AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி…மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!

Union Minister L Murugan: தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி உறுதியாக வெற்றி பெரும் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். மேலும், திமுக வீட்டுக்கு செல்வது உறுதி என்றார்.

தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் பாஜக கூட்டணி ஆட்சி அமைவது உறுதி…மத்திய இணையமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை!
5 மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதி
Gowtham Kannan
Gowtham Kannan | Published: 07 Feb 2026 12:34 PM IST

புதுச்சேரியில் பாரதீய ஜனதா கட்சி சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பங்கேற்றதையடுத்து, செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி தலைமையிலான 3- ஆவது ஆட்சிக் காலத்தில் வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கான பிரம்மாண்ட பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வருகிற 2047- ஆம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற வேண்டும். இதற்கு இந்தியாவின் உள்நாட்டு உற்பத்தியை பெருக்குவது, அடிப்படை உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, ஏழை, எளிய மக்கள் மற்றும் இளைஞர்களின் சமூக மேம்பாடு ஆகியவற்றுக்காக பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் தற்போது 10 சதவீதம் நிதி உயர்த்தப்பட்டு, மொத்த முதலீடு ரூ.53.5 லட்சம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், ரயில்வேக்கு ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் கோடியும், சாலைக்கு ரூ.3 லட்சத்து 9 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 6 ஆயிரம் பேருக்கு அரசு வேலை

தற்போது அனைத்து துறைகளுக்கும் மொத்தமாக பட்ஜெட் அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி 9-ஆம் தேதி பட்ஜெட் தொடர்பான விவாதம் நடைபெற உள்ளது. இதன் பின்னரே, எந்தெந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது தெரிவிக்கப்படும். புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு சுமார் 6000 பேர் அரசு பணிகளில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். புதுச்சேரியில் உள்ள இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் உள்ள சேதராப்பட்டு தொழிற்பேட்டையில் சுமார் 800 ஏக்கரில் தொழிற்சாலை அமைய உள்ளது.

மேலும் படிக்க: பிப்.17ல் தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் – சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!

விரைவில் நீர்வழி போக்குவரத்து

தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில் வருகிற 2047- ஆம் ஆண்டுக்குள் சாதகம் இருக்கும் பகுதியில் நீர்வழிப் போக்குவரத்து தொடங்கப்படும். ஒடிசா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு இடையில் ரேர் எர்த் காரிடார் திட்டம் வர உள்ளது. இந்த காரிடர் மூலம் இந்த மாநிலங்களில் முழுமையான போக்குவரத்து மேம்படுத்தப்படும். இதில், சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து ஆகியவற்றுடன் கிழக்கு கடற்கரை சாலையில் மிகப்பெரிய வளர்ச்சி அடையும். சென்னை முதல் ராமேஸ்வரம் வரை வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட உள்ளது.

5 மாநிலங்களில் பாஜக கூட்டணிக்கு வெற்றி உறுதி

இதற்கான சாத்திய கூறுகள் ஆய்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்தின் மூலம் இந்தியாவின் அனைத்து பகுதிகளும் தானாகவே வளர்ச்சி அடையும். எந்தெந்த திட்டங்கள் மக்களுக்கு தேவை இருக்கிறதோ அதற்கு மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. தமிழக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய கூட்டமாக மதுராந்தகம் மாநாடு இருந்தது. இதைத் தொடர்ந்து, மீண்டும் தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு பிரதமர் மோடி வருகை தர உள்ளார். 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்யும். தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைவதும், திமுக வீட்டுக்கு செல்வதும் உறுதியாகிவிட்டது என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க: திமுக கூட்டணியில் இம்முறை இரட்டை இலக்க இடங்கள் தான் கேட்கப்போகிறோம் – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திட்டவட்டம்..

Follow Us