AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

R. Sakkarapani Tamil Nadu Election: தோல்வியை கண்டிராத தொடர் வெற்றியாளர் சக்கரபாணி… ஒட்டன்சத்திரம் தொகுதியில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா!

Tamil Nadu Elections 2026: திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1996- ஆம் ஆண்டு முதல் 2021- ஆம் ஆண்டு வரை ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் தோல்வி அடையாமல் தொடர் வெற்றியை பதிவு செய்து வருகிறார் ஆர். சக்கரபாணி. வரும் தேர்தலில் 7- ஆவது முறை வெற்றியை பதிவு செய்வாரா.

Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 18 Mar 2026 13:48 PM IST
தமிழக அமைச்சரவையில்  உணவு மற்றும் குடிமைப் பொருட்கள் வழங்கல் துறை அமைச்சராக இருந்து வருபவர் ஆர். சக்கரபாணி.  இவர்,  கடந்த 1961- ஆம் ஆண்டு  ஏப்ரல் 10-ஆம் தேதி பிறந்தார்.  இவர்,  திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்து  1996- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில்  ஒட்டன்சத்திரம்  சட்டமன்ற தொகுதியில்  வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.  அப்போது  தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்  செல்லமுத்துவை  58.57 சதவீத வாக்குகள் பெற்று  வெற்றியை பதிவு செய்தார்.

1 / 5
பின்னர்,  2001 சட்டமன்ற தேர்தலில் அதே தொகுதியில் களமிறங்கிய சக்கரபாணி அதிமுக வேட்பாளர் ஏ. டி. செல்லசாமியை வீழ்த்தி 46.4 சதவீத வாக்குகள் பெற்று  மீண்டும் வெற்றியை நிரூபித்தார். தொடர்ந்து, கடந்த 2006 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் கே. பி. நல்லசாமியை  53.66 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியை நிலை நிறுத்தினார். 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளர் பி. பாலசுப்பிரமணியனை  51.99 சதவீத வாக்குகள் பெற்று  எம்எல்ஏ பதவியை தக்க வைத்துக்கொண்டார்.

2 / 5
இதே போல, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் மீண்டும் இதே தொகுதியில் களமிறங்கிய சக்கரபாணி அதிமுக வேட்பாளர் கே. கிட்டுவை விட 64.26 சதவீத வாக்குகள் பெற்று  வெற்றி பெற்றார். இதன் தொடர்ச்சியாக 2021 சட்டமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர் என். பி. நடராஜனை விட 54.51 சதவீத வாக்குகள் பெற்று  வெற்றியை உறுதி செய்தார் சக்கரபாணி. கடந்த 1996 முதல் 2021 சட்டமன்ற தேர்தல் வரை  தோல்வியின்றி  தொடர்ச்சியாக வெற்றியை பதிவு செய்து வந்துள்ளார் சக்கரபாணி.

3 / 5
இவரது வெற்றி  மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதிக்கு அடுத்தபடியாக உள்ளது. இதே போல, கடந்த 2016- ஆம் ஆண்டு முதல் தற்போது வரை  திமுக சட்டமன்ற கொறடாவாக  சக்கரபாணி இருந்து வருகிறார். தொடர்ச்சியாக 6  முறை  வெற்றியை பதிவு செய்து வந்த  சக்கரபாணிகள்  முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில்  உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது.

4 / 5
ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில்  தொடர்ச்சியாக  வெற்றியை பதிவு செய்து வரும் சக்கரபாணிக்கு வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மீண்டும்  வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில்,  அவருக்கு வெற்றி வாய்ப்பு  அமோகமாக இருப்பதாக  கட்சியினர்  கூறி வருகின்றனர்.  இதனால், 7-  ஆவது முறையும்  சக்கரபாணி எம்எல்ஏ பதவியை தன் வசம்  வைத்துக் கொள்வார் என்றே கூறப்படுகிறது.  அதே வேளையில்  அதிமுகவின் வேட்பாளர்  வலிமையாக களம் இறக்கப்படும் பட்சத்தில் தேர்தல் களம்  மாறவும் வாய்ப்பு உள்ளது.

5 / 5
Follow Us