தமிழக – கேரள எல்லையில் கடும் பனிமூட்டம் – வாகன ஓட்டிகள் அவதி!
கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரில் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட சரியாகத் தெரியாத அளவிற்கு சாலைகளைப் பனிமூட்டம் சூழ்ந்தது. வடகிழக்குப் பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்த நிலையில், கடந்த நான்கு முதல் ஐந்து நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது.
கோவை: கோவை மாவட்டம் வாளையார் பகுதியில் இன்று அதிகாலை கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரில் வரும் வாகனங்கள் முன்னால் செல்லும் வாகனங்கள் கூட சரியாகத் தெரியாத அளவிற்கு சாலைகளைப் பனிமூட்டம் சூழ்ந்தது. வடகிழக்குப் பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகத் தொடர் மழை பெய்த நிலையில், கடந்த நான்கு முதல் ஐந்து நாட்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. இருப்பினும், அதிகாலை நேரங்களில் பல்வேறு பகுதிகளில் பனிமூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
குறிப்பாக, தமிழ்நாடு – கேரள மாநில எல்லைப் பகுதியான வாளையாரில் கடும் பனிமூட்டம் நிலவியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி மிகவும் மெதுவாகவும், கவனத்துடனும் வாகனங்களை இயக்கினர். குளிரின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் ஸ்வெட்டர் உள்ளிட்ட குளிர்கால ஆடைகளை அணிந்து வருகின்றனர்.
