AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கலர்ஃபுல்லான சங்கீத் புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் போட்டோஸ்

Rashmika Mandanna Shared Sangeet Photos: ரசிகர்களால் நேஷ்னல் க்ரஷ் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவை காதல் திருமணம் செய்துக்கொண்டார். அந்த திருமணத்தில் சங்கீத் புகைப்படங்களை தற்போது ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ளார்.

கலர்ஃபுல்லான சங்கீத் புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா – வைரலாகும் போட்டோஸ்
விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனாImage Source: social media
Vinothini Aandisamy
Vinothini Aandisamy | Published: 03 Mar 2026 15:16 PM IST

கன்னட சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை ராஷ்மிகா மந்தனா தற்போது பான் இந்திய அளவில் மோஸ்ட் வாண்டன் நாயகியாக வலம் வருகிறார். தொடர்ந்து தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். தொடர்ந்து பான் இந்திய அளவில் அடுத்தடுத்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியான படங்கள் விமர்சன ரீதியாக மட்டும் இன்றி வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. அதன்படி அடுத்தடுத்து மூன்று படங்கள் ரூபாய் 1000 கோடிகள் வசூலித்தது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தனது படங்களின் மூலம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வந்த நடிகை ராஷ்மிகா மந்தனா சொந்த வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகள் மூலமாகவும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் தனது காதலர் விஜய் தேவரகொண்டாவை திருமணம் செய்துக்கொண்டார்.

இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில் தொடர்ந்து இவர்கள் தொடர்பான செய்திகள் இணையத்தில் வைரலாகி வந்தது. இருவரும் தங்களது காதலை மிகவும் சீக்ரட்டாக வைத்து இருந்த நிலையில் கடந்த 26-ம் தேதி பிப்ரவரி மாதம் 2026-ம் ஆண்டு உறவினர்கள் மற்றும் நெறுங்கிய நண்பர்கள் முன்னிலையில் திருமணம் நடைப்பெற்றது. இந்த நிலையில் திருமணத்திற்கு முன்னதாக நடந்த சங்கீத் புகைப்படங்களை தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கலர்ஃபுல்லான சங்கீத் புகைப்படங்களைப் பகிர்ந்த ராஷ்மிகா மந்தனா:

அந்தப் பதிவில் ராஷ்மிகா மந்தனா கூறியதாவது, காதல், ஆனந்தக் கண்ணீர், சிரிப்பு, இசை, பாடல்கள், மின்னல்கள் என இரவு முழுவதும் நாங்கள் நடனமாடிய அந்த இரவு. இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் வேடிக்கையான இரவு அது!! விஜ்ஜுவும் நானும் ஒருவரையொருவர் ஆச்சரியப்படுத்த விரும்புவதிலிருந்து. எங்களை ஆச்சரியப்படுத்த விரும்பும் குடும்பத்தினர் வரை. எங்கள் குடும்பங்கள் இவ்வளவு சுதந்திரமாகவும், இவ்வளவு சிறப்பாகவும் நடனமாடுவதைப் பார்த்து முழுமையாக உற்சாகமாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது என்றும் தெரிவித்து இருந்தார். இது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Also Read… இந்த குழந்தைக்குதான் சூர்யா தங்க சங்கிலி போட்டாரா? வைரலாகும் வீடியோ

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்ட எக்ஸ் தள பதிவு:

Also Read… Kara: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Follow Us