“ஸ்டாலின் பேச்சில் ஆபாசமும் வக்கரமும்!”.. தவெக வேட்பாளர் சத்தியபாமா விவகாரத்தில் கொந்தளித்த விஜய்!
CM Vijay Condemns MK Stalin: தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக்கேலி செய்து பேசியதாகக் கூறி தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் பிரச்சாரம் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டமாக மாறியுள்ளதாகச் சாடியுள்ள அவர், தமிழகப் பெண்களின் சகோதரனாக இந்த கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் கூறியுள்ளார்.
சென்னை, அக்.03: தமிழகத்தில் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடுபிடித்து வரும் சூழலில், அரசியல் தலைவர்களுக்கு இடையேயான மேடைப் பேச்சுகளும் தனிப்பட்ட விமர்சனங்களும் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளன. தாராபுரம் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் இடையே காரசாரமான வார்த்தைப் போர்கள் நிலவி வருகின்றன. அந்த வகையில், தாராபுரத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசிய கருத்துகள் தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன. தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர் சத்தியபாமாவை சுட்டிக்காட்டி மு.க.ஸ்டாலின் பேசிய பேச்சுக்கு, தவெக தலைவர் முதல்வர் விஜய் தனது காரசாரமான கண்டன அறிக்கையின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
இதையும் படிக்க: ஜெம் வீரமணி வழக்கில் அதிரடி திருப்பம்.. மு.க.ஸ்டாலின், ரகுபதியிடம் விசாரணை நடத்த சிறப்பு குழுவில் மனு!!
உருவக் கேலி செய்ததாக முதல்வர் கடும் தாக்கு:
தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் என்ற பெயரில், தீய சக்தியான தி.மு.க. சார்பில் ஓர் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டத்தை நடத்தியுள்ளார், அதன் தலைவர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நமது தாராபுரம் தொகுதி வேட்பாளரான சகோதரி திருமதி சத்தியபாமா அவர்கள் குறித்து, உருவ…
— TVK Vijay (@TVKVijayHQ) October 3, 2026
தாராபுரம் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவக் கேலி செய்து, மிகவும் அநாகரிகமான முறையில் பேசி புளகாங்கிதம் அடைந்துள்ளதாகத் தவெக தலைவர் முதல்வர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரம் என்ற பெயரில் அவதூறு மற்றும் அநாகரிகக் கூட்டங்களை மு.க.ஸ்டாலின் நடத்தி வருவதாகவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பெண்களை ஆபாசமாகவும் இழிவாகவும் பேசி வரும் தீயசக்தியாக திமுக செயல்பட்டு வருகிறது என்றும், தமிழகப் பெண்களின் உடன்பிறந்த சகோதரனாக நின்று இந்த கண்டனத்தைப் பதிவு செய்வதாகவும் முதல்வர் விஜய் கொந்தளித்துள்ளார்.
திமுகவின் அரசியல் பண்பாடு குறித்து விமர்சனம்:
திமுகவின் அரசியல் அணுகுமுறை குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த முதல்வர் விஜய், ஆபாசம், வன்மம் மற்றும் வக்கரம் ஆகியவை திமுகவின் மூலக்கூறிலும் மூளைக்கூறிலும் கலந்திருக்கிறது என்று கடுமையாகச் சாடியுள்ளார். மேடையில் ஒரு பெண் வேட்பாளரின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் பேசுவது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், இத்தகைய அநாகரிகமான பேச்சுகளுக்குத் தாராபுரம் தொகுதி மக்கள் தேர்தல் களத்தில் தகுந்த பதிலடியைக் கொடுப்பார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: பயிர்க்கடன் வசூல் தற்காலிக நிறுத்தம்.. மீறி தொல்லை செய்தால் புகார் அளிக்க வாட்ஸ்அப் எண் அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி!!
அரசியல் களத்தில் கிளம்பியுள்ள பெரும் பரபரப்பு:
தாராபுரம் தேர்தல் களத்தில் ஸ்டாலினின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ள அதே வேளையில், தவெக தலைவர் முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி கண்டன அறிக்கை ஆளுங்கட்சி வட்டாரத்திலும் அரசியல் தளத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் பிரச்சார மேடைகளில் பெண்களின் கண்ணியத்தைப் பேணுவது குறித்தும், தனிப்பட்ட உருவக் கேலிகளைத் தவிர்ப்பது குறித்தும் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், இந்த விவகாரம் தமிழக அரசியலில் மேலும் சூட்டைப் பிடித்துள்ளது.