Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
Narendra Modi

Narendra Modi

குஜராத்தில் பிறந்த நரேந்திர மோடி, எட்டு வயதில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் சேர்ந்தார். அரசியலில் ஆர்வம் கொண்ட அவர், குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார். ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர பற்றாளராக செயல்பட்டு வந்த நரேந்திர மோடி, 1985ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார். பாஜகவில் உறுப்பினராக இணைந்த நரேந்திர மோடி, ஒரே வருடத்தில் குஜராத் மாநில பொதுச் செயலாளராக பதவி உயர்ந்தார். அதன்பிறகு பாஜகவில் பல்வேறு பதவிகளை வகித்த நரேந்திர மோடி, 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக இருக்கும் போது, மோடிக்கு தேசிய செயலாளர் பதவி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, 2001 ஆம் ஆண்டு அப்போதைய முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து, நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வரானார். 2014ஆம் ஆண்டு வரை குஜராத் முதல்வராக தொடர்ந்த அவர், 2014ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் பிரதமர் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அப்போது முதல் மூன்று முறை பிரதமராக தேர்வு செய்யப்பட்டார். 2014,2019,2024 ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து மும்முறை ஹாட்ரிக் வெற்றியை பிரதமர் மோடி பெற்றார். பிரதமர் மோடி தனது பதவிக் காலத்தில் பணமதிப்பிழப்பு, அயோத்தி ராமர் கோயில், காஷ்மீர் சட்டப்பிரிவு 370வது பிரிவை நீக்குதல், முத்தலாக் சட்டத்தை அமல்படுத்துதல் என பல முக்கிய முடிவுகளை எடுத்திருக்கிறார்.

Read More

‘டெல்லி கார் குண்டுவெடிப்பு சம்பவம் பயங்கரவாத தாக்குதல் தான்’.. மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு காரணமானவர்கள், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டவர்கள், அவர்களுக்கு உதவியவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதோடு, பயங்கரவாதத்தின் மீது இந்தியா சகிப்புத்தன்மை காட்டாது என்பதும் கண்டிப்பாக உறுதி செய்யப்பட்டது.

டெல்லி குண்டுவெடிப்பு சம்பவம்.. காரை இயக்கியது டாகர் உமர் தான் – டி.என்.ஏ சோதனையில் உறுதி..

Delhi Bomb Blast: டெல்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில், i20 காரை ஓட்டிச் சென்றவர் வேறு யாருமல்ல, டாக்டர் உமர் என்பது இப்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது DNA மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. விசாரணை நிறுவனங்கள் டாக்டர் உமரின் தாயாரின் டிஎன்ஏ மாதிரிகளை பரிசோதித்த போது இது உறுதி செய்யப்பட்டது.

இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு.. கோவை வரும் பிரதமர் மோடி.. எத்தனை நாள் பயணம்? நோக்கம் என்ன?

PM Modi Visit To Coimbatore: கோவையில் நடத்தப்படும் தென்னிந்திய இயற்கை வேளாண்மை உச்சி மாநாடு 25 இல் பிரதமர் மோடி வருகை தருகிறார். மேலும், தென் மாநிலங்களைச் சேர்ந்த இயற்கை வேளாண்மையில் நிபுணத்துவம் பெற்ற 50 விஞ்ஞானிகளுடன் கொடிசியா மண்டபத்தில் கலந்துரையாடுகிறார்.

பூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர்.. நேராக டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல்

Narendra Modi : பூட்டானில் இருந்து திரும்பிய பிரதமர் நரேந்திர மோடி டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்தார். அங்கு, டெல்லி குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். முன்னதாக பூட்டானில் பேசிய பிரதமர், எந்த சதிகாரரும் தப்பிக்க மாட்டார்கள் என்று தெளிவாகக் கூறினார்.

இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்.. அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு!

Trump Spoke About Deal With India | விரைவில் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், நேற்று (நவம்பர் 11, 2025) வெள்ளை மாளிகையில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

டெல்லி குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் – பிரதமர் மோடி உறுதி

PM Modi Bhutan Visit: பூட்டான் சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். நிகழ்ச்சியில் பேசிய அவர், திங்கட்கிழமை டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து முக்கிய கருத்துக்களை தெரிவித்தார். மிகவும் கனத்த இதயத்துடன் இன்று இங்கு வந்துள்ளதாக அவர் கூறினார்.

கோவா அயர்ன்மேன் போட்டி: வெற்றிகரமாக முடித்த அண்ணாமலை.. பாராட்டிய பிரதமர் மோடி!

