எனக்கு எண்டு கார்டே கிடையாது.. யாராலும் அழிக்கவும் முடியாது.. முன்பை விட அதிக நகைகளுடன் ரீல்ஸ் பதிவிட்ட மதுமிதா!
Madhumitha Reels On Instagram : நாகர்கோவிலை சேர்ந்த மதுமிதா என்ற பெண் முன்பை விட அதிக அளவிலான நகைகளை அணிந்தவாறு மீண்டும் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை பதிவு செய்து வருகிறார். இதனால், அவரது ரீல்ஸ் வீடியோக்கள் வைரலாகி வருகிறது .
நாகர்கோவில் அருகே உள்ள தம்பத்துக்கோணம் பகுதியை சேர்ந்தவர் பிரபல யு டியூபர் மதுமிதா. இவர், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரூபாய் நோட்டுகளை மெத்தையில் கொட்டி வைத்துவிட்டு நகைகளை அணிந்தவாறு ரிலீஸ் வீடியோ பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார். அத்துடன் தனது பெண் குழந்தை மீது ரூபாய் நோட்டுகளை கொட்டுவது போன்ற வீடியோக்களையும் வெளியிட்ட காரணத்தால் மிகவும் பிரபலமானார். இந்த நிலையில், இவரது வீடியோக்களை பின்தொடர்ந்த மர்ம நபர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 24- ஆம் தேதி அவரது வீட்டுக்குள் புகுந்து சுமார் 118 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த இசக்கி பாண்டி உள்பட 4 பேரை கைது செய்தனர்.
இன்ஸ்டாகிராமில் தலைகாட்டாமல் இருந்து வந்த மதுமிதா
இதனிடையே, நெல்லையில் உள்ள ஸ்பாவில் பணிபுரிந்த போது தன்னை ஏமாற்றி நகைகளை பறித்துக் கொண்டதாக கான்ட்ராக்டர் ஒருவர் மதுமிதா மீது பாளையங்கோட்டை தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இன்ஸ்டாகிராம் பிரபலம் மதுமிதாவுக்கு அடுத்தடுத்து சிக்கல்கள் எழுந்து வந்த காரணத்தால் இன்ஸ்டாகிராமில் சமீபகாலமாக ரீல்ஸ்கள் பதிவிடாமல் இருந்து வந்தார்.




மேலும் படிக்க: ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!
முன்பை விட அதிக நகைகளுடன் ரீல்ஸ பதிவிட்ட மதுமிதா
இந்த நிலையில், மீண்டும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய வீடியோக்களையும், ரீல்ஸ்களையும் பதிவிட தொடங்கியுள்ளார் மதுமிதா. அதில், வழக்கம் போல இல்லாமல் அதிக அளவிலான நகைகளை அணிந்து கொண்டு தனது குழந்தையின் 3- ஆவது பிறந்தநாளை கொண்டாடும் வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், சீதையை தீக்குளிக்க வைத்தீர்கள். அவர் தீக்குளித்த பிறகும் அவரை யாரும் நம்பவில்லை. அவதூறுகள், கேலி, கிண்டல் பேச்சுகளுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறோம்.
View this post on Instagram
என்னை யாராலும் அழிக்க முடியாது
என்னை பற்றி பேச பேச நான் உயர்ந்து கொண்டே தான் இருப்பேன். உங்கள் வாழ்க்கையை நீங்கள் வாழுங்கள், எனது வாழ்க்கையை நாங்கள் வாழ்கிறோம். யாராலும் யாரையும் அழிக்க முடியாது. ஒரு பெண் நன்றாக இருந்தால் அந்த குடும்பத்தை எப்படி வீழ்த்தலாம் என்று நினைக்கிறீர்கள். அது ஒருபோதும் நடக்காது. நான், எனது கணவர் மற்றும் குழந்தை எப்போதும் நன்றாகவே இருப்போம். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசினார்கள். அவர் இரும்பு மனிதராக நிமிர்ந்து நின்றார் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க: ரூ.5 கோடி பேரம் பேசிய விவகாரம்.. சிக்குகிறாரா அமைச்சர் ராஜ்மோகன்? லஞ்ச ஒழிப்பு துறையில் பரபர புகார்!