ஜூனியர் பிக் பாஸை மாற்ற நினைத்த தன்யா.. அன்சருக்கு ஆதரவாக எழுந்த ஜேசன் – எமோஷனலான ப்ரோமோ!
Bigg Boss Season 10: தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமான ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10. இந்த நிகழ்ச்சியானது கிட்டத்தட்ட 67 நாட்களாகியுள்ள நிலையில், தற்போது மூன்றாவது ஜூனியர் பிக் பாஸாக அன்சர் இருக்கிறார். இந்நிலையில், அவரின் பதவி மாற்றம் குறித்து மற்றவர்கள் எமோஷனலான ப்ரோமோ குறித்த இணையத்தில் வைரலாகிவருகிறது.
மக்கள் மத்தியில் சிறந்த ரியாலிட்டி நிகழ்ச்சியாக இருந்துவருவது பிக் பாஸ் சீசன் 10 (Bigg Boss Season 10). இந்த நிகழ்ச்சியை மக்கள் சிறப்பான வரவேற்பை பெற்றுவருகிறது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி (Vijay Sethupathi) தொகுப்பாளராக தொகுத்துவரும் நிலையில், 10வது வாரத்தின் இறுதியில் உள்ளது. இந்த வாரத்தில் ஜூனியர் பிக் பாஸ் டாஸ்கானது நடந்துவருகிறது. அந்த விதத்தில் முதல் ஜூனியர் பிக் பாஸாக (Junior Bigg Boss) வினோத் பாபு முதலில் இருந்தார். அதையடுத்து முனியம்மாள் இருந்தார். தற்போது அடாவடி அன்சர் தற்போது ஜூனியர் பிக் பாஸாக இருந்துவருகிறார்.
இவரை ஜூனியர் பிக் பாஸ் பதவியிலிருந்து மாற்றவேண்டும் என தன்யா கூறியுள்ளார். அந்த விதத்தில் அன்சருக்கு ஆதரவாக பிக் பாஸ் போட்டியாளர்கள் கையை உயர்த்தியது தொடர்பான ப்ரோமோ வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.




இதையும் படிங்க: உண்மையிலேயே அபாரம்… சூர்யாவின் சீன் படத்தை பாராட்டி பேசிய கௌதம் ராம் கார்த்திக்!
அடாவடி அன்சருக்காக ஆதரவாக எழுந்த போட்டியாளர்கள்:
அந்த ப்ரோமோவில், “தன்யா எழுந்து உடனே அன்சர் அவரை ஜூனியர் பிக் பாஸ் பதவிலியிலிருந்து விலகவேண்டம் என அவர் கூறியிருந்தார். உடனே அவருக்கு ஆதரவாக எழுந்த சாதிகா, ஒரு கலைஞரின் கஷ்டம், அவர் முன்னேறுவதற்கான பதய் மற்றும் அன்சரின் வாழ்க்கை குறித்து எமோஷனலாக பேசியிருந்தார். உடனே அன்சர் கண் கலங்கியிருந்தார்.
இதையும் படிங்க: யோகி பாபுவின் அன் ஆர்டினரி மேன் படத்திலிருந்து வெளியானது 2-வது சிங்கிள்!
முகேஷ், யாரெல்லாம் அன்சரை பதவி மாற்ற நினைக்கிறீர்கள் என கேட்டதும், கிட்டத்தட்ட 7 போட்டியாளர்கள் கையை உயர்த்தியிருந்தனர். உடனே எழுந்த ஜேசன், இவர்தான் ஜூனியர் பிக் பாஸ் பதவிக்கு பொருத்தமானவர், வேறு யாருமில்லை என அவர் தெரிவித்திருந்தார்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியின் 67 நாளின் 3வது ப்ரோமோ குறித்த எக்ஸ் பதிவு:
#Day67 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 10 – இன்று இரவு 9:30 மணிக்கு.. நம்ம விஜய் டிவில..
#BiggBossTamilSeason10 #Ottikichi #VijaySethupathi #CarniVizha #BiggBossSeason10Tamil #BiggBoss10 #BiggBossSeason10 #BiggBossTamilBB10 #VijayTV #VijayTelevision https://t.co/rHKifosMsL
— Vijay Television (@vijaytelevision) November 12, 2026
இந்த பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் மொத்தம் தற்போது வெறும் 12 போட்டியாளர்களே உள்ளனர். அந்த விதத்தில் இந்த வாரத்தில் கிட்டத்தட்ட 7 போட்டியாளர்கள் நாமினேஷனில் உள்ளனர். அந்த வகையில் டிடிஃஎப் வாசன் அதிக வாக்குகள் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளார். மேலும் இந்த வாரத்தில் எந்த எவிக்ஷன் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வாரத்தில் டபுள் எவிக்ஷன் இருந்த நிலையில், இந்த வாரத்தில் இருக்காது என கூறப்படுகிறது.