AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு பட்ஜெட்.. அறிவிப்புகள் முழு விவரங்கள்!

Tamil Nadu Budget 2026 Updates in Tamil : தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டை அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்து வருகிறார். தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இன்று பட்ஜெட்டில் வரும் தகவல்களை உடனுக்குடன் இங்கே விரிவாக பார்க்கலாம்.

C Murugadoss
C Murugadoss | Updated On: 05 Aug 2026 14:38 PM IST
Share
Tamil Nadu Budget 2026 Highlights: தமிழ்நாடு பட்ஜெட்.. அறிவிப்புகள் முழு விவரங்கள்!
தமிழ்நாடு பட்ஜெட்

Tamil Nadu Budget 2026  News Updates in Tamil: தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. விஜய் முதல்வராக பொறுப்பேற்று, தமிழக வெற்றிக்கழக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அரசியல் வட்டாரங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த பட்ஜெட்டில் மக்களுக்கான முக்கிய அறிவிப்புகள் என்னென்ன இடம்பெற உள்ளன என்பது கவனத்தை ஈர்த்துள்ளது. தவெக அரசு பல தேர்தல் வாக்குறுதிகளை கூறியுள்ள நிலையில் அவற்றை நிறைவேற்றும் வகையில் இந்த பட்ஜெட் இருக்குமா என்று எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. முன்னதாக, தலைமைச் செயலகத்தில் தினந்தோறும் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களை நடத்திய முதல்வர் விஜய், ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள், அவற்றுக்கான நிதி ஒதுக்கீடு, திட்டப் பணிகளின் தற்போதைய நிலை, அவை எப்போது நிறைவடையும் என்பன குறித்து விரிவாக ஆய்வு செய்தார். மேலும், ஒவ்வொரு துறையிலும் மேற்கொள்ள வேண்டிய கூடுதல் மேம்பாடுகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி இந்த பட்ஜெட்டுக்கான முடிவுகளை எடுத்துள்ளார்

தமிழ்நாடு பட்ஜெட் 2026 நேரலை

பட்ஜெட் தொடர்பான சில கேள்வி பதில்கள்

1. தமிழ்நாடு பட்ஜெட் என்றால் என்ன?

தமிழ்நாடு அரசின் ஓராண்டுக்கான வரவு-செலவுத் திட்டமே தமிழ்நாடு பட்ஜெட் ஆகும். இதில் அரசின் வருவாய், செலவுகள், புதிய திட்டங்கள், நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்படுகின்றன.

2. வேளாண் பட்ஜெட் என்றால் என்ன?

விவசாயம், பாசனம், கால்நடை, மீன்வளம், விவசாயிகளுக்கான நலத்திட்டங்கள் உள்ளிட்டவற்றுக்காக தனியாக தாக்கல் செய்யப்படும் நிதித் திட்டமே வேளாண் பட்ஜெட்.

3. தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரங்களை எங்கு பார்க்கலாம்?

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாடு அரசின் நிதித்துறை இணையதளம் மற்றும் அரசு வெளியிடும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் முழு விவரங்களையும் பார்க்கலாம்.

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 05 Aug 2026 02:58 PM (IST)

    பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை – உதயநிதி

    கடந்த 100 நாட்களாக சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை – உதயநிதி

  • 05 Aug 2026 02:48 PM (IST)

    வெற்றி என்ற வார்த்தையை சேர்த்து திட்டத்தை வெளியிட்டுள்ளனர் – உதயநிதி

    திமுக திட்டங்களுக்கு பெயர் மாற்றத்தை தவெக செய்துள்ளது. வெற்றி என்ற வார்த்தையை சேர்த்து திட்டத்தை வெளியிட்டுள்ளனர் – உதயநிதி

  • 05 Aug 2026 02:28 PM (IST)

    தங்க மோதிரம் திட்டத்தில் ஏன் இந்த மாற்றம் – உதயநிதி

    அனைத்து குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் என கூறிவிட்டு, இன்று அரசு மருத்துவமனையில் பிறந்தால் மட்டுமே தங்க மோதிரம் என கூறியுள்ளனர் – உதயநிதி

