Asian Champions Trophy 2026: 7வது முறையாக பைனலுக்குள் இந்திய ஹாக்கி அணி.. ஜப்பானுடன் நாளை மோதல்..!
Asian Champions Trophy 2026 Semi Final: 2026 ஆசிய சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் இந்திய ஆண்கள் ஹாக்கி அணி தென் கொரியாவை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இது இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது 7வது முறையாகும். லீக் சுற்றில் ஒரு தோல்வியுமின்றி முதலிடம் பிடித்த இந்திய அணி, நாளை ஜப்பானை எதிர்த்து கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது.
2026 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியில் (Asian Champions Trophy 2026) இன்று அதாவது 2026 நவம்பர் 4ம் தேதி நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தென் கொரியாவை 8-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம், இந்திய ஆண்கள் ஹாக்கி அணி (Indian Hockey Team) இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இதன் மூலம், இந்திய அணி இத்தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது ஏழாவது முறையாகும். மொஹாலியில் உள்ள ஒலிம்பியன் பல்பிர் சிங் சீனியர் சர்வதேச ஹாக்கி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது.
ஷிலானந்த் லக்ரா (4வது மற்றும் 13வது நிமிடங்கள்) மற்றும் தில்பிரீத் சிங் (21வது மற்றும் 25வது நிமிடங்கள்) ஆகியோர் இந்தியாவுக்காக தலா 2 கோல்களை அடித்தனர். கேப்டன் ஹர்மன்பிரீத் சிங் (9வது நிமிடம்), சுக்ஜீத் சிங் (21வது நிமிடம்), அங்கத் பிர் (36வது நிமிடம்) மற்றும் விவேக் சாகர் (54வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலைச் சேர்த்தனர்.




ALSO READ: இளம் இந்திய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு.. ரைசிங் ஆசியக் கோப்பைக்கான முழு அட்டவணை இதோ!
7வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய ஹாக்கி அணி:
WAS THERE EVER ANY DOUBT?! 🇮🇳🔥
The unbeaten hosts make a thunderous statement, storming past Korea 8-1 to book their place in the FINAL of the Hero Asian Champions Trophy Punjab 2026! 💪🏑
UP NEXT: JAPAN IN THE FINAL! 🇯🇵
🗓️ Thursday, November 5
⏰ 7:00 PM ISTOne more step to glory! 🇮🇳🏆
#HockeyIsBack #HACT2026 #SatSriAkalAsia #IndiaKaGame
— Hockey India (@TheHockeyIndia) November 4, 2026
இறுதிப் போட்டி எப்போது..?
2026 ஆசிய சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டி நாளை அதாவது 2026 நவம்பர் 5ம் தேதி, மொஹாலியில் உள்ள ஒலிம்பியன் பல்பிர் சிங் சீனியர் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெறும். ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும்.
ஜப்பானும் இறுதிப்போட்டிக்கு தகுதி..
முதல் அரையிறுதிப் போட்டியில் மலேசியாவை பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்கடித்து ஜப்பான் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான ஆட்டம், நிர்ணயிக்கப்பட்ட நேர முடிவில் கோல் ஏதும் அடிக்கப்படாமல் சமநிலையில் இருந்தது.
ALSO READ: எதிர்பாராமல் மோதிய கோல் கீப்பர்.. கால்பந்து வீரர் மரணம்.. வெளியான அதிர்ச்சி வீடியோ!
ஆசிய சாம்பியன்ஸ் டிராபியிலும் இந்திய அணியின் சிறப்பான ஆட்டம் தொடர்கிறது. இத்தொடரில் இதுவரை இந்திய ஹாக்கி அணி ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. 6 அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் சுற்றில், இந்தியா தனது 5 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதலிடத்தைப் பிடித்தது. குறிப்பிடத்தக்க வகையில், லீக் சுற்றில் இந்தியா தென் கொரியாவை 8-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தற்போது, ஜப்பானை வீழ்த்தி பட்டத்தை வெல்லும் முனைப்பில் இந்திய ஹாக்கி அணி உள்ளது.