Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Thalapathy Vijay

Thalapathy Vijay

விஜய்
நடிகர் விஜய், தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகராவார். இவரின் தந்தை பிரபல இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆவார். தாயார் ஷோபா பாடகி மற்றும் தயாரிப்பாளராவார். விஜய் 1992 ஆம் ஆண்டு நாளைய தீர்ப்பு என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து பாடகர், தயாரிப்பாளர் என பன்முக திறமையும் கொண்டிருந்தார். ஆரம்ப காலக்கட்டங்களில் ரசிகர்களால் இளைய தளபதி என அழைக்கப்பட்ட திரையுலகின் உச்சத்தில் இருக்கும்போது தளபதியாக பரிணாமிக்க தொடங்கினார். 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கிய அவர் தனது 69வது படத்தோடு சினிமாவில் இருந்து விலக உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு செயல்படும் விஜய் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். சினிமாவில் ஸ்டாராக ஜொலித்த விஜய், இனி அரசியலிலும் பிரகாசிப்பார் என்ற நம்பிக்கையோடு ரசிகர்கள், தொண்டர்கள் காத்திருக்கின்றனர். நாம் இந்த தொகுப்பில் தளபதி விஜய் பற்றிய தகவல்களை காணலாம்.

Read More

TVK Vijay: அன்றாட பணிகளை கவனிக்க தனிக்குழு.. புது வியூகம் வகுக்கும் தவெக தலைவர் விஜய்..!

Tamilaga Vettri Kazhagam: கடந்த 2025 செப்டம்பர் 27ம் தேதி கரூர்-ஈரோடு நெடுஞ்சாலையில் உள்ள வேலுசாமிபுரத்தில் தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது இந்த அரசியல் பேரணிக்காக ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த நிலையில், பலரும் காயமடைந்தனர்.

நெல்மணிகள் வீணாகி முளைத்தது போல… திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவது உறுதி – விஜய் வெளியிட்ட அறிக்கை

TVK VIjay : தவெக தலைவர் விஜய் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொடர் மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல மக்கள் விரோத தி.மு.க.ஆட்சிக்கு எதிரானத் தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டுக்கு அனுப்பப் போவது உறுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

விஜயின் நடிப்பில் வெளியாகி 14 வருடத்தை நிறைவு செய்கிறது வேலாயுதம் படம்!

14 Years Of Velayudham Movie: நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றப் படம் வேலாயுதம். இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பாக இயக்குநர் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கரூர் கூட்ட நெரிசல்.. முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்த சிபிஐ.. ஏ1, ஏ2, ஏ3 லிஸ்டில் யார் பெயர்?

CBI FIR On Karur Stampede: சிபிஐ தரப்பில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதில், ஏ1 (A1) ஆக கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், ஏ2 (A2) ஆக மாநில பொதுச் செயலாளர் என். ஆனந்த், ஏ3 (A3) ஆக இணைச் செயலாளர் நிர்மல் குமார் இணைக்கப்பட்டுள்ளனர்.

கப்பு முக்கியம் பிகிலு… 6 ஆண்டுகளைக் கடந்தது நடிகர் விஜயின் பிகில் படம்!

6 Years Of Bigil Movie : நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடித்தப் படங்கள் ரசிகர்களிடையே தொடர்ந்து நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பிகில் படம் இன்றுடன் 6 வருடங்களைக் கடந்துள்ளது.

கரூர் பிளானை கேன்சல் செய்யும் விஜய்? என்ன காரணம்? வெளியான தகவல்..

Vijay Karur Visit: 41 பேரின் குடும்பத்தினரையும் கரூரில் உள்ள மண்டபத்தில் வைத்து தவெக தலைவர் விஜய் சந்திப்பதாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அனுமதி கிடைக்காத நிலையில், தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகம் தரப்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிஸ்டில் 5 சின்னம்.. விசில் தான் வேண்டும்.. தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பிக்க த.வெ.க திட்டம்..

TVK Symbol For Election: தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள 184 ஒதுக்கப்படாத சின்னங்களில் லேப்டாப், தொலைக்காட்சி, பேட், விசில் உள்ளிட்ட பல சின்னங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் ஏதேனும் ஐந்து சின்னங்களைத் தேர்வு செய்து தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் விண்ணப்பிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜகவுடன் விஜய்க்கு கூட்டா..? கருணாஸ் கடுமையான விமர்சனம்!

