Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
MK Stalin

MK Stalin

மிழக மற்றும் இந்திய அரசியலில் மறுக்கவும் மறக்கவும் முடியாத நபர் மு. கருணாநிதி. மு. கருணாநிதி மற்றும் தயாளு அம்மாள் தம்பதிக்கு மூன்றாவது மகனாக பிறந்தவர் மு.க.ஸ்டாலின். 1953-ஆம் ஆண்டு ஸ்டாலின் பிறந்த நேரமே சோவியத் ஒன்றியத்தின் ஆட்சித் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலின் மறைந்த காலம். சரியாக முகஸ்டாலின் பிறந்த 4 நாட்களில் ஜோசப் ஸ்டாலின் மறைந்தார். அதனால் அவரின் நினைவாக ஸ்டாலின் என பெயரிப்பட்டார். சிறு வயது முதலே தந்தை கருணாநிதியின் அரசியல் பாதையை தேர்ந்தெடுத்து பின்பற்றி வந்தவர், 2006 முதல் 2011 வரை தமிழகத்தின் உள்ளாட்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். மே 2009 முதல் மே 15, 2011 வரை துணை முதலமைச்சராகவும் பொறுப்பு வகித்துள்ளார். முன்னதாக, 1996 முதல் 2002 வரை சென்னை மாநகராட்சியின் மேயராகவும் பொறுப்பில் இருந்து சென்னைக்கு பல முன்னெடுப்புகளை செய்துள்ளார். மு. கருணாநிதியின் மறைவுக்குப் பின் 2018 முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராகப் பொறுப்பில் உள்ளார். தற்போது தமிழகத்தின் முதலமைச்சராகவும் உள்ளார்.

Read More

விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு – அமைச்சர் அறிவிப்பு

Rain Relief Aid : வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20,000 இழப்பீடு உடனடியாக வழங்க முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 85,500 ஹெக்டேர்கள் வரை பயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது என பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

டிட்வா புயல் பாதிப்பு.. உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் உத்தரவு..

Ditwah Cyclone Damage: டிசம்பர் 1, 2025 அன்று முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆய்வுக்கூட்டத்தில், வடகிழக்கு பருவமழையாலும் குறிப்பாக டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் பெய்துள்ள கனமழை மற்றும் பிற மாவட்டங்களில் பரவலாக பெய்து வரும் மழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

“இலங்கைக்கு துணை நிற்க தமிழ்நாடு தயார்”.. முதல்வர் ஸ்டாலின் உறுதி!!

இதனிடையே, புயலால் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ள இலங்​கைக்கு சாகர் பந்து திட்டத்தின் கீழ் இந்தியா நிவாரணப் பொருட்​களை விமானம் தாங்கிக் கப்பலான ஐஎன்​எஸ் விக்​ராந்த் மூலம் அனுப்பி வைத்துள்ளது. அதோடு, 80க்கும் மேற்பட்ட பேரிடர் படையினரையும் மீட்பு பணிகளுக்காக அனுப்பி வைத்துள்ளது.

Karthi: தந்தை சிவகுமாருக்கு டாக்டர் பட்டம்.. முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த கார்த்தி!

Karthi on Shivakumars Doctorate: தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்துவருபவர் கார்த்தி. இவரின் தந்தையும் நடிகருமான சிவகுமாருக்கு சமீபத்தில், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் டாக்டர் பட்டம் வழங்கியிருந்தார். இந்நிலையில் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து, நடிகர் கார்த்தி தனது எக்ஸ் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்திற்கு வஞ்சகம் செய்யும் மத்திய அரசு.. குட்ட குட்ட குனிய மாட்டோம் – முதல்வர் ஸ்டாலின்..

CM MK Stalin: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பதிவில், "தமிழ்நாட்டின் கோரிக்கைகள், தேவைகளை கடிதங்களாகவும், நேரில் மனுக்களாகவும், சட்டமன்றத் தீர்மானங்களாகவும் எடுத்துச் சொல்லியும் காதில் வாங்காமல் இருப்பது நியாயம் இல்லை. குட்ட குட்ட குனிய மாட்டோம் என குறிப்பிட்டுள்ளார்.

