Gandhi Talks: விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது ‘காந்தி டால்க்ஸ்’ டீசர்!
VJS's Gandhi Talks Teaser: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. இவர் இன்று 2026 ஜனவரி 16ம் தேதியில் தனது 48வது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவரின் பிறந்தநாள் ஸ்பெஷலாக காந்தி டால்க்ஸ் படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. மௌன படமாக அமைந்துள்ள இதன் டீசர் ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.
தமிழ் சினிமாவில் சிறந்த நடிகர்கள் வரிசையில் ஒருவராக இருப்பவர்தான் விஜய் சேதுபதி (Vijay Sethupathi). இவரின் நடிப்பில் தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் படங்கள் வெளியாகியிருக்கிறது. இவர் படங்களில் ஹீரோவாக மட்டுமில்லாமல் நெகடிவ் வேடங்களிலும் நடித்து நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறார். அந்த வகையில் இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான படம் தலைவன் தலைவி (Thalaivan Thalaivii). இப்படமானது கடந்த 2025 ஜூலை மாதத்தில் வெளியாகியிருந்த நிலையில், மக்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றிருக்கிறது. இப்படமானது சுமார் ரூ 100 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்திருந்தது. இந்த படங்களில் வரிசையில் படப்பிடிப்பு முடிந்து கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கும் மேலாக வெளியாகாமல் இருந்த படம்தான் காந்தி டால்க்ஸ் (Gandhi Talks) . இப்படமானது முழுமையாகவே சைலன்ட் படமாகத்தான் (Silent film) உருவாகியுள்ளது.
இதில் விஜய் சேதுபதி, அரவிந்த் சுவாமி (Aravind Swamy) மற்றும் அதிதி ராவ் (Aditi Rao) உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இந்நிலையில் இன்று 2026 ஜனவரி 16ம் தேதியில் விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படக்குழு புது டீசர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது தற்போது இணையத்தில் தீயாக பரவிவருகிறது.




இதையும் படிங்க: மேஜிக்கல் காதல் கதையில்… சாய் பல்லவியின் முதல் இந்தி படம் ‘ஏக் தின்’ டீசர் வெளியானது!
விஜய் சேதுபதியின் காந்தி டால்க்ஸ் படத்தின் புது டீசர் குறித்த பதிவு :
Two sides of a coin.
Two sides of a note.
Two sides of a story.Some stories demand silence.#GandhiTalks
A Silent Promise. A Loud Arrival.Teaser ▶️ https://t.co/hv5ePFcJbh
In cinemas | 30 January 2026An @arrahman musical.@VijaySethuOffl @thearvindswami @aditiraohydari… pic.twitter.com/rg9bkfAKfw
— Zee Studios South (@zeestudiossouth) January 16, 2026
இந்த படமானது முழுக்க அமைதியான படமாகவே உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்களுக்கு எந்தவித வசனங்கள் எதுவுமே இல்லை. இந்த படமானது முழுக்க மௌனம் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் நடிகர்கள் தங்களின் எமோஷன்ஸ் மற்றும் நடிப்பை வைத்து மட்டுமே நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்களின் பங்க்கு எந்த அளவிற்கு இருக்கிறதோ, அதற்கு ஒருபடி மேலாக இசையமைப்பாளருக்கு உள்ளது. இந்த படத்திற்கு பான் இந்திய பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்தான் இசையமைத்துள்ளார்.
இதையும் படிங்க: எனது அடுத்த படங்கள் இப்படித்தான் இருக்கும் – ரசிகர்களுக்கு ஹேப்பி செய்தி சொன்ன சிவகார்த்திகேயன்!
இந்த படத்தில் பிரபல மராத்தி இயக்குநர் கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்க, ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படம் கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் நிலையில், சில காரணங்களால் வெளிய்க்காமல் இருந்தது.இந்நிலையில் வரும் 2026 ஜனவரி 30ம் தேதியில் உலகமெங்கும் உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிச்சயம் மக்களிடையே வரவேற்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.