நடிகரும், முக்குலத்தோர் புலிப்படை தலைவருமான கருணாஸ் இன்று அதாவது 2025 சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார். இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாரதிய ஜனதா கட்சி கம்போஸ் செய்த பாடலுக்கு நடனம் ஆட ஒரு நடிகர் கிடைத்திருக்கிறார். தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் பூட்டு உள்ளே போட்டு இருக்கிறதா அல்லது வெளியே போட்டு இருக்கிறதா என்பதை பனையூர் சென்று பார்த்தால்தான் தெரியும்” என்றார்.

Friends: விஜய் – சூர்யா கூட்டணி.. ரீ- ரிலீசாகும் ‘ப்ரண்ட்ஸ்’ படம்.. எப்போது?

Friends Movie Re- release: தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களாக இருந்து வருபவர்கள் தளபதி விஜய் மற்றும் சூர்யா. இவர்கள் இருவரின் கூட்டணியில் இதுவரை மொத்தமே 2 படங்கள்தான் வெளியாகியிருக்கிறது. அதில் மக்களிடையே பிரம்மாண்ட வரவேற்பை பெற்ற திரைப்படம்தான் ப்ரண்ட்ஸ். இந்த படமானது ரீ ரிலீசாகவுள்ளது. அது எப்போது குறித்து பார்க்கலாம்.

மின்சார கண்ணா படம் தோல்வியடைய இதுதான் காரணம் – கே.எஸ்.ரவிக்குமார் ஓபன் டாக்

Minsara Kanna movie: முன்னதாக நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா படம் தோல்வியை சந்தித்து இருந்தது. இந்தப் படம் தோல்வியை சந்திக்க பல காரணங்கள் சினிமா வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் படத்தின் இயக்குநர் இது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார்.

Leo Movie: ‘நா ரெடிதான் வரவா’.. இன்றோடு 2 வருடங்கள்.. விஜய்யின் லியோ திரைப்படம்!

2 years Of Leo: தென்னிந்திய சினிமாவில் பல கோடி ரசிகர்களின் தளபதியாக இருந்துவருபவர் விஜய். இவரின் முன்னணி நடிப்பிலும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் லியோ. இன்றுடன் இந்த திரைப்படமானது வெளியாகி 2 வருடங்களை நிறைவு செய்துள்ளது. இது தொடர்பான சிறப்பு வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Mamitha Baiju: விஜய் சாருடன் நடித்தது வாழ்க்கையின் மிகப்பெரிய சாதனை- மமிதா பைஜூ ஓபன் டாக்!

Mamitha Baiju About Thalapathy Vijay: தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளில் பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்துவருபவர் மமிதா பைஜூ. இவர் தளபதி விஜய் முதல் சூர்யா வரை பல்வேறு உச்ச நடிகர்களுடன் இணைந்து நடித்திருக்கிறார். அந்த வகையில் தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்தில் நடித்தது தனது வாழ்க்கையில் மிகப்பெரிய சாதனை என அவர் பேசியுள்ளார்.

விஜய் தலைமையில் புதிய கூட்டணி – டிடிவி தினகரன் சொன்ன சீக்ரெட்

TTV Dhinkaran : 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுககு இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் பரபரப்பாகியிருக்கிறது. இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன், விஜய் தலைமையில் புதிய கூட்டணி உருவாகும் என்றார்.

தீபாவளி கொண்டாட வேண்டாம்…. தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தல்

TVK Vijay : கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் இந்த ஆண்டு தீபாவளியைக் கொண்டாட வேண்டாம் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவிக்கும் விதமாக அவர் அறிவுறுதத்தியுள்ளார்.

19 நாட்களுக்கு பின் பனையூர் சென்ற விஜய்.. நிர்வாகிகளுடன் சந்தித்து பேசியது என்ன?

TVK Leader Vijay At Panaiyur: ஜாமீன் பெற்ற மதியழகன் மற்றும் பவுன்ராஜ் கரூரில் இருந்து அக்டோபர் 16, 2025 அன்று (நேற்று) சென்னை வந்தனர். இருவருமே தமிழக வெற்றிக் கழக தலைமை அலுவலகமான பனையூர் அலுவலகத்தில் கட்சியின் தலைவர் விஜயை நேரில் சந்தித்து பேசினர்.