
Tamil Cinema Update
தமிழ் சினிமாவின் பயணம் என்பது கடந்த 1918-ம் ஆண்டு ஆர். நடராஜ முதலியார் என்பவர் இயக்கிய ஊமைப் படமான கீச்சக வாதம் என்றப் படம் வெளியானதில் இருந்தே தொடங்கி விட்டது. அப்போது தொடங்கிய தமிழ் சினிமா நடிப்பு, இசை, படங்களை தயாரிப்பது என்று பல துறைகளில் பல ஜாம்பவான்களை உருவாக்கியுள்ளது. குறிப்பாக தமிழ் சினிமாவின் அடையாளங்களாக பலர் மற்ற மொழிகளிலும் வெளி நாடுகளிலும் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். தமிழ் சினிமாவை மற்ற மொழியில் இருப்பவர்கள் கோலிவுட் சினிமா என்று அழைப்பார்கள். மேலும் இந்திய சினிமாவில் இந்தி மொழி படங்களுக்குப் பிறகு தமிழில் வெளியாகும் படங்களுக்கு உலக அளவில் பரவலாக ரசிகர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தமிழில் உருவாகும் படங்கள் உலக நாடுகளான மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் வெளியிடுவதால் உலக அளவில் தனக்கு என ஒரு தனி அடையாளத்தைப் பெற்றுள்ளது தமிழ் சினிமா. அத்தகைய தமிழ் சினிமாவில் தினந்தோறும் நடைபெறும் தகவல்களை காணலாம்.
சினிமா என்பது ஒரு கணிக்க முடியாத விளையாட்டு – இயக்குநர் ராம் பேச்சு!
Director Ram: தமிழ் சினிமாவில் தற்போது இயக்குநர் ராம் இயக்கத்தில் வெளியான பறந்து போ படம் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்தப் படம் குறித்து பிரபலங்களும் ரசிகரக்ளும் தொடர்ந்து தங்களது பதிவுகளை வெளியிட்டு வருகின்ற நிலையில் சினிமா குறித்து இயக்குநர் ராம் பேசியது வைரலாகி வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Jul 10, 2025
- 11:47 am
ஃப்ரீடம் முதல் ஓஹோ எந்தன் பேபி வரை… இந்த வாரம் கோலிவுட் சினிமாவில் என்ன புதுவரவு? லிஸ்ட் இதோ
Theatre Release Movies Update: கோலிவுட் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் புதுப் படங்கள் வரிசையாக வெளியாகி வருகின்றது. அந்த வகையில் இந்த ஜூலை மாதம் 2025-ம் ஆண்டில் இரண்டாவது வாரமும் படங்கள் வரிசையாக வெளியாகின்றது. அது என்ன என்ன படங்கள் என்பது குறித்து தற்போது பார்க்கலாம்.
- Vinothini Aandisamy
- Updated on: Jul 9, 2025
- 21:58 pm
Priyamani : அந்த ஹாலிவுட் வெப் தொடரின் ரீமேக்கில் நடிக்க ஆசை.. நடிகை பிரியாமணி பேச்சு!
Priyamani About Money Heist Web Series : தென்னிந்தியப் பிரபல நடிகைகளில் ஒருவர்தான் பிரியாமணி. இவர் தமிழ் , தெலுங்கு, மலையாள என பல்வேறு மொழி படங்களில் முன்னணி நடிகையாக நடித்துள்ளார். நேர்காணல் ஒன்றில் பேசிய இவர், மணி ஹெய்ஸ்ட் தொடர் தமிழ் ரீமேக்கில் நடிக்க ஆசை இருப்பதாகப் பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Jul 10, 2025
- 13:41 pm
Anushka Shetty : அது ஒரு அழகான நினைவு.. பர்ஸ்ட் லவ் குறித்து மனம் திறந்த அனுஷ்கா ஷெட்டி!
Anushka Shetty Talks About Her First Love : தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகப் படங்களில் நடித்து வருபவர் அனுஷ்கா ஷெட்டி. இவரின் நடிப்பில் பல படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டாயிருக்கிறது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் தனது முதல் காதல் குறித்து அனுஷ்கா ஷெட்டி மனம் திறந்து பேசியுள்ளார். அது என்ன என்பதை பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 21:39 pm
Mamitha Baiju : சூர்யாவின் ‘சூர்யா46’ படப்பிடிப்பில் இணைந்த நடிகை மமிதா பைஜூ!
Mamitha Baiju Joins Suriya46 Shoot : நடிகர் சூர்யாவின் முன்னணி நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் சூர்யா46. தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரியின் முன்னணி இயக்கத்தில் உருவாகிவரும் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமான நிலையில், நடிகை மமிதா பைஜூவும் இணைந்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 21:08 pm
சசிகுமாரின் ஃப்ரீடம் படத்திலிருந்து வெளியானது ஃப்ரீடம் படத்தின் 2-வது ஸ்னீக் பீக் வீடியோ!
Freedom Movie Sneak Peek 02 | நடிகர் சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள படம் ஃப்ரீடம். இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தில் இருந்து அடுத்த அடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Jul 9, 2025
- 19:40 pm
Dhanush : தனுஷின் பிறந்தநாள்: ரீ-ரிலீசாகும் ‘அம்பிகாபதி’ திரைப்படம்!