  • 05 Aug 2026 02:14 PM (IST)

    திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் – உதயநிதி

    தவெக அரசின் பட்ஜெட் ஒரு ஜீரோவாக உள்ளது . திமுக அரசின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர் – உதயநிதி

  • 05 Aug 2026 01:46 PM (IST)

    அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர்

    தவெக ஆட்சி அதிமுகவின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளது. கொரோனா காலத்தில் வருவாயே இல்லாமல் அதிமுக ஆட்சி செய்தது-  ஈபிஎஸ்

  • 05 Aug 2026 01:38 PM (IST)

    செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர்

    செப்டம்பர் 8ம் தேதி வரை தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் அறிவிப்பு

  • 05 Aug 2026 01:28 PM (IST)

    குழு அமைத்தால்போதுமா? – ஈபிஎஸ் கேள்வி

    நிதி ஆதாரத்தை பெருக்க குழு அமைத்தால்போதுமா? திமுகவும் இதே வேலையைத்தான் செய்தார்கள் – ஈபிஎஸ்

  • 05 Aug 2026 01:15 PM (IST)

    கடனை எப்படி அடைப்பது – ஈபிஎஸ்

    நிதிப்பற்றாக்குறையை எப்படி சரி செய்யப்போகிறார்கள், என்ன திட்டம் இருக்கிறது என்பதை அவர்கள் தெரிவிக்கவில்லை. எப்படி சரி செய்ய முடியும்? – ஈபிஎஸ்

  • 05 Aug 2026 12:58 PM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை – ஈபிஎஸ்

    தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை – ஈபிஎஸ்

  • 05 Aug 2026 12:45 PM (IST)

    வெறும் ரீல்சாக ஓடிவிட்டது – ஈபிஎஸ்

    வெறும் வசனத்தை பேசிய 85 நாட்களை இந்த ஆட்சியை ஓட்டிவிட்டனர். வெறும் ரீல்சாக ஓடிவிட்டது – ஈபிஎஸ்

  • 05 Aug 2026 12:40 PM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட் – ஈபிஎஸ்

    மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக இன்று அமைந்துவிட்டது. ஏற்கெனவே இருந்த திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டியுள்ளர்- ஈபிஎஸ்

  • 05 Aug 2026 12:32 PM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: 2 மணி நேரம் 31 நிமிடங்கள் பட்ஜெட் உரை

    சரியாக 2 மணி நேரம் 31 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசித்த அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 12:30 PM (IST)

    திட்டங்களில் பெரும்பாலானவற்றை தொடரத் திட்டம்

    அமலில் உள்ள பொதுநலத் திட்டங்களில் பெரும்பாலானவற்றை தொடரத் திட்டம் என நிதியமைச்சர் மரிய வில்சன் தகவல்

  • 05 Aug 2026 12:19 PM (IST)

    Tamil Nadu Budget 2026: ரூ60 கோடியில் ஓய்வு இல்லங்கள்

    ஆன்மிக வசதிக்காக திருக்கடையூர், நாகூர், வேளாங்கண்ணி பகுதிகளில் ரூ60 கோடியில் ஓய்வு இல்லங்கள் அமைக்கப்படும்

  • 05 Aug 2026 12:17 PM (IST)

    Tamil Nadu State Budget : அரசு ஊழியர்களுக்கான காப்பீடு – பட்ஜெட் அறிவிப்பு

    அரசு ஊழியர்களுக்கான காப்பீடு விவரங்கள்

    தகவல்

  • 05 Aug 2026 12:14 PM (IST)

    மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலாதளமாக மேம்படுத்த நடவடிக்கை

    மாமல்லபுரத்தை சர்வதேச சுற்றுலாதளமாக மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் – அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 12:11 PM (IST)

    Tamil Nadu State Budget: ‘வெற்றி 150’ திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி

    VB – G RAM G திட்டத்தின் துணை திட்டமாக ‘வெற்றி 150’ திட்டத்துக்கு ஆண்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

