தமிழகத்தில் 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும்.. அமைச்சர் அருண்ராஜ்
Health Minister Arunraj : தமிழகத்தில் கூடுதலாக 2,500 செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பான அறிவிப்புகளை இந்தப் பதவில் விரிவாக பார்க்கலாம் .
தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் பட்ஜெட் மீதனா விவாதம் நடைபெற்ற நிலையில், தற்போது, மானிய கோரிக்கை மீதான விவாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதன்படி, சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று செவ்வாய்க்கிழமை தொடங்கி நடைபெற்றது. இதில், மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது, சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் பேசுகையில், தமிழகத்தில் 2,500 செவிலியர் பணியிடங்கள் உருவாக்கப்படும். 3,594 மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 1,695 தொகுப்பூதிய செவிலியர்கள் பணியிடங்கள் உருவாக்கப்படும். சமூகம், குடும்பம், தனி மனித அளவில் ஆரோக்கியம் மேம்படுத்த “பாசிட்டிவ் ஹெல்த் பாலிசி” உருவாக்கப்படும். இது தொடர்பாக அனைத்து தகவல்களும் மக்களுக்கு கிடைக்க “நலம் 360” செயலி அறிமுகம் செய்யப்படும். அரசு மருத்துவமனைகளில் ரூ. 10 கோடியில் மருத்துவ கட்டமைப்புக்கான வடிவமைப்பு திட்டம் கொண்டு வரப்படும். தமிழ்நாடு மருத்துவ நகரம் உருவாக்கப்பட்டு மருத்துவ சேவை ஆராய்ச்சி சேவைகள் வழங்கப்படும். செவிலியர்களுக்கு தொகுப்பூதியத்தில் இருந்து காலமுறை ஊதியத்தில் பணி வழங்கப்படும்.
உலகத் தரம் வாய்ந்த மருத்துவ சேவைகள்
மருத்துவ துறையில் முதன்மை இடத்தை அடைய மருத்துவ நகரம் அமைக்கப்படும். உலக தரம் வாய்ந்த ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள் மற்றும் ஆராய்ச்சி மற்றும் ஆயுஷ் மருத்துவம் வழங்கப்படும். மருத்துவ பணியாளர்கள் தேர்வாணையம் மூலமாக ஒப்பந்த செவிலியர்களாக தேர்வு செய்யப்பட்டு தற்போது பணியில் இருந்து வரும் செவிலியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான காலமுறை ஊதியத்தில் செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி உள்ளனர்.
மேலும் படிக்க: மு.க.ஸ்டாலின் வரும்போது பேரவையில் பாதி பேர் இருக்க மாட்டீங்க… கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரபர பேச்சு!
பணி மூப்பு அடிப்படையில் செவிலியர்கள் நியமனம்
இதனை, பரிசீலனை செய்து அவர்களின் சேவையை கருத்தில் கொண்டு அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புதிதாக 2500 பணியிடங்கள் காலமுறை ஊதியத்தில் உருவாக்கப்படும். இந்த பணியிடங்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் செவிலியர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். மேலும், 284 உயர் சிறப்பு மருத்துவ பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்படும்.
115 அறிவிப்புகளை வெளியிட்ட சுகாதாரத்துறை அமைச்சர்
ரூ. 51 கோடியில் நலம் மற்றும் ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல் நல பரிசோதனை. 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆண்டுக்கு ஒரு முறை 14 அடிப்படை பரிசோதனைகள் ஆகியவை மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 115 புதிய அறிவிப்புகளை சுகாதாரத் துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் வெளியிட்டார்.
மேலும் படிக்க: முதல்வர் வருகையின் போது எழுந்திருக்க வேண்டுமா? பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் விளக்கம்!