைக்கும் 'ரிங் மெயின் பைப்லைன் சிஸ்டம்' திட்டம் ரூ. 3,108 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது. 2030–31 ஆம் ஆண்டுக்குள் இத்திட்டம் முழுமையாக நிறைவடையும் போது சென்னை மாநகரம் முழுவதும் அனைத்துப் பகுதிகளுக்கும் சமமான மற்றும் சீரான குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
20 இடங்களில் 'ஸ்மார்ட் பார்க்கிங்':
நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை: சென்னை பெருநகர மாநகராட்சி, சென்னை காவல்துறை மற்றும் போக்குவரத்து கழகத்துடன் இணைந்து நுண்ணறிவுப் போக்குவரத்து மேலாண்மை அமைப்பை இறுதி கட்டத்தில் செயல்படுத்தி வருகிறது. வாகன நெரிசலைக் குறைக்க சென்னையின் முக்கிய 20 இடங்களில் 'ஸ்மார்ட் பார்க்கிங் மேலாண்மை' அமைக்கப்படும். அம்பத்தூர் மற்றும் கிண்டி தொழில்துறை எஸ்டேட்டுகளின் (Industrial Estates) உட்புறச் சாலைகள் முற்றிலும் புனரமைக்கப்படும்.
வெள்ளத் தடுப்பு, பசுமை சென்னை & நவீன வீதிகள்:
சென்னையில் வெள்ள பாதிப்புகளைத் தடுக்க முக்கிய நீர்வழித் தடங்களின் கொள்ளளவை அதிகரிக்கும் வகையில், வெள்ளத் தடுப்புச் சுவர்களின் உயரம் உயர்த்தப்பட்டு சங்கிலி இணைப்பு வேலிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. குடியிருப்பு பகுதிகள், முக்கிய வழித்தடங்கள் மற்றும் நடைபாதைகள் அழகுபடுத்தப்பட்டுப் பசுமையாக்கப்படும்.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
Tamil Nadu State Budget : அரசு ஊழியர்கள் மருத்துவ காப்பீட்டில் சூப்பர் அறிவிப்பு… நிதித்துறை அமைச்சர் தகவல்!
தமிழக அரசின் நிகழ் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) தாக்கல் செய்தார். இதில், அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுவதாக அறிவித்தார். இதில் அடிப்படை காப்பீடாக ரூபாய் 5 லட்சத்திலிருந்து ரூபாய் 7.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூபாய் 12 லட்சம் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது அறிய வகை நோய்களுக்கு ரூபாய் 15 லட்சம் வரை நிதி உதவி வழங்கப்படும் 292 சிகிச்சைகள் மற்றும் 1535 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளுக்கு ரூபாய் 838 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை அமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை
இதே போல, மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு 1285 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் சிறப்பு பணி குழு எல்லை சோதனை சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. புதுக்கோட்டை மற்றும் பெரம்பலூரில் கிரானைட் பாலிசி வடிவமைப்புகள் மையங்கள் நிறுவப்பட உள்ளன. இயற்கை வளங்கள் துறைக்கு மொத்தம் ரூ. 438 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வு கால நன்மைகளுக்கு ரூ. 47 ஆயிரத்து 240 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம்
மேலும், அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. நீதி மற்றும் நிர்வாக துறை ரூ. 2,456 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பிராட்வேயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு ரூ. 1,375 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு 160 நீதிமன்றங்களுடன் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்கப்பட உள்ளது.
காயிதே மில்லத் விருது
தமிழகத்தில் 200 சிறந்த கலை குழுக்களுக்கு ஆண்டுதோறும் 300 நாட்கள் நிகழ்ச்சி நடத்த வாய்ப்பு வழங்கப்படும். ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாள் அன்று காயிதே மில்லத் விருது வழங்கப்படும். 300 திருக்குறள் ஒப்புவிக்கும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும். இந்து சமய அறநிலையத்துறைக்கு ரூ. 28 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
3 ஆயிரம் கோயில்களில் திருப்பணி - குடமுழுக்கு
Marie Wilson Speech TN Budget 2026 LIVE : தமிழ்நாடு பட்ஜெட்.. அமைச்சர் மரிய வில்சன் உரை!
Tamil Nadu Budget 2026 : தமிழக பட்ஜெட்டில் டாப் அறிவிப்புகள் என்னென்ன… முழு விவரம் உள்ளே!
தமிழக அரசின் 2026- 2027 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை அமைச்சர் மரிய வில்சன் இன்று தாக்கல் செய்தார். இதில், பல்வேறு வகையான அறிவிப்புகள் மற்றும் திட்டங்களுக்கு நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதில், அமைச்சர் மரிய வில்சன் அறிவித்த அறிவிப்புகளில் டாப் அறிவிப்புகள் எவை என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம். தமிழகத்தில் பெண்கள் அனைவரையும் தன் குடும்பத்தில் ஒருவராக கருதி அவர்களுக்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப்புடவை வழங்கப்பட உள்ளது இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளின் ஆரம்ப கால பராமரிப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்வதற்காக மாநிலம் முழுவதும் 500 அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட உள்ளன.
டிஜிட்டல் மாற்றத்துக்காக தமிழகத்தை அதிநவீன மாநிலமாக மாற்றும் முயற்சியின் கீழ் பள்ளி கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 8393 கோடியில் வெற்றி மணிக்கணினி திட்டம் தொழில்நுட்ப திறனை உயர்த்த ரூபாய் 2000 கோடியில் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.
உலக தரத்திலான செயற்கை நுண்ணறிவு பாடத்திட்டத்தை வடிவமைப்பதற்காக கல்வியாளர்கள், தொழில் முறை முன்னோடிகள் அடங்கிய நிபுணர் குழு அமைக்கப்படும். பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு ஏ ஐ திறன் பயிற்சி வழங்கப்பட உள்ளது.