  • 05 Aug 2026 12:02 PM (IST)

    எல் நினோ சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகள்

    எல் நினோ பாதிப்புகளை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு

  • 05 Aug 2026 11:50 AM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: காவிரி , கொள்ளிடம் குறுக்கே தடுப்பணைகள்

  • 05 Aug 2026 11:47 AM (IST)

    3500 கோடியில் 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல்

    வெற்றி வீடு திட்டம் – நடப்பு ஆண்டில் ரூ.3500 கோடியில் 70 ஆயிரம் கான்கிரீட் வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும் – அமைச்சர் அறிவிப்பு

  • 05 Aug 2026 11:40 AM (IST)

    ரூ.500 கோடியில் 1000 ஏசி பேருந்துகள்

    சென்னையில் ரூ.500 கோடியில் 1000 ஏசி பேருந்துகள் இந்த ஆண்டு பயன்பாட்டுக்கு வரும் – அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 11:37 AM (IST)

    Chennai Metro : விரைவில் வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில்

    சென்னை வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை விரைவில் தொடங்கும் என அமைச்சர் அறிவிப்பு

  • 05 Aug 2026 11:35 AM (IST)

    கூவம் சுத்தப்படுத்தி பயன்படுத்த உலகளவில் டெண்டர்

    சென்னையின் கூவம், அடையாறு நதிகளை சுத்தப்படுத்தி பயன்படுத்தும் வகையில் உலக அரங்கில் டெண்டர் வழங்கப்படும் – அமைச்சர்

  • 05 Aug 2026 11:33 AM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள்

    மூத்த குடிமக்களுக்காக பொழுதுபோக்கு மையங்கள் அமைக்கப்படும். நூலகம், யோகா, தியானம், உள்ளரங்க விளையாட்டு வசதிகளுடன் இந்த மையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர்

  • 05 Aug 2026 11:26 AM (IST)

    மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை அதிகரிப்பு

    மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000-ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்வு

  • 05 Aug 2026 11:18 AM (IST)

    அனைத்து வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர்

    சென்னை மாநகரின் அனைத்து வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் கொண்டு வரப்படும். வீட்டுக்கூரையில் சூரிய மின்தகடு திட்டம் – அமைச்சர்

    தகவல்

  • 05 Aug 2026 11:14 AM (IST)

    திருப்பூர் டெக்னாலஜி செண்டர்

    திருப்பூரில் டெக்ஸ்டைல் டெக்னாலஜி செண்டர் அமைக்கப்படும். இதற்காக ரூ.10 கோடி ஒதுக்கீடு –  அமைச்சர்

  • 05 Aug 2026 11:07 AM (IST)

    Tamil Nadu Budget : ரூ3200கோடியில் புதிய சிப்காட் தொழில்நுட்ப பூங்காங்கள்

    பின் தங்கிய மாவட்டங்களில் ரூ3200கோடியில் புதிய சிப்காட் தொழில்நுட்ப பூங்காங்கள் அமைக்கப்படும் – அமைச்சர்

  • 05 Aug 2026 11:02 AM (IST)

    கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ்

    கால்நடைகளுக்கு இன்சூரன்ஸ் திட்டத்தை அறிவித்தது தமிழ்நாடு அரசு

    தகவல்

  • 05 Aug 2026 11:01 AM (IST)

    கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.40 கோடி

    கால்நடை மருத்துவமனைகளை தரம் உயர்த்த ரூ.40 கோடி ஒதுக்கீடு – அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 10:57 AM (IST)

    தாய்கேர் திட்டத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு

    கருவுற்ற பெண்களுக்கான முதலமைச்சரின் தாய்கேர் திட்டத்துக்கு ரூ.23 கோடி ஒதுக்கீடு

  • 05 Aug 2026 10:56 AM (IST)

    சுகாதாரத்துறைக்கு 23357 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    சுகாதாரத்துறைக்கு 23357 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் அறிவிப்பு

  • 05 Aug 2026 10:52 AM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: காலை உணவுத்திட்டம் பட்ஜெட் அறிவிப்புகள்

