AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

India A Squad 2026: 2026 ஆசிய கோப்பை.. திலக் வர்மா தலைமையில் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு!

2026 Rising Stars Asia Cup India A Squad: 2026 ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய 'ஏ' அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. திலக் வர்மா கேப்டனாகவும், ரஜத் பதிதார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். கத்தாரில் நவம்பர் 19 முதல் 29 வரை நடைபெறும் இத்தொடரில் அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி போன்ற இளம் வீரர்கள் உள்ளனர். இந்தியா 'ஏ' நவம்பர் 22 அன்று பாகிஸ்தான் 'ஏ' அணியுடன் மோதும்.

India A Squad 2026: 2026 ஆசிய கோப்பை.. திலக் வர்மா தலைமையில் இந்திய ‘ஏ’ அணி அறிவிப்பு!
இந்திய 'ஏ' அணி Image Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 02 Nov 2026 19:25 PM IST

2026ம் ஆண்டு ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான (2026 Rising Stars Asia Cup) இந்திய ‘ஏ’ அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. திலக் வர்மா அணிக்கு கேப்டனாகவும், ரஜத் பதிதார் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த போட்டியானது, 2026 நவம்பர் 19 முதல் 29 வரை கத்தாரின் தோஹாவில் நடைபெறும். இந்த இளம் அணியில் அதிரடி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகியோரும் இந்திய ‘ஏ’ அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா ‘ஏ’ அணி, ஐக்கிய அரபு அமீரகம் (யுஏஇ), நேபாளம் மற்றும் பாகிஸ்தான் ‘ஏ’ ஆகியவற்றுடன் ‘பி’ குழுவில் இடம்பெற்றுள்ளது. ‘ஏ’ குழுவில் வங்கதேசம் ‘ஏ’, இலங்கை ‘ஏ’, ஆப்கானிஸ்தான் ‘ஏ’, ஹாங்காங் மற்றும் சீனா ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள், வருகின்ற 2026 நவம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளுக்கு முன்னேறும். ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இறுதிப் போட்டி வருகின்ற 2026 நவம்பர் 29ம் தேதி நடைபெறும்.

ALSO READ: 2026 U19 ஆசியக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு! சேவாக், டிராவிட் மகன்கள் இடம்!

இந்தியா ஏ – பாகிஸ்தான் ஏ போட்டி எப்போது..?

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா, வருகின்ற 2026 நவம்பர் 22ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்திய அணி 2026 நவம்பர் 20ம் தேதி நேபாளத்தை எதிர்கொள்கிறது. இதைத் தொடர்ந்து, 2026 நவம்பர் 22ம் தேதி இந்தியா ‘ஏ’ அணி, பாகிஸ்தான் ‘ஏ’ அணியை எதிர்கொள்கிறது. இந்த இரண்டு போட்டிகளும் வெஸ்ட் எண்ட் பார்க் சர்வதேச மைதானத்தில் நடைபெறும். பின்னர், இந்தியா ‘ஏ’ அணி 2026 நவம்பர் 24ம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி தோஹா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் நடைபெறும். அதைத் தொடர்ந்து, இந்திய ஏ அணி இடம்பெற்றால் நவம்பர் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் நடைபெறும் அரையிறுதிப் போட்டிகளில் இந்திய ரசிகர்கள் கண்டுகளிக்கலாம். அரையிறுதி போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் ஆடவர் ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பையின் இறுதிப் போட்டியில் வருகின்ற 2026 நவம்பர் 29ம் தேதி மோதும்.

ALSO READ: இளம் இந்திய வீரர்களுக்கு சிறந்த வாய்ப்பு.. ரைசிங் ஆசியக் கோப்பைக்கான முழு அட்டவணை இதோ!

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:


அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்), திலக் வர்மா (கேப்டன்), ரஜத் படிதார் (துணை கேப்டன்), ரின்கு சிங், குமார் குஷாக்ரா (விக்கெட் கீப்பர்), சூர்யான்ஷ் ஷெட்ஜ், ஷாபாஸ் அகமது,, விப்ராஜ் நிகாம், ஹர்ஸ் துபே, ஹர்சித் ராணா, பிரின்ஸ் யாதவ் மற்றும் அர்ஷத் கான்

Follow Us