பிக்பாஸ் தமிழ் சீசன் 9-ல் என்னெல்லாம் நடந்தது… ரீகேப் இதோ
Bigg Boss Tamil Season 9: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கி இன்று 105-வது நாளை எட்டியுள்ளது. இன்று பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியின் வெற்றியாளர் யார் என்பது குறித்து தெரிய உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சி கடந்து வந்த பாதை குறித்து தற்போது பார்க்கலாம்.
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சி கடந்த 2017-ம் ஆண்டு முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகின்றது. கடந்த 8 சீசன்களாக ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது 9-வது சீசன் முடிவுக்கு வந்துள்ளது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2025-ம் ஆண்டு பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் இந்த நிகழ்ச்சி மற்றும் வீடு என அனைத்திலும் பல மாற்றங்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதன்படி இந்த பிக்பாஸ் வீட்டில் பல மாற்றங்கள் இருந்தது. மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்துகொண்ட இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 வீட்டில் டீலக்ஸ், பிக்பாஸ் வீடு மற்றும் தல ரூம் என மூன்று பிரிவுகளாக இருந்தது. அதில் டீலக்ஸ் அறையில் உள்ளவர்களுக்கு பிக்பாஸ் அறையில் உள்ளவர்கள் பணிவடைகள் செய்ய வேண்டும். மேலும் வீட்டு தலையாக தேர்வாகும் நபருக்கு அந்த வீட்டு தல அறை கொடுக்கப்படும்.
இப்படி இந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் பல மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு இருந்தது. மேலும் இந்த வீட்டில் உள்ள மாற்றங்களை வைத்தே பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து டாஸ்குகள் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிகழ்ச்சி தொடங்கிய போதே போட்டியாளர்களின் தேர்வு குறித்து பார்வையாளர்கள் பல விமர்சனங்களை தெரிவித்தனர். மேலும் நிகழ்ச்சி தொடங்கிய பிறகும் போட்டியாளர்கள் குறித்து பல நெகட்டிவான விமர்சங்களே வந்தது குறிப்பிடத்தக்கது.




பிக்பாஸ் தமிழ் சீசன் 9ன் ரீகேப் இதோ:
அதன்படி இந்த நிகழ்ச்சி தொடக்கத்தில் 20 போட்டியாளர்களும் வைல்கார்ட் போட்டியாளர்களாக 4 பேரும் கலந்துகொண்டனர். அதில் நிகழ்ச்சி தொடங்கி ஒரு வாரம் முடிவதற்கு முன்னதாகவே தன்னால் இந்த நிகழ்ச்சியை தொடர முடியாது என்று கூறி நந்தினி போட்டியை விட்டு வெளியேறினார்.
அதனைத் தொடர்ந்து பார்வதி மற்றும் கம்ருதின் இருவரும் தொடர்ந்து போட்டியாளர்களிடையே சண்டையிட்டு வந்த போது பார்வையாளர்கள் நெகட்டிவான விமர்சனத்தை அளித்து வந்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் டிக்கெட் டூ ஃபினாலே டாஸ்கின் போது சாண்ட்ராவிடம் இவர்கள் இருவரும் மிகவும் மோசமாக நடந்துகொண்ட காரணத்தால் அவர்கள் இருவருக்குமே ரெட்கார்ட் கொடுத்து வெளியே அனுப்பப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக இனி இவர்கள் நிகழ்ச்சியில் தொடரமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Also Read… இணையத்தில் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்க்கும் பேபி கேர்ள் படத்தின் ட்ரெய்லர்
பிக்பாஸ் நிகழ்ச்சி குழு வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:
#Day105 #Promo3 of #BiggBossTamil #GrandFinale
Bigg Boss Tamil Season 9 – Grand Finale இன்று மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV… pic.twitter.com/tmpr3XlwVA
— Vijay Television (@vijaytelevision) January 18, 2026
Also Read… ரசிகர்களிடையே வரவேற்பைப் பெறும் தனுஷின் கர பட வீடியோ… வைரலாகும் போஸ்ட்