    காலை உணவுத்திட்டம் தொடர்பான பட்ஜெட் அறிவிப்புகள்

    தகவல்

  • 05 Aug 2026 10:50 AM (IST)

    Tamil Nadu State Budget: ஒரு கிராம் மோதிரம் – அமைச்சர் அறிவிப்பு

    அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் மோதிரம், தாய்மாமன் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் – அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 10:45 AM (IST)

    பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம்

    திருமணமாகும் பெண்களுக்கு ஒரு சவரன் தங்க நாணயம், ஒரு பட்டுப்புடவை  வழங்கப்படும் என அமைச்சர் அறிவிப்பு – இதற்காக 812 கோடி ரூபாய் ஒதுக்கீடு

    முழு விவரம்: க்ளிக் செய்க

  • 05 Aug 2026 10:42 AM (IST)

    TVK Government Tamil Nadu Budget: ஹச் பயணம் மானியம் அதிகரிப்பு

    ஹச் பயணம் மேற்கொள்வோருக்கான மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35ஆயிரமாக அதிகரித்து வழங்கப்படும் – அமைச்சர்

  • 05 Aug 2026 10:39 AM (IST)

    உலகத்தர விளையாட்டு பயிற்சி அளிக்கப்படும்

    விரிவாக படிக்க

  • 05 Aug 2026 10:37 AM (IST)

    ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர்

    மாநிலம் முழுவதும் 10 சிறப்பு ஒலிம்பிக் மையங்கள் அமைக்கப்படும் – அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 10:31 AM (IST)

    AI பாடத்திட்டம் கொண்டு வரப்படும் –  அமைச்சர் மரிய வில்சன்

    6ம் வகுப்பு முதலே மாணவர்களுக்கு AI பாடத்திட்டம் கொண்டு வரப்படும் –  அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 10:28 AM (IST)

    மின் வாகனங்களை பழுதுபார்க்கும் பயிற்சி

    12500 மெக்கானிக்களுக்கு மின் வாகனங்களை பழுதுபார்க்கும் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் தகவல்

  • 05 Aug 2026 10:27 AM (IST)

    Tamil Nadu State Budget: கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம்

    ரூ.2000 கோடியில் கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி திட்டம் செயல்படுத்தப்படும் – அமைச்சர்

    Read more Tamil Nadu Budget 2026 News : ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டம்.. பட்ஜெட்டில் வந்தது அதிரடி அறிவிப்பு!!

  • 05 Aug 2026 10:26 AM (IST)

    TN State Budget: நீட் ரத்து – தொடர்ச்சியான வலியுறுத்தல்

    நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசிடன் தொடர்ந்து வலியுறுத்துவோம் –  அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 10:23 AM (IST)

    நவீன சைக்கிள்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு – அமைச்சர்

    ஹெல்மெட், வாட்டர் பாட்டில் வைக்கும் வசதிகள் கொண்ட நவீன சைக்கிள்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு – அமைச்சர்

  • 05 Aug 2026 10:22 AM (IST)

    போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக ரூ7கோடி ஒதுக்கீடு

    போதைப்பொருள் விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் சிறப்புக்குழு அமைக்கப்படும். போதைப்பொருள் விழிப்புணர்வுக்காக ரூ7கோடி ஒதுக்கீடு

  • 05 Aug 2026 10:19 AM (IST)

    , புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு

    9 முதல் 12ம் வகுப்பு இலவச சீருடை, புத்தகங்கள் வழங்க ரூ.122 கோடி ஒதுக்கீடு

  • 05 Aug 2026 10:17 AM (IST)

    Tamil Nadu State Budget: 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு – அமைச்சர் மரிய வில்சன்

    சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்துக்காக 139 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 10 ஆயிரம் அரசு பள்ளிகளில் கொண்டு வரப்படும் – அமைச்சர்

  • 05 Aug 2026 10:16 AM (IST)

    ப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டம்

    அரசுப்பள்ளிகளில் சூப்பர் கிளீன் சூப்பர் கேம்பஸ் திட்டத்தை செயல்படுத்த உள்ளது – அமைச்சர்

