Gold - தங்கம்
தங்கம் உலக அளவில் மிக விலை உயர்ந்த உலோகங்களில் ஒன்றாக உள்ளது. தங்கத்தை மனிதர்களால் செயற்கையாக உருவாக்க முடியாது என்பதால் அதன் மதிப்பு மேலும் மேலும் உயர்ந்துக்கொண்டே தான் செல்கிறது. தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் மாற்றத்திற்கு உண்டாகும். உலக பொருளாதாரம், அரசியல், உலக நாடுகள் இடையேயான உறவு ஆகியவற்றை மையப்படுத்தி இந்த விலை மாற்றம் நிகழும். தங்கம் ஒரு விலை உயர்ந்த உலோகமாக மட்டும் இல்லாமல் அது ஒரு முதலீடாகவும் உள்ளது. குறிப்பாக இந்திய குடும்பங்களின் முதன்மை முதலீடாக தங்கம் உள்ளது. எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள தங்கம் கைகொடுக்கும் என்பதால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தை எப்போது வேண்டுமானாலும், உலகின் எந்த மூலையில் வேண்டுமானாலும் உடனடியாக விற்பனை செய்துக்கொள்ளலாம் என்பதால் இது சிக்கலற்ற மற்றும் சிறந்த லாபம் தரும் முதலீடாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
2026-ல் தான் ஆட்டமே இருக்கிறது.. தங்கம் விலை அதிரடியாக உயரும்.. ஷாக் கொடுக்கும் தரகு நிறுவனம்!
Gold Price Will Hike In 2026 | 2025-ல் தங்கம் மிக கடுமையான விலை உயர்வை சந்தித்துள்ள நிலையில், 2026-ல் தங்கத்தின் விலை என்னவாக இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து வருகிறது. இந்த நிலையில், 2026-ல் தங்கம் மேலும் உயர்வை சந்திக்கும் என்று வென்சுரா நிறுவனம் தெரிவித்துள்ளது.
- Vinalin Sweety
- Updated on: Dec 7, 2025
- 16:23 pm IST