ரூ. 90 கோடியில் 5 புதிய தொழில் பயிற்சி நிலையங்கள். சட்டக் கல்வியே மேம்படுத்துவதற்காக புதிய சிறப்பு அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. 10 ஆயிரம் பள்ளிகளில் சூப்பர் கிளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளன. இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ. 1,051 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ரூ.50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் ரூ. 42 கோடியில் கிராமிய விளையாட்டு போட்டிகளை ஊக்கப்படுத்து திட்டம் விளையாட்டு வீரர்களுக்கு வீரர்களுக்கான நிதி உதவியே அதிகரிப்பதற்காக ரூ.22 கோடி ஒதுக்கீடு.
சமூகநீதித்துறைக்கு ரூ. 3937 கோடி நிதி ஒதுக்கீடு. அயோத்திதாச பண்டிதர் வாழ்விட மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 300 கோடி ஒதுக்கீடு. ஆகியவை டாப் அறிவிப்புகளாக உள்ளன.
Tamil Nadu Budget: திருமணத்திற்கு 8 கிராம் தங்கம் & பட்டுப் புடவை.. ‘அண்ணனின் சீர்’.. பட்ஜெட்டில் மகளிருக்கு சர்ப்ரைஸ் அறிவிப்பு!!!
சென்னை, ஆகஸ்ட் 05: முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் நிதிநிலை அறிக்கையில் மகளிர் நலன், பள்ளி மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கான பல்வேறு சிறப்புச் சலுகைகளும் திட்டங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. நிதி அமைச்சர் என். மரிய வில்சன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில், பெண்களின் திருமணம் மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையிலான முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 LIVE Updates: பட்ஜெட்டை தாக்கல் செய்யும் அமைச்சர்.. அறிவிப்புகள் விவரம்!
திருமணத்திற்கு 8 கிராம் தங்க நாணயம் மற்றும் பட்டுப் புடவை:
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பெண்களுக்கும் அண்ணனாகவும் தம்பியாகவும் இருந்து முதலமைச்சர் உறுதுணையாக நிற்பதாகத் தெரிவித்த நிதி அமைச்சர், திருமணத்தை மேலும் மகிழ்ச்சியாக்கும் வகையில் புதிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள பெண்கள் அனைவருக்கும் அவர்களின் திருமண நாளன்று அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயமும் (1 சவரன்) மற்றும் ஒரு பட்டுப் புடவையும் ‘அண்ணனின் சீராக’ வழங்கப்படும். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக திருத்திய வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில் ரூ. 812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
காமராஜர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்:
கல்விப் புரட்சி தந்த பெருந்தலைவர் காமராஜரின் பெயரில் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்திற்கு 'பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்' எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம்: அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படுகிறது. தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் நாள் முதல் இத்திட்டம் அமலுக்கு வருகிறது. இதன் மூலம் கூடுதலாக 15,414 பள்ளிகளைச் சேர்ந்த 15.14 லட்சம் மாணவர்கள் பயனடைவர். இத்திட்டத்திற்காக ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வசதிகள்:
முதியோரின் கண்ணியமான மற்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை உறுதி செய்யும் வகையில், முதற்கட்டமாக 12 மாவட்டங்களில் 12 நவீன முதியோர் இல்லங்கள் அமைக்கப்படும். ஒவ்வொரு இல்லத்திலும் 40 பயனாளிகள் தங்கும் வசதி மற்றும் மருத்துவப் பராமரிப்பாளர்கள் நியமிக்கப்படுவர். இதற்காக ரூ. 6.66 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
Tamil Nadu Budget 2026: பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.44,527 கோடி நிதி ஒதுக்கீடு.. துறை வாரியான முழு நிதி ஒதுக்கீடு விவரம்!!
சென்னை, ஆகஸ்ட் 05: தமிழகத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) அரசின் முதலாவது முழுமையான நிதிநிலை அறிக்கையை (2026–2027) நிதித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். கல்வி, சமூக நலன், இளைஞர் நலன் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட்டில் பல்வேறு துறை சார்ந்த நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
பள்ளிக் கல்வித்துறை நிதி ஒதுக்கீடு விவரம்:
மாநிலத்தின் மிக முக்கியத் துறையான பள்ளிக் கல்வித்துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ. 44,527 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2025–2026 ஆம் நிதியாண்டில் பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 46,767 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், நடப்பு 2026–2027 ஆம் நிதியாண்டு பட்ஜெட்டில் ரூ. 44,527 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பள்ளிக் கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் ரூ. 2,240 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கியத் துறைகள் வாரியாக நிதி ஒதுக்கீடு:
சிறப்புத் திட்டச் செயல்பாட்டுத் துறை ரூ.17,150 கோடி, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை ரூ.9,819 கோடி, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை ரூ.2,022 கோடி, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலன் ரூ.1,700 கோடி, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ரூ.1,485 கோடி, விளையாட்டுத் துறை ரூ.1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கல்வி மற்றும் மாணவர் நலச் சிறப்புத் திட்டங்கள்:
பள்ளிக் கல்வி மற்றும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு நவீனத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்: பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் இத்திட்டத்திற்கு ரூ. 560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த ரூ. 300 கோடி, மாணவர்களின் திறனை உயர்த்தும் வெற்றிப் பயிற்சித் திட்டத்திற்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: Tamil Nadu Budget 2026: மாணவர்களுக்கு நவீன மிதிவண்டிகள்.. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பு..
Tamil Nadu Animal Husbandry Department Budget 2026 : கால்நடை காப்போம் திட்டத்திற்கு ரூ.31 கோடி ஒதுக்கீடு… அமைச்சர் சூப்பர் அறிவிப்பு!
தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று புதன் கிழமை தொடங்கியது. இதில், நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் பல்வேறு துறைகளுக்கு நிதிகளை ஒதுக்கீடு செய்து அறிவித்தார். இதில், கால்நடை துறைக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அவர் தனது பட்ஜெட் உரையில் குறிப்பிட்டார். அதன்படி,கால்நடை காப்போம் திட்டத்திற்கு ரூ. 31 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் நல்வாழ்வு துறைக்கு ரூ. 23 ஆயிரத்து 357 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ. 122 கோடியில் கால்நடை மருத்துவத்திற்கு தரமான சேவை வழங்கப்படும் என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார். இதே போல, கால்நடை மற்றும் பால்வளம் மற்றும் மீன்வளத் துறைக்கு ரூ. 4,850 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்துவதற்காக ரூ. 40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்காக ரூ. 7.432 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வெற்றி மகளிர் ஆடு வளர்ப்பு திட்டத்தின் கீழ் 30,000 பெண்களுக்கு தலா 5 ஆண்டுகள் வழங்கப்பட உள்ளது.