இப்போட்டியில் அண்ணாமலை, தேஜஸ்வி சூர்யா பங்கேற்றது குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதோடு, பிரதமர் மோடியும் இவர்கள் இருவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது போன்ற நிகழ்வுகள் 'FitIndia' இயக்கத்துக்கு பங்களிப்பதாக கூறி அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

4 புதிய வந்தே பாரத் ரயில் சேவை.. கொடியசைத்து தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி..

Vande Bharat Service: இந்தியாவின் நவீன ரயில் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கிய படியாக, பிரதமர் நரேந்திர மோடி நான்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்களைக் கொடியசைத்து தொடங்கி வைப்பார். அதில் பெங்களூரு எர்ணாகுளம் ரயில் தமிழகம் வழியாக பயணிக்கும்.

கேட்ச் முதல் ஃபிட்னஸ் வரை.. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியிடம் கலந்துரையாடிய பிரதமர் மோடி!

PM Narendra Modi Meets Indian Women's Cricket Team : இந்திய மகளிர் கிரிக்கெட் அணியினர் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி உலகக்கோப்பை தனதாக்கினர். ஆடவர்கள் மட்டுமே சாதித்த கிரிக்கெட்டில் தங்களுடைய பங்கை நிலைநிறுத்தி உலகுக்கே முன் உதாரணமாகி சாதித்தனர். அவர்களை இன்று பிரதமர் மோடி நேரில் வரவழைத்து சந்தித்து கலந்துரையாடினார்

அயோத்தியில் நடைபெறும் 5 நாள் பிரம்மாண்ட விழா.. ராமர் கோயிலில் 21 அடி உயர கொடி ஏற்றும் பிரதமர் மோடி..

PM Modi At Ram Temple: பிரதமர் நரேந்திர மோடி, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலின் மேல் 21 அடி உயரக் கொடியை தானியங்கி அமைப்பைப் பயன்படுத்தி ஏற்றுவார். 22 அடி நீளமும் 11 அடி அகலமும் கொண்ட கொடி, கோயிலின் 161 அடி கோபுரத்தின் மேல் 42 அடி கம்பத்தில் ஏற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Modi Road Show | பீகாரில் பிரமாண்ட ‘ரோடு ஷோ’ சென்ற பிரதமர் மோடி: பரபரக்கும் தேர்தல் களம்!

Bihar elections: பீகார் மக்கள் நல்லாட்சி அளிக்கும் அரசை மீண்டும் தேர்வு செய்வார்கள் என்ற நம்பிக்கை தனது உள்ளதாக பிரதமர் மோடி பெருமையுடன் கூறியுள்ளார். இத்தனை நாள் பீகார் பக்கம் செல்லாத ராகுல் காந்தி சமீபத்தில் தான் அங்கு பிரசாரத்தை தொடங்கி தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.

சர்தார் படேலின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம்.. பிரதமர் மோடி பங்கேற்பு

இந்தியாவின் இரும்பு மனிதர் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சர்தார் படேலின் 150வது பிறந்தநாளை முன்னிட்டு குஜராத்தின் கெவாடியாவில் ஒற்றுமை தின அணிவகுப்பு நடைபெற்றது. பிரதமர் மோடி தனது உரையில், ஆகஸ்ட் 15 மற்றும் ஜனவரி 26 ஆம் தேதிகளைப் போலவே ஒற்றுமை தினமும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறினார்

ஜப்பானில் முதல் பெண் பிரதமர்.. வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..

PM Modi: பிரதமர் மோடி, ஜப்பானின் புதிய பிரதமருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஷிகெரு இஷிபாவுக்குப் பிறகு 64 வயதான தகைச்சி சமீபத்தில் பதவியேற்றார், ஜப்பானின் முதல் பெண் பிரதமராக ஒரு வரலாற்று தருணத்தைக் குறித்தது. ஆளும் லிபரல் டெமாக்ரடிக் கட்சியில் (LDP) பழமைவாத முக்கியஸ்தர்களில் ஒருவர்.

8th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்!!

Union Cabinet approves 8th pay Commission: மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான 8வது ஊதியக் குழு அமைக்கப்படுவதற்கான பரிந்துரை விதிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இக்குழு அளிக்கும் பரிந்துரையின்படி, ஜன.2026 முதல் ஊதிய உயர்வு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Asean Summit 2025 : இந்தியா உறுதுணையாக நிற்கிறது – ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

PM Modi : 2025 ஆம் ஆண்டு ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் இன்று தொடங்கியது. இதில் இந்திய பிரதமர் நேரில் கலந்துகொள்வதாக இருந்த நிலையில் பின்னர் திட்டம் மாற்றப்பட்டது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் விர்ஜூவல் முறையில் பிரதமர்மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அதில் இந்தியா குறித்து பேசினார்.