AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!

Anbil Mahesh CCB Police : தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ. 100 கோடி பெற்ற லஞ்ச புகாரில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மனைவி ஜனனியிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரூ.100 கோடி லஞ்சம்.. சிசிபி போலீஸ் விசாரணை வளையத்தில் அன்பில் மகேஷ் மனைவி!
அன்பில் மகேஷ் மனைவி ஜனனி.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 02 Nov 2026 15:41 PM IST

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில், அன்பில் மகேஷ் பொய்யாமொழி மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், அவரது மனைவி ஜனனியிடமும் விசாரணை மேற்கொள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் பெற்று தருவதாக லட்ச கணக்கில் பெற்ற பணத்தை ஜனனியின் வங்கி கணக்கில் டெபாசிட் செய்து இருப்பதாக கிடைத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேற்கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

ரூ.100 கோடி லஞ்சம் பெற்ற வழக்கில் அன்பிலுக்கு தொடர்பு

இந்த வழக்கில் ஏற்கனவே போலியாக தனியார் பள்ளிகள் சங்கத்தை நடத்தி வந்த அதன் தலைவர் பி. டி. அரசகுமார், முத்துக்குமரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழிக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில், சென்னை, திருச்சியில் அமைந்துள்ள அன்பில் மகேஷ் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் ஆகியவற்றில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், பல்வேறு டிஜிட்டல் ஆவணங்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டிருந்தன.

மேலும் படிக்க: தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா.. நாளை காலை சிறப்பு ரயில் முன்பதிவு.. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!

ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த அன்பில் மகேஷ்

அப்போது, முன் ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்பில் மகேஷ் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பல்வேறு காரணங்களை கூறி முன் ஜாமின் வழங்க மறுத்ததுடன், மனுவை தள்ளுபடி செய்தது. இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர்களுடன் ஆலோசனை மேற்கொண்டிருந்த அன்பில் மட்டும் பொய்யா மொழியை முக்கிய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அப்போதும், ஜாமீன் கோரி அவர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த நிலையில், அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெண் தொழிலதிபர்- அன்பில் மனைவியிடம் விசாரணை

இதில், அன்பில் மகேஷ் பெற்ற பணத்தை தனது மனைவியின் ஜனனி வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்து வைத்திருப்பதாக போலீசாருக்கு தெரியவந்ததாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில், அவரது மனைவியையும் விசாரணை வளையத்தில் கொண்டு வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதே போல, பெண் தொழிலதிபர் சண்முகப்பிரியா வீட்டில் போலீசார் சோதனை மேற்கொண்டதுடன், விசாரணையும் நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: புதிய தலைமை செயலகம்.. கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அரசு எடுத்த முடிவு.. பட்டினப்பாக்கத்தில் என்ன நடக்கிறது?

Follow Us