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம்
ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்திற்கு ரூ. 9,300 கோடி பாதுகாப்பான சாலைகள் அமைப்பதை உறுதி செய்ய தனி இயக்கம் அமைக்கப்படும். முதல்வரின் ஒருங்கிணைந்த நகர்புறத் திட்டத்திற்கு ரூ. 217 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ரூ. 500 கோடியில் ஆயிரம் ஏசி மின்சார பேருந்துகள் கொள்முதல் செய்யப்படும். ரூ. ஆயிரத்து 543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின் நிலையங்கள் உருவாக்கப்படும். திருப்பூர் டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி சென்டர் அமைக்க ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜவுளி தொழில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு
Tamil Nadu Sports Development Department Budget 2026: விளையாட்டு மேம்பாட்டுத்துறைக்கு ரூ.1,051 கோடி ஒதுக்கீடு… நிதித்துறை அமைச்சர் அறிவிப்பு!
தமிழக அரசின் முழு நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரியவில்சன் இன்று (ஆகஸ்ட் 5- ஆம் தேதி ) தாக்கல் செய்தார். இதில், தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறைக்கு ரூ. 1,051 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மாநிலம் முழுவதும் ரூ. 50 கோடியில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. தமிழ்நாடு கிராமிய விளையாட்டுப் போட்டிக்கு ரூ. 51 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ. 5 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மரியவில்சன் தெரிவித்தார். பழங்குடியினர் குடியிருப்பு வீடுகள் சாலைகள் குடிநீர் வசதி கல்வி சார்ந்த உதவித்தொகை திட்டங்கள் பள்ளி மற்றும் விடுதி உள்ளிட்டவை மேம்படுத்தப்படும் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.
ஹஜ் பயண மானியம் உள்ளிட்ட உயர்வு
ஹஜ் பயண மானியம் ரூ.2, 500- இல் இருந்து ரூ. 35 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ. ஆயிரத்து 05 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மற்றும் கல்லறை தோட்ட மேம்பாட்டுக்கு ரூ. 34 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும், குழந்தையின் பிறப்பைக் கொண்டாடும் வகையிலும், தாய்மையின் இன்பத்தையும் முக்கியத்துவத்தையும் போற்றும் வகையிலும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என தவெகவின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த திட்டத்துக்கு ரூ.560 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திருப்பதாக நிதித் துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு நவீன வசதியுடைய மிதிவண்டிகள்
மேலும், அரசுப் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மிதிவண்டிகளுக்குப் பதிலாக நவீன வசதிகளுடன் கூடிய மிதிவண்டிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார். பள்ளிக் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவர்களின் கல்வித் தரத்தையும் அடிப்படை வசதிகளையும் மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளன.
Tamil Nadu Budget 2026 Update: ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!
சென்னை, ஆகஸ்ட் 05: தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, 2026–2027ஆம் நிதியாண்டிற்கான அரசின் முதல் முழுமையான திருந்திய நிதிநிலை அறிக்கையை நிதித் துறை அமைச்சர் என். மரிய வில்சன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். காலை 10 மணிக்குத் தொடங்கிய கூட்டத்தொடரில் நிதிநிலை அறிக்கையை வாசித்த அமைச்சர் மரிய வில்சன், த.வெ.க தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகளையும் நிதி ஒதுக்கீடுகளையும் வெளியிட்டார்.
மேலும் படிக்க: “தாத்தாவின் சொத்துக்குப் பேரன் உரிமை கொண்டாடலாம்… தமிழ்நாட்டிற்கு அல்ல!”.. உதயநிதியை விமர்சித்த அமைச்சர் செங்கோட்டையன்!!
'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம்:
அதன் முக்கிய அங்கமாக, மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்காக ரூ. 560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பேரவையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். பெண்களின் நலன் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை முதன்மையாகக் கொண்டு இத்திட்டம் த.வெ.க அரசால் முன்னெடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தவெக தேர்தல் வாக்குறுதி:
Tamil Nadu School Education Budget 2026: அரசு பள்ளிகளில் “சூப்பர் க்ளீன்- சூப்பர் கேம்பஸ்” திட்டம்.. அமைச்சர் மரியவில்சன் அறிவிப்பு!
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில், நிதித்துறை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் முழு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். இதில், தமிழகத்தில் அரசு பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக சுமார் 10,000 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு இதற்காக முதல் கட்டமாக ரூ. 139 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பள்ளிகள் கழிவறை, வகுப்பறை உள்ளிட்டவை தூய்மையாகவும் 24 மணி நேரம் பாதுகாப்பாகவும் இருக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
அரசு பள்ளிகளில் தூய்மை பணி
தமிழகத்தில் செயல்படும் அரசுப் பள்ளி மாணவர்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வகையிலும், பள்ளி வளாகங்களை எப்போதும் தூய்மையாக வைத்திருப்பதற்காகவும், பள்ளிகளில் உள்ள கழிவறைகளை முறையாக பராமரித்து சுகாதாரமான முறையில் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி சொத்துகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 24 மணி நேரமும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது.
பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ. 44,527 கோடி ஒதுக்கீடு
அரசு பள்ளி வளாகங்களுக்குள் அரசியல் கட்சியினரோ அல்லது வெளிநபரோ நுழைந்து அரசியல் சார்ந்த கூட்டங்களை நடத்துவது முழுமையாக தடை செய்யப்படும். மாணவர்களின் கல்வி தரம் மற்றும் வசதிகளை மேம்படுத்தும் ஒட்டு மொத்த பள்ளிக் கல்வித் துறைக்காக இந்த பட்ஜெட்டில் மொத்தம் ரூ. 44 ஆயிரத்து 527 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் தெரிவித்தார்.
போதையில்லா தமிழ்நாடு திட்டத்தில் ரூ.7 கோடி நிதி ஒதுக்கீடு
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு பட்ஜெட்.. அறிவிப்புகள் முழு விவரங்கள்!