Dhanush Ambikapathy Movie Re- Release : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவரின் நடிப்பில் வெளியான முதல் இந்தி திரைப்படம் ராஞ்சனா, அந்த படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இந்த படமானது சுமார் 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழில் வெளியாகவுள்ளது.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 19:13 pm
கலையரசன் நடிப்பில் வெளியானது ட்ரெண்டிங் படத்தின் ட்ரெய்லர்
Trending - Official Trailer | நடிகர் கலையரசன் நாயகனகா நடித்துள்ள படம் ட்ரெண்டிங். இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லரைப் படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. அது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகின்றது.
- Vinothini Aandisamy
- Updated on: Jul 9, 2025
- 18:58 pm
பேச்சுலர் பட இயக்குநருடன் இணையும் நடிகர் விஷ்ணு விஷால்!
Vishnu Vishal: தமிழ் சினிமாவில் எந்தவித பின்புலமும் இன்றி நடிகராக அறிமுகம் ஆகி தனது சிறப்பான நடிப்பில் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகர் விஷ்ணு விஷால். இவர் தற்போது இரண்டு வானம் படத்தில் நாயகனாக நடித்து வரும் நிலையில் அடுத்ததாக நடிக்க உள்ள படம் குறித்து பேசியுள்ளார்
- Vinothini Aandisamy
- Updated on: Jul 9, 2025
- 18:25 pm
Coolie : பூஜா ஹெக்டேவின் சிறப்பு நடனத்தில்.. ‘கூலி’ திரைப்படத்தின் 2வது பாடல் ரிலீஸ் அறிவிப்பு!
Rajinikanth Coolie Movie Second Single Update : நடிகர் ரஜினிகாந்த்தின் முன்னணி நடிப்பில் ரிலீசிற்கு காத்திருக்கும் படம்தான் கூலி. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் இரண்டாவது பாடல் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 18:19 pm
Thalaivan Thalaivii : விஜய் சேதுபதி – நித்யா மேனனின் ‘தலைவன் தலைவி’ பட இசை வெளியீட்டு விழா எப்போது? அறிவிப்பு இதோ!
Thalaivan Thalaivii Movie Audio Launch Update : நடிகர் விஜய் சேதுபதியின் முன்னணி நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் தலைவன் தலைவி. இந்த படத்தை இயக்குநர் பாண்டிராஜ் இயக்கியிருக்கும் நிலையில், வரும் 2025 ஜூலை 25ம் தேதியில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 17:43 pm
தமிழ் சினிமா நெகட்டிவ் விமர்சனங்களால் பெரிய பிரச்சனையை எதிர்கொள்கிறது – இயக்குநர் பிரேம் குமார்
Director Prem Kumar: 96, மெய்யழகன் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமான இயக்குநராக இருப்பவர் இயக்குநர் பிரேம் குமார். இவர் சமீபத்தில் ஒரு கலந்துறையாடலில் கலந்துகொண்ட போது தமிழ் சினிமாவில் நெகட்டிவ் விமர்சனங்கள் நிறைந்து இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
- Vinothini Aandisamy
- Updated on: Jul 9, 2025
- 17:12 pm
Maareesan : வடிவேலு – ஃபகத் பாசிலின் ‘மாரீசன்’ – முதல் பாடல் வெளியீடு!
Maareesan Movie FAFA Song : நடிகர்கள் வடிவேலு மற்றும் ஃபகத் பாசில் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம்தான் மாரீசன். இந்த படத்தைப் பிரபல மலையாள இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கியுள்ளார். இப்படத்தின் ரிலீஸ் நெருங்கும் நிலையில், படக்குழு படத்தின் முதல் பாடலை வெளியிட்டுள்ளது.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 16:25 pm
Vishnu Vishal : முதல் படத்தில் என்னைத் தூக்கிட்டாங்க.. நடிகர் விஷ்ணு விஷால் உருக்கம்!
Vishnu Vishal About Cinema Struggles : பிரபல நடிகர்களில் ஒருவர்தான் நடிகர் விஷ்ணு விஷால். தமிழ் சினிமாவில் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் எனப் பல பணிகளைச் செய்து வருகிறார். இவர் தனது முதல் படத்தில் ரிஜெக்ட் ஆனது பற்றி ஓபனாக பேசியுள்ளார். அவர் பேசியது பற்றி விளக்கமாகப் பார்க்கலாம்.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 16:00 pm
Soori : வெற்றிமாறன் சொன்ன அந்த விஷயம்.. காமெடி கேரக்டர் குறித்து சூரி பேச்சு!
Soori Talk About Vetrimaaran : தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நட்சத்திர பிரபலங்களில் ஒருவர்தான் சூரி. இவர் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், முன்னதை பேசிய நேர்காணல் ஒன்றில், வெற்றிமாறன் தன்னிடம் சொன்னது அப்படியே நடந்த விஷயம் என்ன என்பதைப் பற்றி ஓபனாக பேசியுள்ளார்.
- Barath Murugan
- Updated on: Jul 9, 2025
- 08:46 am