    விரிவாக படிக்க: க்ளிக் செய்க

  • 05 Aug 2026 10:13 AM (IST)

    Tamil Nadu Budget : ஊழல்வாதிகள் ஓடி ஒளிகின்றனர் – அமைச்சர் மரிய வில்சன்

    முதலமைச்சர் விஜய்யின் பெயரைக்கேட்டால் ஊழல்வாதிகள் ஓடி ஒளிகின்றனர் – அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 10:07 AM (IST)

    அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் – அமைச்சர் மரிய வில்சன்

    தவெக ஆட்சி அமைந்த பிறகு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளோம் – அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 10:00 AM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன்

    பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் மரிய வில்சன். அனைத்து எம். எல்.ஏ.க்களுடம் சட்டப்பேரவைக்கு வருகை

     

  • 05 Aug 2026 09:42 AM (IST)

    Tamil Nadu Budget 2026 Update: விஜய்யிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மரிய வில்சன்

    இன்றைக்கு பட்ஜெட்டுக்கான நிதி நிலை அறிக்கையுடன் முதல்வர் விஜய்யிடம் வாழ்த்து பெற்றார் அமைச்சர் மரிய வில்சன்

  • 05 Aug 2026 09:41 AM (IST)

    Tamil Nadu State Budget: உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை

    சட்டப்பேரவைக்கு எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர்கள் வருகை தருகின்றனர். எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவைக்கு வருகை

  • 05 Aug 2026 09:34 AM (IST)

    Tamil Nadu State Budget : முதல்வர் விஜய் சட்டபேரவைக்கு வருகை

    தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் இன்று நடக்கவுள்ள நிலையில் முதல்வர் விஜய் சட்டபேரவைக்கு வருகை

  • 05 Aug 2026 09:27 AM (IST)

    EPS : எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வருகை

    தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவைக்கு வருகை

    வீடியோ

  • 05 Aug 2026 09:25 AM (IST)

    Tamil Nadu Budget 2026 : எகிறும் எதிர்பார்ப்பு

    தவெகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வருமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

  • 05 Aug 2026 09:20 AM (IST)

    Tamil Nadu Budget : சட்டசபைக்கு வருகை தரும் எதிர்க்கட்சியினர்

    தமிழ்நாடு பட்ஜெட் இன்று தாக்கலாக உள்ள நிலையில் எதிர்க்கட்சி எம் எல் ஏக்கள் சட்டசபைக்கு வருகை தருகின்றனர்

  • 05 Aug 2026 09:00 AM (IST)

    துறைசார்ந்த அறிவிப்புகள் & வேலைவாய்ப்பு:

    கல்வி, சுகாதாரம், பொதுப்பணி, நெடுஞ்சாலை, நீர்வளம், சமூக நலன், சமூக நீதி மற்றும் விளையாட்டு ஆகிய முக்கியத் துறைகளில் புதிய திட்டங்கள் மற்றும் கட்டமைப்பு மேம்பாடுகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகலாம். பல்வேறு அரசுத் துறைகளில் நீண்டகாலமாகக் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்துத் தெளிவான அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது. கட்டணமில்லா முழு உடல் பரிசோதனைத் திட்டம் குறித்த அறிவிப்பு. EV சார்ஜிங் ஸ்டேஷன்கள் மாநிலம் முழுவதும் அமைப்பது தொடர்பான திட்டங்கள். தமிழ்நாட்டிற்கெனத் தனி விளையாட்டுக் கொள்கை வெளியிடுவது குறித்த முக்கிய அறிவிப்பு குறித்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.

  • 05 Aug 2026 08:50 AM (IST)

    புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை

    பின் தங்கிய மாவட்டங்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த புதிய தொழில் பூங்கா மற்றும் தொழிற்பேட்டை, மாணவர்கள் மற்றும் முதியோர்களின் உதவித்தொகை அதிகரிப்பு, அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் 7.5% உள் ஒதுக்கீடு பத்து சதவீதமாக உயர்த்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் நிதி நிலை அறிக்கையில் இடம் பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

  • 05 Aug 2026 08:40 AM (IST)

    அனைத்து பேருந்துகளிலும் மகளிருக்கு இலவசம் அறிவிப்பு?