Tamil Nadu Budget 2026  News Updates in Tamil: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்று, தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன இடம்பெற உள்ளன என்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை கூறியுள்ள நிலையில் அவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்குமா என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய முதல்வர் விஜய், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, அவை எப்போது நிறைவடையும் என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் மேம்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த பட்ஜெட்டுக்கான முடிவுகளை எடுத்துள்ளார்
தமிழ்நாடு பட்ஜெட் 2026 நேரலை
பட்ஜெட் தொடர்பான சில கேள்வி பதில்கள்
1. தமிழ்நாடு பட்ஜெட் என்றால் என்ன?
தமிழ்நாடு அரசின் ஓராண்டுக்கான வரவு-செலவுத் திட்டமே தமிழ்நாடு பட்ஜெட் ஆகும். இதில் அரசின் வருவாய், செலவுகள், புதிய திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன.
2. வேளாண் பட்ஜெட் என்றால் என்ன?
விவசாயம், பாசனம், கால்நடை, மீன்வளம், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக தனியாக தாக்கல் செய்யப்படும் நிதித் திட்டமே வேளாண் பட்ஜெட்.
3. தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரங்களை எங்கு பார்க்கலாம்?
Tamil Budget 2026 Live Stream: தமிழ்நாடு பட்ஜெட் நேரலை.. எப்போது எங்கு எப்படி பார்க்கலாம்? முழு விவரம்!
சென்னை, ஆகஸ்ட் 4 : தமிழக அரசு தனது முதல் பட்ஜெட்டை ஆகஸ்ட் 5, 2026 நாளை தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் சாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு அரசு நலத் திட்டங்களுக்கான முக்கிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு பட்ஜெட் நேரலை எப்போது?
தமிழக பட்ஜெட்  சட்டமன்றத்தில் ஆகஸ்ட் 5, 2026 நாளை காலை 10 மணிக்கு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யவுள்ளார்.  வேளாண்மை பட்ஜெட் அடுத்த நாள் ஆகஸ்ட் 6, 2026 அன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிக்க : 2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?..
எங்கு பார்க்கலாம்?
தமிழக பட்ஜெட்டை உடனுடக்குடன் டிவி9 தமிழ் இணையதள பக்கத்திலும் மற்றும் டிவி9 தமிழ் செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலும் உடனுக்குடன் நேரலையாகப் பார்க்கலாம். மேலும் பட்ஜெட்டின் போது வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் குறித்து  அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.
வீடியோ
இந்த நிதி நிலை அறிக்கை தயார் செய்வதற்காக கடந்த ஜூலை 2, 2026 அன்று முதல்வர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூலை 31, 2026 வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைவாரியாகவும், புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க : முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..
மேலும் நாளை நடைபெறும் கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத் திட்டங்கள் உள்பட பல்வேறு அறிவிப்புகள் அதில் இடம்பெறலாம் எனத் தெரிகிறது. 'வெற்றித் தமிழகம்' என்ற பெயரில் தமிழக அரசின் ஐந்தாண்டு தொலைநோக்குத் திட்டத்தில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுத்தல், உயர் கல்விக்கு பிணையில்லாமல் ரூ.20 லட்சம் வரை கல்விக் கடன், புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு அம்சங்களும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தவெக அரசின் “பர்ஸ்ட் லுக்” பட்ஜெட்.. மக்களுக்கு காத்திருக்கும் மாஸ் சர்ப்ரைஸ் அறிவிப்புகள் என்னென்ன?
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் நாளை புதன்கிழமை ( ஆகஸ்ட் 5- ஆம் தேதி) தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். சுமார் 2 மாத காலமாக தயார் செய்யப்பட்டு வந்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள், தேர்தல் வாக்குறுதிகளுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் மக்களை கவரக்கூடிய அறிவிப்புகள், புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், பல்வேறு துறை செயல்பாடுகள் உள்ளிட்டவை இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில், மதிப்புமிகு மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500- ஆக உயர்த்தி வழங்குவதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறப்படுகிறது. இதே போல, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள், வெற்றித் தமிழகம் என்ற பெயரில் தமிழக அரசின் 5 ஆண்டு தொலைநோக்கு திட்டத்தில் கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுப்பது.
அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவச பயணம்
உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 லட்சம் வரை பிணையில்லா கல்வி கடன், புதிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம், செயற்கை நுண்ணறிவு துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் "ஏஐ" குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சிகள் அளிப்பது, அத்துடன், அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பு, ஆண்களும் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பு, பெண்கள், இளைஞர்கள், சுய தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டங்கள் ஆகியவை இடம் பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு.. அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!
புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை
மேலும், பின் தங்கிய மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை, மாணவர்கள் மற்றும் முதியோர்களின் உதவித்தொகை அதிகரிப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பத்து சதவீதமாக உயர்த்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால், இந்த பட்ஜெட்டுக்கு பொது மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
முதல்வர் தலைமையில் நடந்த துறைவாரியான கூட்டம்
இந்த நிதி நிலை அறிக்கை தயார் செய்வதற்காக கடந்த ஜூலை 2- ஆம் தேதி முதல் முதல்வர் விஜய் தலைமையில் துறை வாரியான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஜூலை 31- ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பல்வேறு கட்ட ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில், ஒவ்வொரு துறைவாரியாகவும், புதிய திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பட்ஜெட் தயார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றி கழக அரசின் முதல் பட்ஜெட்.. வெளியாகும் முக்கிய அறிவிப்புகள் என்ன? எகிறும் எதிர்ப்பார்ப்பு..
