
பிக்பாஸ் தமிழ் - Bigg Boss Tamil
வெளி நாடுகளில் பிக் பிரதர் என்ற பெயரில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிகழ்ச்சியை தற்போது இந்தியாவில் பிக்பாஸ் என்ற பெயரில் நடத்தி வருகின்றனர். இந்தி சினிமாவில் முதன் முறையாக ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் தொடங்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது. அதன்படி தமிழில் தற்போதுவரை 8 சீசன்கள் ஒளிபரப்பான நிலையில் அடுத்ததாக 9-வது சீசன் அக்டோபர் மாதத்தில் இருந்து தொடங்கும் என்று நிகழ்ச்சி குழு தெரிவித்துள்ளது. தொடர்ந்து 7 சீசன்களாக தமிழில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை கடந்த 8-வது சீசனில் இருந்து நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். பல்வேறு குணங்களை கொண்ட நபர்களை எந்தவித வெளியுலக தொடர்பும் இல்லாமல் ஒரே வீட்டில் வைத்து அவர்களின் மனநிலை எப்படி எல்லாம் மாறுகிறது என்பதைப் பார்ப்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் ஆகும்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 போட்டியாளர்கள் இவர்களா? இணையத்தில் வைரலாகும் பட்டியல்!
Bigg Boss Tamil Season 9 : தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு ரசிகர்கள் அதிகம் இருப்பது போல பிக்பாஸ் நிகழ்ச்சிக்கும் அதிகம் இருக்கிறார். ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போது ரசிகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு அதிக வரவேற்பை அளித்து வருகின்றனர்.
- Vinothini Aandisamy
- Updated on: Sep 5, 2025
- 17:03 pm IST