ViRosh: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை.. இன்பதிர்ச்சியை கொடுத்த விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா ஜோடி!
Vijay Deverakonda: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் விஜய் தேவரகொண்டா. இவருக்கும், நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது. திருமணம் முடிந்த நிலையில் தனது சொந்த கிராமத்திற்கு சென்ற அவர், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
தெலுங்கு சினிமாவில் உச்ச நட்சத்திர நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் தேவரகொண்டா (Vijay Deverakonda). இவரின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என தொடர்ந்து மிக பிரம்மாண்ட திரைப்படங்கள் வெளியாகிவருகிறது. அந்த வகையில் இவர் தனது தோழியும், நீண்ட நாள் காதலியுமான நடிகை ராஷ்மிகா மந்தனாவை (Rashmika Mandanna) கடந்த 2026 பிப்ரவரி 26ம் தேதியில் திருமணம் செய்துகொண்டார். இவர்கள் இருவரின் திருமணம் உதய்பூர் அரண்மனையில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. இவர்களின் திருமணத்திற்கு பல்வேறு பிரபலங்களும் தங்களின் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தனர். மேலும் இவர்கள் இருவரின் திருமண வரவேற்பும் வரும் 2026 மார்ச் 4ம் தேதியில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களை நேரில் சென்று விஜய் தேவர்கொண்டா மற்றும் ராஷ்மிகா அழைப்பிதழ் வழங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமீபத்தில் தெலுங்கானா மாநிலத்தில், மஹ்பூப் நகர் மாவட்டத்தில் உள்ள மூதாதையர் கிராமத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா நேரில் சென்றனர்.




இதையும் படிங்க: பராரி பட இயக்குநருடன் புது படத்தில் கைகோர்த்த சந்தானம்.. கதாநாயகி யாருனு தெரியுமா?
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குவதாக விஜய் தேவரகொண்டா அறிவிப்பு:
தனது சொந்த ஊரான, தெலுங்கானா மாநிலத்தில், மஹ்பூப் நகர் மாவட்டத்தில் உள்ள மூதாதையர் கிராமத்திற்கு விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருமே சென்றிருந்தனர். அங்கு அவர்கள் தங்களின் கிராமம் மக்களை நேரில் சந்தித்திருந்தார். அப்போது பேசிய நடிகர் விஜய் தேவரகொண்டா, “என் கிராமத்திற்கு வந்தது மற்றும் என் கிராம மக்கள் அனைவரையும் பார்ப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
இதையும் படிங்க: கலர்ஃபுல்லான சங்கீத் புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் போட்டோஸ்
இனிமேல் கிராமத்திற்கு நாங்கள் தொடர்ந்து வருவோம். இந்த ஆண்டு முதல், அச்சம்பேட்டை தொகுதியில் இருக்கும் 44 அரசுப் பள்ளிகளில் 9 மற்றும் 10ம்வகுப்பு உதவித்தொகை வழங்குவதாக கூறியுள்ளார்”. இந்த அறிவிப்பான அந்த கிராம மக்கள் மத்தியில் மிகவும் மகிழ்ச்சியை கொடுத்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது திருமண சங்கீத் நிகழ்ச்சி குறித்து ராஷ்மிகா மந்தனா பகிர்ந்த எக்ஸ் பதிவு:
The night filled with love, tears of joy, laughter, music, singing, glitters and us dancing through the night. ❤️
It was really the most fun night ever!!
From Vijju and I wanting to surprise each other..
to
family wanting to surprise us..
to
being fully excited and… pic.twitter.com/q7q4oHrl6y— Rashmika Mandanna (@iamRashmika) March 3, 2026
இவர்கள் இருவரின் திருமணமானது மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெற்றிருந்த நிலையில், மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்தது. கிட்டத்தட்ட இவர்கள் திருமணம் ராஜா ராணி திருமணத்தை போல மிகவும் சிறப்பாக நடைபெற்றிருந்தது. வரும் 2026 மார்ச் 4ம் தேதியில் திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், இதில் பல தமிழ் பிரபலங்களும் கலந்துகொள்வதாக கூறப்படுகிறது.