ஆகஸ்ட் 3, 2026: தமிழக அரசின் பொது பட்ஜெட் வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், இந்த பட்ஜெட்டின் மீது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக, தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா, மக்களுக்கு தேவையான புதிய அறிவிப்புகள் வெளியாகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
வெளியாகும் முக்கிய அறிவிப்புகள்:
இந்த நிலையில், பட்ஜெட்டில் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, அரசு பள்ளிகளில் படித்து அரசு கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு ரூ.8,000 வரை உதவித்தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. மேலும், தமிழகத்தில் உள்ள 30 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளை தன்னாட்சி கல்லூரிகளாக மாற்றும் திட்டம் குறித்தும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மாணவர்கள் உருவாக்கும் செயற்கைக்கோள் திட்டங்களுக்கு தமிழக அரசு நிதியுதவி வழங்கும் திட்டமும் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டை 10 சதவீதமாக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பும் இடம் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் போன்ற நுழைவு தேர்வை ரத்து செய்ய திட்டம்:
தேசிய கல்விக் கொள்கை திணிப்பு, நீட் தேர்வு உள்ளிட்ட கல்வி தொடர்பான தடைகளை நீக்க நடவடிக்கை எடுப்பது, கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவர மத்திய அரசை வலியுறுத்தும் நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் படிக்க: எடப்பாடி அளித்த பதவிகள் தேவையில்லை.. எஸ்.பி. வேலுமணி திடீர் போர்க்கொடி!
மாணவர்கள் மற்றும் கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த பட்ஜெட் அமையும் என எதிர்பார்க்கப்படுவதுடன், பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு நலத்திட்ட அறிவிப்புகளும் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.
பொதுமக்களுக்கான அறிவிப்புகள்:
குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகை, வேலையில்லா பட்டதாரிகளுக்கான உதவித்தொகை உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க: காஞ்சிபுரம் தொழில் வளர்ச்சி மையத்தில் முதல்வர் ஜோசப் விஜய் ஆய்வு.. அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!
2026-27 பட்ஜெட்: முதல்வர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ள காவல்துறை எதிர்பார்ப்புகள் என்னென்ன?
சென்னை, ஆக.02: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, அதன் முதலாவது மாநில பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. குறிப்பாக, முதலமைச்சர் விஜயின் நேரடிப் பொறுப்பில் உள்ள காவல்துறைக்கு இந்த நிதிநிலை அறிக்கையில் என்னென்ன புதிய அறிவிப்புகளும் நிதி ஒதுக்கீடுகளும் இடம் பெறப்போகின்றன என்ற எதிர்பார்ப்பு காவல்துறையினர் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: காவிரி மேகதாது விவகாரத்தில் ராகுல் காந்தி மௌனம் காப்பது ஏன்?.. விஜய பிரபாகரன் சரமாரி கேள்வி!!
வார விடுமுறை கோரிக்கை:
காவல்துறையில் நிலவும் ஆட்கள் பற்றாக்குறை, கடுமையான பணிச்சுமை மற்றும் நீண்ட நேர வேலை காரணமாகக் காவலர்கள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் வாரத்தில் ஒரு நாள் கட்டாய விடுமுறை வழங்கப்பட வேண்டும் எனப் பல ஆண்டுக் கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.
மேலும், 3 ஆண்டுகள் ஒரே மாவட்டத்தில் பணியாற்றியவர்களைத் தொலைதூர மாவட்டங்களுக்கு உடனடியாக மாற்றாமல், அருகிலுள்ள மாவட்டங்களுக்கு மட்டுமே இடமாறுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுത്തப்படுகிறது. தற்போது சுமார் 4,000-க்கும் மேற்பட்ட காவலர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கேட்டு விண்ணப்பித்து, கோப்புகள் முடங்கிக் கிடப்பதால் அவர்களின் குடும்பங்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளன.
காவலர் குடும்பங்களுக்கான தனிப் பள்ளிகள்:
தமிழ்நாடு காவலர் குடும்ப நல கூட்டமைப்பினர் சார்பில் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய கோரிக்கைகளில் ஒன்று, காவலர்களின் குழந்தைகளுக்கு என மாவட்டம் தோறும் தனியாகப் பள்ளிக்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதாகும். மற்ற அரசுத் துறைகளுக்கும் சில குறிப்பிட்ட சமூகங்களுக்கும் பள்ளிகள் இருப்பது போல், மாவட்டங்கள் தோறும் காவலர் பள்ளிகள் அமைப்பது அவர்களின் குடும்பப் பாதுகாப்பிற்கு உறுதுணையாக இருக்கும் எனக் குறிப்பிடுகின்றனர்.
அத்துடன், ரவுடிகளைப் பிடிக்கச் செல்லும்போது அல்லது பணியின் போது உயிரிழக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு ₹1 கோடி நிவாரணத் தொகை வழங்கும் அரசாணையை நிரந்தர ஜி.ஓ-வாக மாற்ற வேண்டும் என்றும், தனியார் மருத்துவமனைகளில் இலவசச் சிகிச்சை பெறும் வசதியை உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரியுள்ளனர்.
சீருடைப்படி மற்றும் 'சில்வர் பட்டன்' மாற்றம்:
தமிழக வெற்றி கழகத்தின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி, காவலர்களின் அடிப்படைப் படியை ரூ.18,000-லிருந்து ரூ.25,000ஆக உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுத்துள்ளது. மேலும், சீருடைப் படியை ரூ.4,500லிருந்து இரட்டிப்பாக உயர்த்த வேண்டும் என்றும், ரிஸ்க் அலவன்ஸ்களை அதிகரிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
சுவாரசியமான கோரிக்கையாக, காக்கிச் சட்டையில் பயன்படுத்தப்படும் 'சில்வர் பட்டன்' முறையைத் தவிர்த்து, சாதாரண பட்டன்களைப் பயன்படுத்த அனுமதித்தால் அரசுக்கு ஆண்டிற்கு சுமார் ₹85 லட்சம் வரை சேமிப்பாகும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஓய்வூதியத் திட்ட எதிர்பார்ப்புகள்:
காவல்துறையில் 20 ஆண்டுகள் பணி முடித்தவர்களுக்கு உதவி ஆய்வாளர் பதவியும், 30 ஆண்டுகள் நிறைவு செய்தவர்களுக்கு ஆய்வாளர் பதவியும் தானாகவே கிடைக்கும் வகையில் வழிவகை செய்ய வேண்டும் என்ற நீண்ட நாள் கோரிக்கையும் இந்த பட்ஜெட்டில் நிறைவேறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: கர்நாடகா போனா முதல்வரை கட்டி வச்சிடுவாங்க.. விஜய் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அனிதா ராதாகிருஷ்ணன்!
