இந்த பிப்ரவரி மாதத்தில் வானில் ஒரு அதிசய நிகழ்வு நடைபெற உள்ளது. அது வளைய சூரிய கிரகணம் எனப்படும் “ரிங் ஆஃப் ஃபயர்” கிரகணம் என கூறப்படுகிறது. இந்த நிகழ்வு பிப்ரவரி 17 அன்று நடைபெறுகிறது. சூரியனுக்கும் பூமிக்கும் இடையே சந்திரன் செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த கிரகணம் ஒரு வளைய சூரிய கிரகணம். இந்த கிரகணத்தில் சூரியனின் மையப் பகுதி மட்டும் நிழல் பகுதியில் வரும் வகையில் சந்திரன் சூரியனை மறைக்கிறது. அத்தகைய சூழ்நிலையில் சூரியன் ஒரு வளையல் போல் தோன்றுகிறது.