AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Kara: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Kara Movie Release Update: தென்னிந்திய சினிமாவில் சிறந்த நடிகர்கள் லிஸ்டில் ஒருவராக இருந்த்துவருபவர் தனுஷ். இவரின் 54வது திரைப்படமாக தயாராகியுள்ளதுதான் கர. இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்த நிலையில், இறுதிக்கட்ட பணிகளில் தீவிரமாக இருந்துவருகிறது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

Kara: தனுஷின் ‘கர’ திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? – படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
கர திரைப்பட வெளியீட்டு தேதிImage Source: X
Barath Murugan
Barath Murugan | Updated On: 02 Mar 2026 19:06 PM IST

கோலிவுட் சினிமாவிமாவில் பல்வேறு பணிகளை சிறப்பாக செய்துவருபவர் தனுஷ் (Dhanush). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் தேரே இஷ்க் மே (Tere Ishq Mein). இந்தி மொழியை மையமாக கொண்டு வெளியாகியிருந்த இப்படமானது மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தை அடுத்தாக தனுஷின் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக தயாராகிவந்த படம்தான் “கர” (Kara). இந்த படத்தை போர்த் தொழில் பட இயக்குநர் விக்னேஷ் ராஜா (Vignesh Raja) இயக்க, வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் தயாரித்துவருகிறார். இப்படத்தில் தனுஷ் லீட் நாயகனாக நடிக்கும் நிலையில், அவருக்கு ஜோடியாக நடிகை மமிதா பைஜூ (Mamitha Baiju) நடித்துள்ளார். இப்படத்தின் மூலமாகதான் முதல் முறையாக இந்த ஜோடி இணைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிரடி ஆக்ஷன் திரில்லர் கதைக்களத்தில் இப்படம் தயாராகிவரும் நிலையில், வெளியீட்டிற்கு காத்திருக்கிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் சமீபத்தில் அறிவித்திருந்த நிலையில், தற்போது அதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் உலகமெங்கும் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சிவகார்த்திகேயன் ரசிகர்களே உங்களுக்கான ஹேப்பி நியூஸ்.. மாவீரன் 2 படம் குறித்து வெளியான அப்டேட் இதோ!

தனுஷின் கர திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு வெளியிட்ட பதிவு:

தனுஷின் கர திரைப்படத்துடன் மோதும் ராம் சரணின் பெடி திரைப்படம்:

தனுஷின் கர திரைப்படமானது கிராமத்து அதிரடி திரில்லர் கதைக்களத்தில் தயாராகியுள்ளது. இப்படத்தில் தனுஷுடன் நடிகர்கள் மமிதா பைஜூ, சுராஜ் வெஞ்சாரமூடு,கே.எஸ்.ரவிக்குமார், கருணாஸ், ப்ரித்வி பாண்டியராஜன் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படமானது வரும் 2026 ஏப்ரல் 30ம் தேதியில் வெளியாகவுள்ள நிலையில், இது ரிலீஸாகும் அதே தேதியில்தான் ராம் சரணின் பெடி திரைப்படமானது வெளியாகவுள்ளது. இந்த படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமானது தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: இந்த குழந்தைக்குதான் சூர்யா தங்க சங்கிலி போட்டாரா? வைரலாகும் வீடியோ

இதில் ராம் சரனுடன் ஜான்வி கபூர் ஜோடியாக நடித்துள்ளார். இப்படமானது பக்கா கமர்ஷியல் ஆக்ஷ்ன் படமாக தயாராகியுள்ள நிலையில், மிகவும் பிரம்மாண்டமாக வெளியாகிறது. அந்த வகையில் தனுஷ் மற்றும் ராம் சரணின் படங்கள் இரண்டும் மோதவுள்ள நிலையில், தமிழில் மக்களிடையே தனுஷின் படத்திற்கே அதிக வரவேற்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. ரிலீஸ் தேதி கிட்ட நெருங்கும் நிலையில், அடுத்தடுத்த அப்டேட்டுகளும் தொடர்ந்து வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us