தமிழகத்தில் மீண்டும் வருகிறதா மேல்சபை? தனியார் கைக்குப் போகிறதா டாஸ்மாக்? தவெக அரசின் பட்ஜெட்டில் வரலாற்று முடிவு!
தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் பட்ஜெட் சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிற ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்குகிறது. இந்த கூட்டத்தில், தவெக அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பி உள்ள இந்த பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள், என்னென்ன சலுகைகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எழுந்துள்ளது. இதில், இரு முக்கிய அறிவிப்புகளை முதல்வர் விஜய் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில், முதலாவது தமிழக சட்டமன்றத்தில் மேல் சபை கொண்டுவர முதல்வர் விஜய் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்டங்கள் தொடர்பான மசோதாக்களை அவசரம் இன்றி மீண்டும் ஒருமுறை ஆராய்ந்து, அதில் உள்ள திருத்தங்களை குறிப்பிடும் ஒரு ஆலோசனை சபை தான் மேல் சபை ஆகும்.
மேல்சபையில் இடம் பெறுபவர்கள் யார் யார்
இந்த சபையில் அரசியல்வாதிகள் இல்லாமல் ஆசிரியர்கள், டாக்டர்கள், கலைஞர்கள் மற்றும் வல்லுனர்கள் ஆகியோர் உறுப்பினர்களாக இணைக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சபையின் மூலமாக தவறான அல்லது அவசரமான சட்டங்கள் அமலாக்கப்படுவதை முன்கூட்டியே தடுக்கும். கடந்த 1986- ஆம் ஆண்டு எம். ஜி. ஆர். ஆட்சி காலத்தில் ரத்து செய்யப்பட்ட மேல் சபையை தான் தற்போதைய முதல்வர் கொண்டுவர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. எம்ஜிஆர் ஆட்சியில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவுக்காக மேல் சபையை எம்ஜிஆர் கலைத்திருந்தார்.
மேலும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. கைதிலிருந்து தப்பினார் செந்தில் பாலாஜி.. உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
மேல்சபைக்கான மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்ப திட்டம்
தற்போது, மேல் சபை கொண்டு வருவதற்காக சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கலாம் என்று ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறதாம். தமிழகத்தில் மேல் சபை அமைக்க மசோதா நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தாலும், நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகே தமிழகத்தில் மேல் சபை அமைக்கப்படும் நிலை உள்ளது. இதேபோல, மற்றொரு முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
தனியார் வசமாகிறதா டாஸ்மாக் நிர்வாகம்
ஏனென்றால், மதுபானங்களை அரசே விற்பனை செய்வதால் தான் அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசுடைமையாக்கப்பட்ட மதுபான விற்பனையை தனியார் மயமாக்குவது தொடர்பான சட்ட திருத்தம் குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. மொத்தத்தில் தமிழக வெற்றிக் கழக அரசின் பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
2026-27 வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் என்ன?..
சென்னை, ஜூலை 31: ஒரு மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பு மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதன்மைத் தூணாக விளங்குவது வேளாண்மை மற்றும் அதைச் சார்ந்த தொழிலும் ஆகும். தமிழகப் பொருளாதாரத்தில் சுமார் 13% பங்களிப்பைக் கொண்டுள்ள இத்துறை, பல்வேறு நெருக்கடிகளையும் சவால்களையும் சந்தித்து வரும் சூழலில், வரவிருக்கும் 2026-2027 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதையும் படிக்க: முந்தைய திமுக அரசின் ‘தாயுமானவர்’ திட்டம் பெயரை மாற்றிய தவெக அரசு!!
விவசாயத்தின் முதன்மைச் சவால்கள்:
கடந்த 2001-2002 ஆம் ஆண்டிற்குப் பிறகு, மாநிலத்தில் சுமார் 2 லட்சம் ஹெக்டர் சாகுபடி பரப்பு குறைந்து, தரிசு நிலங்களின் அளவு அதிகரித்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இத்துறை வீழ்ச்சியடைவதற்கான முதன்மைக் காரணங்கள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளின் கடுமையான விலை உயர்வு. தொழிலாளர்கள் பற்றாக்குறையால் கூலிச் செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் சரிவு, பருவமழை பொய்த்துப்போதல் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள். நவீன அறுவடை இயந்திரங்கள் மற்றும் விளைபொருட்களைப் பாதுகாக்கும் குளிர்பதனச் சேமிப்புக் கிடங்குகள் போதுமான அளவில் இல்லாத நிலை.
இடைத்தரகர்கள் ஆதிக்கம் & விழிப்புணர்வின்மை:
அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP) குறித்துப் பெரும்பாலான விவசாயிகளுக்குச் சரியான விழிப்புணர்வு இல்லாதது கவலையளிக்கும் விஷயமாக உள்ளது. தமிழகத்தில் 68% நெல் விவசாயிகளுக்கு அரசு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்துப் போதிய விழிப்புணர்வு இல்லை. 80% விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களை விட உள்ளூர் சந்தைகளையே நம்பியுள்ளனர்.
இடைத்தரகர்கள் சுரண்டல்:
இதன் விளைவாகச் சந்தை விலை மாற்றங்களாலும், இடைத்தரகர்களின் ஆதிக்கத்தாலும் உழைப்பிற்கு ஏற்ற நியாயமான லாபம் கிடைக்காமல் விவசாயிகள் தொடர் நஷ்டத்தைச் சந்தித்து வருகின்றனர்.
மீட்டெடுக்கும் கால்நடை வளர்ப்புத் துறை
பயிர்ச் சாகுபடித் துறையில் சரிவு ஏற்பட்ட போதிலும், அதைச் சார்ந்த கால்நடை வளர்ப்புத் துறை விவசாயிகளுக்கு ஒரு மாற்று வாழ்வாதாரமாக உருவெடுத்துள்ளது. கடந்த 2011-2012 ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், வேளாண் துறையின் மொத்த வருமானத்தில் கால்நடை வளர்ப்பு மூலம் கிடைக்கும் வருமானப் பங்களிப்பு 30%-லிருந்து 53%-ஆக உயர்ந்து, இத்துறையை ஓரளவு மீட்டெடுத்து வருகிறது.
