சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும், ‘தர்மன்’ படத்தின் இயக்குநர் அஷ்வத் மரிமுத்துவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவிய தகவல்களுக்கு ரஜினிகாந்த் தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் நடிப்பில், கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தர்மன்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போது ரஜினிகாந்துக்கும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின. குறிப்பாக, எக்ஸ் தளத்தில் வெளியிடப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட பதிவு ஒன்று இந்த விவாதத்தை ஏற்படுத்தியது.