    முக்கியமாக அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பு, ஆண்களும் இலவச பயணம் மேற்கொள்வதற்கான அறிவிப்பு, பெண்கள், இளைஞர்கள், சுய தொழில் தொடங்குவதற்கு புதிய திட்டங்கள் ஆகியவை இடம் பெற உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  • 05 Aug 2026 08:30 AM (IST)

    பள்ளி மாணவர்களுக்கு சத்துணவில் சிக்கன் பிரியாணி?

    இந்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் ஆசிரியர் சங்கங்கள் தமிழகப் பள்ளிக்கல்வித் துறைக்கு நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்ததை ஏற்று, வாரத்திற்கு ஒருமுறை மாணவர்களுக்குச் சிக்கன் பிரியாணி வழங்குவதற்கான அறிவிப்பு வெளியாகுமா? என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. ஏற்கெனவே, இதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் கூறியிருந்தார்.

  • 05 Aug 2026 08:20 AM (IST)

    தனியார் வசமாகிறதா டாஸ்மாக் நிர்வாகம்

    முக்கிய அறிவிப்பாக தமிழகத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளை தனியார் வசம் ஒப்படைக்கலாம் என்ற அறிவிப்பு வெளியாக இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.. மதுபானங்களை அரசே விற்பனை செய்வதால் தான் அரசுக்கு கெட்ட பெயர் வருகிறது. இதனை தவிர்ப்பதற்காக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் அரசுடைமையாக்கப்பட்ட மதுபான விற்பனையை தனியார் மயமாக்குவது தொடர்பான சட்ட திருத்தம் குறித்த அறிவிப்பை முதல்வர் விஜய் அறிவிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

  • 05 Aug 2026 08:10 AM (IST)

    தண்ணீர் இல்லை பேட்சை அணிந்து வர திமுக ப்ளான்

    இன்று சட்டப்பேரவைக்கு வருகை தரும் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் “தண்ணீர் இல்லை” என்ற வாசகம் இடம்பெற்ற பேட்ச் அணிந்து வர திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காவிரி நீர் பிரச்சினையில் தமிழக அரசின் செயல்பாட்டை கண்டிக்கும் வகையிலும், இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறது.

  • 05 Aug 2026 08:00 AM (IST)

    சட்டம் – ஒழுங்கு & காவல் மரணங்கள்:

    தவெக ஆட்சி அமைந்த இந்த மூன்று மாதங்களில் மாநிலத்தில் கொலை, கொள்ளை மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், 4 காவல் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பேரவையைச் சூடேற்றும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  • 05 Aug 2026 07:50 AM (IST)

    திடீர் மின் கட்டண உயர்வு குளறுபடி:

    கடந்த ஜூலை மாதத்தில் சுமார் 3.75 லட்சம் வீடுகளுக்கு வழக்கப்பட்ட மின்கட்டணம் பல மடங்கு உயர்ந்து வந்த விவகாரம் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான அருண் ராய் குழுவின் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மின்வாரிய குளறுபடிகளை எதிர்க்கட்சிகள் கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 05 Aug 2026 07:40 AM (IST)

    மேகதாட்டு அணை & கர்நாடகப் பயணம் சர்ச்சை:

    காவிரியின் குறுக்கே மேகதாட்டு அணட்டியே தீருவோம் என கர்நாடகா பிடிவாதம் காட்டி வரும் சூழலில், அம்மாநில முதலமைச்சர் டி.கே. சிவகுமாரைச் சந்திக்க முதலமைச்சர் விஜய் திட்டமிட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டாமல் தனித்துச் செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வரும் நிலையில், இப் பிரச்சனை பேரவையில் புயலைக் கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  • 05 Aug 2026 07:25 AM (IST)

    எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது நடவடிக்கை!