பட்ஜெட்டில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகள்:
வரவிருக்கும் தமிழ்நாடு வேளாண் பட்ஜெட்டில் சாகுபடியை மீண்டும் ஊக்குவிக்கும் வகையில் அரசு சிறப்பான திட்டங்களை அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிக்க: “முதலில் மின்வெட்டு.. இப்போது மின்கட்டண உயர்வு!”.. தவெக ஆட்சியில் குளறுபடிகள்.. மு.க.ஸ்டாலின் சாடல்!!
கூடுதல் கொள்முதல் விலை:
முதல் பட்ஜெட்டில் தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு..
ஜூலை 31, 2026: தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட், வருகிற ஆகஸ்ட் 5ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் துறைக்கான தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன இடம்பெற உள்ளன என்பது கவனத்தை ஈர்த்துள்ளது.
தவெக அரசின் முதல் பட்ஜெட்:
அரசின் முதல் பட்ஜெட் என்பதால், முதலமைச்சர் விஜய் அதில் தனிப்பட்ட கவனம் செலுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வரும் அவர், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, அவை எப்போது நிறைவடையும் என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறார். மேலும், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் மேம்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
பட்ஜெட் தயாரிப்பில் மும்மரம் காட்டும் முதல்வர் விஜய்:
இதற்கிடையில், அவ்வப்போது கள ஆய்வுகளையும் முதலமைச்சர் மேற்கொண்டு வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை ஆய்வு செய்தார். அதேபோல், கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட அவர், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது.
தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா?
இதனால், இந்த பட்ஜெட்டில் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட பல்வேறு வாக்குறுதிகள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, மகளிர் உரிமைத்தொகையை மாதம் ரூ.2,500 ஆக உயர்த்தி வழங்குவதாக தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான பணிகள் கடந்த மாதம் முதல் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே, அதுகுறித்த அறிவிப்பு இந்த பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: கர்நாடகா பயணம் சாத்தியமா? காவிரி நீர் விவகாரம் குறித்து முதல்வர் விஜய் அவசர ஆலோசனை!!
மேலும், வேலையில்லா பட்டதாரிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவது, மாநிலம் முழுவதும் உள்ள கோவில்களில் நடைபெற்று வரும் திருப்பணி, சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியாகலாம் என கூறப்படுகிறது.
அதேபோல், விசைத்தறித் தொழில் மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம் அல்லது வாரியம் அமைக்க வேண்டும் என்ற நீண்டகால கோரிக்கை தொடர்பாகவும் இந்த பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு வெளியாகும் என விசைத்தறித் தொழிலாளர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பொது மக்களின் எதிர்ப்பார்ப்பு என்ன?
பொதுமக்களிடம் இந்த பட்ஜெட் குறித்து கருத்து கேட்டபோது, சாமானிய மக்களுக்கு நேரடியாக பயனளிக்கும் வகையில் பட்ஜெட் அமைய வேண்டும் என்றும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
மேலும், தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் தமிழகத்தில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய முதலீடுகள், அதன் மூலம் உருவாகும் வேலைவாய்ப்புகள் உள்ளிட்ட முக்கிய அம்சங்களும் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க: நாகர்கோவில் சபரிவர்மன் சிறை மரணம்.. சிபிசிஐடி விசாரணையில் அம்பலமான அதிர்ச்சித் தகவல்கள்!
பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி.. ஆகஸ்ட் 5 பட்ஜெட்டில் அதிரடி அறிவிப்பு வெளியாகுமா?
சென்னை, ஜூலை 29: தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், பள்ளிகளில் மாணவர் வருகையை மேலும் அதிகரிக்கவும், சத்துணவுத் திட்டத்தில் வாரத்திற்கு ஒருமுறை சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்துத் தமிழக அரசு தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் (சத்துணவுத் திட்டம்) சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் முட்டை, காய்கறி சாதம், பருப்பு மற்றும் கீரை உணவுகள் வழங்கப்படுகின்றன.
இதையும் படிக்க: “தனியார் கைக்குச் செல்லும் டாஸ்மாக் கடைகள்?”.. பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற திட்டம்!
ஆசிரியர் சங்கங்களின் நீண்டகால கோரிக்கை:
இருப்பினும், மாணவர்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்தவும், அவர்களுக்கு விருப்பமான மற்றும் சுவையான உணவுகளை வழங்குவதன் மூலம் பள்ளிக்கு வரும் ஆர்வத்தை அதிகரிக்கவும் வேண்டும் எனப் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தன. இந்தக் கோரிக்கையை ஏற்று, வாரத்திற்கு ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்கலாமா என்பது குறித்த சாத்தியக்கூறுகளை அரசு தற்போது ஆராய்ந்து வருகிறது.
அமைச்சர் ராஜ்மோகனின் விளக்கம்:
இது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஆசிரியர் சங்கங்கள் முன்வைத்துள்ள இந்தக் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. மாணவர்களின் உடல்நலம், ஊட்டச்சத்துத் தேவை மற்றும் நிதி ஒதுக்கீடு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இது குறித்து உரிய முடிவுகள் எடுக்கப்படும்" எனத் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 5 பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு:
வருகிற ஆகஸ்ட் 5-ஆம் தேதி தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் இத்திட்டத்தை உள்ளடக்குவது குறித்தும், இதற்கான நிதிச் சுமை எவ்வளவு இருக்கும் என்பது குறித்தும் முதலமைச்சர் அவர்கள் இறுதி முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் & சவால்கள் அரசு இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தினால் பின்வரும் அம்சங்கள் கவனத்தில் கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரியாணியில் புரதச் சத்து நிறைந்த கோழி இறைச்சியுடன், காய்கறிகளையும் சேர்த்து ஆரோக்கியமான முறையில் தயாரிக்கப்படுவதை உறுதி செய்தல்.
கூடுதல் நிதி ஒதுக்கீடு:
மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்களுக்குத் தரமான இறைச்சியை வாரந்தோறும் கொள்முதல் செய்வதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு. பள்ளிகளில் சுகாதாரமான முறையில் உணவைத் தயாரிப்பதற்கான உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்துதல். சிக்கன் பிரியாணி சாப்பிட விரும்பாத மாணவர்களுக்கு மாற்று உணவாக (கொண்டைக்கடலை அல்லது பன்னீர் சார்ந்த உணவுகள்) வழங்குவது குறித்து ஆலோசிக்கப்படலாம்.
