AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சம் வரை செல்லும்.. பகீர் கிளப்பும் பொருளாதார வல்லுநர்கள்!

10 Grams Gold May Sell For 2 Lakh Rupees In India | ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை கடும் உயர்வை சந்திக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சம் வரை செல்லும்.. பகீர் கிளப்பும் பொருளாதார வல்லுநர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Mar 2026 14:54 PM IST

ஈரான் (Iran), இஸ்ரேல் (Israel) மற்றும் அமெரிக்கா (America) இடையே மிக கடுமையான மோதல் நிலவி வரும் நிலையில், தங்கம் (Gold) மற்றும் வெள்ளி (Silver) உச்சத்தை அடைய வாய்ப்பு உள்ளதாக உலக பொருளாதார வல்லுநர்கள் கணிப்பு வெளியிட்டுள்ளனர். பொதுவாக புவிசார் பதற்றங்கள் அதிகரிக்கும்போது உலக முதலீட்டாளர்கள் பாதுகாப்பான தங்கம் மற்றும் வெள்ளியில் அதிகம் முதலீடு செய்வர். இதன் காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி கடும் உச்சத்தை தொடும். தற்போது மத்திய கிழக்கில் வெடித்துள்ள மோதலும் தங்கம் மற்றும் வெள்ளி விலையில், வரலாறு காணாத மாற்றத்தை உருவாக்க கூடும் என கூறப்படுகிறது.

தங்கம் விலை 6000 டாலர்களை எட்டுமா?

இன்றைய எம்சிஎக்ஸ் சந்தை வர்த்தகத்தில் ஏப்ரல் 2026 முடியும் தங்க ஒப்பந்தம் விலை 10 கிராமுக்கு ரூ.5,811 உயர்ந்துள்ளது. இதன் காரணமாக 10 கிராம் தங்கம் ரூ.1,67,915 ஆக வர்த்தகமானது. இதேபோல மார்ச் 5, 2026 உடன் முடியும் வெள்ளி ஒப்பந்த விலை ஒரு கிலோவுக்கு ரூ.9,492 உயர்ந்து ரூ.2,84,490 ஆக உள்ளது. மேலும் சர்வதேச சந்தையில் ஸ்பாட் தங்கம் 1 சதவீதம் உயர்ந்து ஒரு அவுன்ஸ் ரூ.5,329 லாடர்களாக ஆக உள்ளது. இந்த நிலையில், வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் மீண்டும் 100 டாலருக்கும், தங்கம் விலை 600 டாலரை எட்டுமா என்பது முக்கிய கேள்வியாகவும், எதிர்பார்ப்பாகவும் மாறியுள்ளது.

இதையும் படிங்க : ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனிமேல் யுடிஎஸ் செயலி இல்லை.. ரயில் ஒன் செயலி தான்.. இன்று முதல் புதிய நடைமுறை!

10 கிராம் தங்கம் ரூ.2 லட்சம் வரை செல்ல வாய்ப்பு உள்ளது

அதிகரித்துள்ள சந்தை தடுமாற்றம் மற்றும் முதலீட்டாளர்களின் ஆபத்தை தவிர்க்கும் எண்ணம் தங்கத்திற்கு குறுகிய காலக்கட்டத்தில் ஆதரவாக இருக்கும். மேலும் போர் பதற்றம் அதிகரிக்கும் சூழலில் உலக சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 6,000 டாலர்கள் வரை செல்லும் என்றும், இந்தியாவில் 10 கிராம் தங்கம் ரூ.2 லட்சம் வரை உயரும் வாய்ப்பு உள்ளதாகவும் Geojit Investments நிறுவனத்தின் கமாடிட்டி ஆராய்ச்சி பிரிவு தலைவர் ஹரீஷ் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : இனி ஏடிஎம், யுபிஐ மூலமே பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.. புதிய அம்சம் இன்று முதல் அமல்!

ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரும் நிலையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிச்சயமாக உச்சத்தை தொடும் என அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us