Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

EK Din: மேஜிக்கல் காதல் கதையில்… சாய் பல்லவியின் முதல் இந்தி படம் ‘ஏக் தின்’ டீசர் வெளியானது!

Ek Din Movie Teaser: சாய் பல்லவி தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக இருந்துவருகிறார். இவர் தற்போது பாலிவுட் சினிமாவிலும் படத்தில் நடித்துவரும் நிலையில், இவர் இந்தி முதல் அறிமுக படமாக அமைந்துள்ளது ஏக் தின். அமீர்கானின் மகனுடன் இப்படத்தில் இவர் நடித்துள்ள நிலையில், அதன் முதல் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகிவருகிறது.

EK Din: மேஜிக்கல் காதல் கதையில்… சாய் பல்லவியின் முதல் இந்தி படம் ‘ஏக் தின்’ டீசர் வெளியானது!
ஏக் தின் திரைப்பட டீசர்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 16 Jan 2026 14:28 PM IST

மலையாளம் சினிமாவின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது பான் இந்திய நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி (Sai Pallavi). இவர் தமிழில் ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நிலையில் ப்ரேமம் (Premam) என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியின் பின்னரே தமிழ் மற்றும் தெலுங்கு போன்ற மொழி படங்களில் தொடர்ந்து கதாநாயகியாக நடித்தவந்தார். மேலும் இவரின் நடிப்பில் தமிழில் இறுதியாக வெளியான திரைப்படம் அமரன் (Amaran). இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் (Sivakarthikeyan) இதில் ராணுவ வீரனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்திருந்தார். இந்த படத்திற்காக தமிழக அரசின் சார்பாக கலைமாமணி விருதையும் இவர் பெற்றிருந்தார்.

இவ்வாறு தென்னிந்திய மொழி படங்களில் நடித்துவந்த சாய் பல்லவி, பாலிவுட் படத்திலும் நடிக்க தொடங்கியுள்ளார். அந்த விதத்தில் இவருக்கு இந்தியில் முதல் படமாக அமைந்துள்ளதுதான் “ஏக் தின்” (EK Din). இதில் நடிகர் ஜுனைத் கானுக்கு (Junaid Khan) ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பார்வை சமீபத்தில் வெளியான நிலையில், அதை தொடர்ந்து தற்போது இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: எனது அடுத்த படங்கள் இப்படித்தான் இருக்கும் – ரசிகர்களுக்கு ஹேப்பி செய்தி சொன்ன சிவகார்த்திகேயன்!

சாய் பல்லவி – ஜுனைத் கானின் ஏக் தின் பட முதல் டீசர் பதிவு :

ஏக் தின் படத்தின் ரிலீஸ் எப்போது :

இந்த ஏக் தின் திரைப்படத்தின் மூலமாக தான் சாய் பல்லவி இந்தி சினிமாவில் நுழைகிறார். இந்த் படத்தி அடுத்தாக ராமாயணம் பார்ட் 1 மற்றும் பார்ட் 2 படத்தில் சீதையாக நடிக்கவுள்ளார். பார்ட் 1ன் ஷூட்டிங் முடிந்த நிலையில், இந்த 2026ம் ஆண்டு தீபாவளியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. சாய் பல்லவியின் முதல் இந்தி படமான ஏக் தின் படத்தை இயக்குநர் சுனில் பாண்டே இயக்க, அமீர்கானின் தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: பிக்பாஸ் 9 செலிப்ரேஷன் வீக்.. வீட்டிற்கு கெஸ்டாக வந்த சாண்டி – கவின்.. வைரலாகும் புரோமோ!

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த 2024ம் ஆண்டு இறுதியிலே தொடங்கிய நிலையில், முழுமையாக நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது. இப்படத்தில் சாய் பல்லவி “மீரா” என்ற வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் முழுவதுமாக காதல் மற்றும் எமோஷனல் நிறைந்த கதைக்களத்தில் தயாராகியுள்ளதாம். இப்படம் முழுக்க வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட நிலையில், மிகவும் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ளது. அதன்படி இப்படம் 2026 மே 1ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.