இதையும் படிக்க: அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?
“தனியார் கைக்குச் செல்லும் டாஸ்மாக் கடைகள்?”.. பட்ஜெட் கூட்டத்தொடரில் சட்டம் இயற்ற திட்டம்!
சென்னை, ஜூலை 29: தமிழ்நாட்டில் மாநில அரசின் முழுமையான கட்டுப்பாட்டில் இயங்கி வரும் டாஸ்மாக் சில்லறை மதுபானக் கடைகளைத் தனியார் மயமாக்குவது தொடர்பாக, தமிழக அரசு முதற்கட்ட நிர்வாக மற்றும் சட்ட ஆலோசனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தற்போது மாநிலம் முழுவதும் டாஸ்மாக் நிறுவனம் சார்பில் 4,048 சில்லறை மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுதோறும் சுமார் ரூ.48,000 கோடி அளவுக்குப் பிரம்மாண்டமான வருவாய் கிடைத்து வருகிறது.
இதையும் படிக்க: அரிசி விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் இமாலய உயர்வு.. ஏழை, நடுத்தர மக்கள் கடும் அவதி.. காரணம் என்ன?
முதற்கட்ட சோதனை முயற்சி?
இதுவரை டாஸ்மாக் கடைகளைத் தனியார் மயமாக்கும் எண்ணம் அரசிடம் இல்லை என்று அமைச்சர்களும் துறை அதிகாரிகளும் மறுத்து வந்த நிலையில், தற்போது நிலைமையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் மாநகராட்சிப் பகுதிகளைத் தவிர்த்து, முதற்கட்டமாக நகராட்சி வரம்பிற்குள் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளைத் தனியாரிடம் உரிமம் முறையில் ஒப்படைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துத் துறை சார்ந்த அதிகாரிகள் குழு தீவிரமாக ஆராய்ந்து வருகிறது.
தனியாரிடம் ஒப்படைப்பதால் பலன்:
MRP விலையை விட அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது, பாட்டில் ஒன்றுக்கு ரூ.10 கூடுதல் வசூலிப்பது போன்ற புகார்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடைகளை நேரடியாக நடத்துவதற்குப் பதிலாகத் தனியார் முகவர்களுக்கு உரிமம் வழங்குவதன் மூலம் அரசிற்கு நிலையான உரிமக் கட்டணமும் வரி வருவாயும் தடங்கலின்றி கிடைக்கும்.
பேரவைக் கூட்டத்தொடரில் சட்டத்திருத்தம்?
டாஸ்மாக் நிறுவனத்தின் சில்லறை விற்பனை அதிகாரத்தைத் தனியாருக்கு மாற்றுவதற்குத் தற்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது கட்டாயமாகும். இதற்காக, முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் விரைவில் கூட்டப்பட்டு, கொள்கை ரீதியான முடிவு எடுக்கப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து, வரவிருக்கும் ஆகஸ்ட் மாதச் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான சிறப்புச் சட்டத்திருத்த மசோதாவைத் தாக்கல் செய்யத் துறை அதிகாரிகள் வரைவுத் திட்டங்களைத் தயாரித்து வருகின்றனர்.
சட்டப்பேரவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, நகராட்சிப் பகுதிகளில் திறக்கப்படவுள்ள தனியார் மதுபானக் கடைகளுக்கான டெண்டர் மற்றும் உரிமம் வழங்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கும் எனத் தெரிகிறது.
எழும் கேள்விகளும் சவால்களும்:
அரசு இத்தகைய முடிவை நோக்கிய நகர்வை எடுத்து வைத்தாலும், இதில் சில முக்கியச் சவால்களும் காத்திருக்கின்றன. தற்போது டாஸ்மாக் கடைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்களின் பணிப் பாதுகாப்பு என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. டாஸ்மாக்கை முழுமையாக மூட வேண்டும் எனப் பல அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வரும் சூழலில், தனியாரிடம் ஒப்படைத்தால் மதுக் கடைகளின் எண்ணிக்கை அதிகரிக்குமோ என்ற அச்சமும், அரசியல் ரீதியான எதிர்ப்புகளும் கிளம்ப வாய்ப்புள்ளது.
இதையும் படிக்க: “பார்ட்டி ஃபண்ட் தெரியாதது போல் நடிப்பு”.. முன்னாள் அமைச்சர் சேகர் பாபுவை மறைமுகமாக தாக்கிய மரிய வில்சன்!
மக்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா? பட்ஜெட்டில் என்ன ஸ்பெஷல்?
மக்கள் நலத் திட்டங்களுக்கு முன்னுரிமை
விஜய் தலைமையிலான அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கத் திட்டமிட்டுள்ளது. புதிய நலத்திட்டங்கள் மற்றும் ஏற்கனவே உள்ள திட்டங்களை வலுப்படுத்தும் அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்பு மற்றும் இளைஞர் மேம்பாடு
அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவை பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிதி ஒழுங்குமுறை மற்றும் வருவாய் உயர்வு
மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வரி வசூலை மேம்படுத்துதல், வருவாய் கசிவுகளைத் தடுக்குதல் மற்றும் தேவையற்ற செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கைகள் பட்ஜெட்டில் இடம்பெற வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வளர்ச்சித் திட்டங்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.
அடிப்படை கட்டமைப்பு மற்றும் வளர்ச்சி
சாலை, குடிநீர், போக்குவரத்து, நகர்ப்புற வசதிகள் மற்றும் தொழில் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீண்டகால பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு இந்தத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகின்றன.
முதல் பட்ஜெட்டின் அரசியல் முக்கியத்துவம்
டிவிகே ஆட்சியின் முதல் முழுமையான பட்ஜெட் என்பதால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் திசையில் அரசு எடுக்கும் நடவடிக்கைகளை வெளிப்படுத்தும் ஆவணமாக இது பார்க்கப்படுகிறது. பட்ஜெட் ஆகஸ்ட் 5ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.