வானில் பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானத்தின் எஞ்சின் வெடித்த சம்பவம், அங்கே இருந்தவர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக மாறியது. நடுவானில் நடந்த இந்த எஞ்சின் கோளாறு சம்பவம், விமான பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது. குறிப்பாக, பயணிகள் தங்களது கண்முன்னே எஞ்சின் சேதமடைந்த காட்சியை வீடியோவாக பதிவு செய்த சம்பவம் உலகளவில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நைஜீரியாவில் நடந்தது. அரிக் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் லாகோஸ் நகரில் இருந்து போர்ட் ஹார்கோர்ட் நோக்கி புறப்பட்டிருந்தது.