தித்வா புயல்…. ‘அவசியமின்றி வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்’ – முதல்வர் எச்சரிக்கை

State Issues Warning: தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை மீட்பு குழுவினர் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் தித்வா புயல் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனைத்து துறைகளும் முறையான திட்டமிடலோடு ஒருங்கிணைந்து செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என அவர் முதல்வர் உத்தரவிட்டார்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்: அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

சில மாவட்டங்களில் நவம்பர் 29 மற்றும் 30 தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளதை முதல்வர் குறிப்பிட்டார். இதனால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பேரிடர் நடவடிக்கைகளுக்கு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தியுள்ளார்.

துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றம்.. முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை!

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டமலாக வலுப்பெற்றுள்ள நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால், 3 நாட்களுக்கு தமிழகத்தில் கன முதல் அதிகனமழை பெய்யக்கூடும்.

ஈரோட்டில் வளர்ச்சி திட்டங்கள்.. தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக மேற்கு மாவட்டங்களுக்கு சென்றுள்ளார். அதன்படி, இன்று அதாவது 2025 நவம்பர் 26ம் தேதி ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகளில் பங்கேற்று, சில முக்கிய திட்டங்களைத் தொடங்கி வைத்தார். அதன்படி, மொத்தம் ரூ.605 கோடி மதிப்பிலான புதிய முயற்சிகளுக்கு அடிக்கல் நாட்டினார். 

தென்காசி விபத்து.. தாயை இழந்த பார்வை மாற்றுத்திறனாளிக்கு அரசு வேலை – முதல்வர் அறிவிப்பு

TN Govt Extends Help : தென்காசியில் கடந்த நவம்பர் 24, 2025 அன்று இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் தாயை இழந்த பார்வை மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு சென்ற முதல்வர் முக ஸ்டாலின்.. அரசு நிகழ்வுகளில் பங்கேற்பு

தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் சமீபத்தில் கோவை பயணம் மேற்கொண்டு செம்மொழி பூங்காவை திறந்து வைத்தார். இந்நிலையில் இன்று அவர் ஈரோடு பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டார். சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சிலைக்கு மரியாதை செய்த அவர் அங்கு அமைக்கப்பட்ட அருங்காட்சிக பொருட்களை பார்வையிட்டார்

அதிமுகவை விட இரண்டரை மடங்கு முதலீடுகளை ஈர்த்துள்ளோம் – முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு..

CM MK Stalin: கடந்த ஆட்சியில் 62,000 நிறுவனங்கள் இருந்த நிலையில், திமுக ஆட்சியில் 72,000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் உள்ளன. அதிமுக ஆட்சியை விட இரண்டரை மடங்கு அதிக முதலீடுகளை திமுக ஈர்த்துள்ளது என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கோவை மாநாட்டில் பேசியுள்ளார்.

23 வகையான தோட்டங்கள், 2000 ரோஜா வகைகள், விளையாட்டு திடல்.. அதிநவீன வசதிகளுடன் கோவையில் திறக்கப்பட்ட செம்மொழி பூங்கா..

Coimbatore Semmozhi Park: கோவை மாநகராட்சி காந்திபுரம் மத்திய சிறைச்சாலை வளாகப் பகுதியில் 165 ஏக்கர் நிலப்பரப்பில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு, முதல் கட்டமாக 45 ஏக்கர் நிலப்பரப்பில் உலகத் தரத்துக்கான பூங்கா அமைப்பதற்காக 208.50 கோடி ரூபாய் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.

கோவையில் செம்மொழி பூங்கா.. வருகை தந்த முதல்வர் ஸ்டாலின்!

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் 45 ஏக்கர் பரப்பளவில் ரூ.208.50 கோடி மதிப்பீட்டில் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். விதவிதமான பூக்கள், செடிகள், மூலிகை செடிகள் என பல வகையான தாவர வகைகள் வளர்க்கப்பட்டுள்ளன. மேலும் நீர் வீழ்ச்சிகள், விலங்குகளில் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன

எய்ம்ஸ் வராது… மெட்ரோவையும் வரவிட மாட்டோம்…. மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்

MK Stalin Accuses Centre : கோயம்புத்தூர் மற்றும் மதுரை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கவில்லை என கூறி முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது பதிவில், எய்ம்ஸ் வராது, மெட்ரோ ரயிலையும் வரவிட மாட்டோம் என பாஜக வஞ்சிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.