    தஞ்சாவூர் பொதுக்கூட்டத்தில் பேசிய பேச்சு தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் திடீரெனக் கைது செய்யப்பட்டுத் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் மிகப்பெரிய அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ள நிலையில், இந்த விவகாரம் பேரவையில் மாபெரும் புயலாக வெடிக்கும் எனக் எதிர்பார்க்கப்படுகிறது.

  • 05 Aug 2026 07:20 AM (IST)

    பேரவையைச் சூடேற்ற எதிர்க்கட்சிகள் பிளான்

    ஒருபுறம் அரசின் அறிவிப்புகள் குறித்த எதிர்பார்ப்பு நிலவினாலும், மறுபுறம் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்வைத்துச் சட்டப்பேரவையில் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்யத் திட்டமிட்டுள்ளன.

  • 05 Aug 2026 07:13 AM (IST)

    நேரலையில் எங்கு பார்க்கலாம்?

    தமிழக பட்ஜெட்டை உடனுடக்குடன் டிவி9 தமிழ் இணையதள பக்கத்திலும் மற்றும் டிவி9 தமிழ் செய்தி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களிலும் உடனுக்குடன் நேரலையாகப் பார்க்கலாம். மேலும் பட்ஜெட்டின் போது வெளியிடப்படும் முக்கிய அறிவிப்புகள் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் கருத்துக்களையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம்.

  • 05 Aug 2026 07:12 AM (IST)

    தமிழ்நாடு பட்ஜெட் நேரலை எப்போது?

    தமிழக பட்ஜெட் சட்டமன்றத்தில் இன்று (ஆகஸ்ட் 5, 2026)  காலை 10 மணிக்கு தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்யவுள்ளார். வேளாண்மை பட்ஜெட் அடுத்த நாள் ஆகஸ்ட் 6, 2026 அன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது.

  • 05 Aug 2026 07:10 AM (IST)

    தேர்தல் வாக்குறுதிகள் குறித்த பெரும் எதிர்பார்ப்புகள்

    தவெக அரசு தனது முதல் பட்ஜெட்டிலேயே முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்ற பெரும் எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் நிலவி வருகிறது. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை: குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2,500 வழக்கம் திட்டம். இலவச எரிவாயு உருளைகள்: ஆண்டிற்கு 6 இலவச சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கும் திட்டம். வேலையில்லா இளைஞர்களுக்கான நிதியுதவி மற்றும் பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டத்தின் விரிவாக்கம். இவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறுமா என்பதைத் தமிழக மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

  • 05 Aug 2026 07:10 AM (IST)

    2 மாத கால தீவிர ஆலோசனையும் எதிர்பார்ப்புகளும்

    கடந்த ஜூன் மாதம் ஆளுநர் உரையுடன் புதிய அரசின் முதல் பேரவைக் கூட்டத்தொடர் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பட்ஜெட் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுதல், துறைவாரியான நிதி ஒதுக்கீடு, புதிய நலத்திட்டங்கள் போன்றவற்றைத் திட்டமிட ஜூலை மாதம் முழுவதும் முதலமைச்சர் விஜய் அதிகாரிகளுடனும் அமைச்சர்களுடனும் தொடர் ஆலோசனைகளை நடத்தினார். இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் என்னென்ன முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்ற ஆவல் மக்களிடையே பெருமளவில் எழுந்துள்ளது.

  • 05 Aug 2026 07:05 AM (IST)

    இன்று தாக்கல் ஆகிறது தவெக அரசின் முதல் முழு பட்ஜெட்!

    தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை இன்று (ஆகஸ்ட் 5, புதன்கிழமை) சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை (ஆகஸ்ட் 6, வியாழக்கிழமை) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒருபுறம் புதிய அறிவிப்புகள் குறித்த மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், மறுபுறம் எதிர்க்கட்சியான திமுக உள்ளிட்ட கட்சிகள் பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்துச் சட்டப்பேரவையில் புயலைக் கிளப்பத் திட்டமிட்டுள்ளன.

Published On - Aug 05,2026 7:00 AM

Follow Us