AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருச்சி புதிய காவிரி பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு: கனரக லாரி மூலம் சோதனை ஓட்டம்!

திருச்சி புதிய காவிரி பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவு: கனரக லாரி மூலம் சோதனை ஓட்டம்!

Deepan
Deepan | Published: 15 Nov 2026 14:11 PM IST

Trichy new Cauvery bridge construction: திருச்சி மாநகரத்தையும் ஸ்ரீரங்கத்தையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே ரூ.106 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய நான்கு வழித்தடப் பாலத்தின் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. கனரக லாரி மூலம் சோதனை ஓட்டம் நடைபெற்று வரும் நிலையில், நவம்பர் 20-ஆம் தேதி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இப்பாலத்தைத் திறந்து வைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திருச்சி மாநகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், ஆன்மீக நகரமான ஸ்ரீரங்கத்திற்கும் திருச்சி மாநகரத்திற்கும் இடையிலான போக்குவரத்தை மேலும் எளிதாக்குவதற்கும் காவிரி ஆற்றின் குறுக்கே புதிய பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. சுமார் ரூ.106 கோடி மதிப்பீட்டில் மிக பிரம்மாண்டமான நான்கு வழித்தடப் (Four-Lane) பாலமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த 2024-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள் இரவு பகலாகத் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது அனைத்து முக்கியப் பணிகளும் முடிவடைந்து இறுதி கட்டத்தை எட்டியுள்ளன.

கனரக லாரிகளை இயக்கி மேற்கொள்ளப்படும் பலம்:

பாலத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து விடுவதற்கு முன்பாக மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப ரீதியான சோதனைகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, பாலத்தின் தாங்கும் திறன் மற்றும் உறுதித்தன்மையை ஆய்வு செய்யும் பொருட்டு, அதிக எடை கொண்ட கனரக லாரிகளைப் பாலத்தின் மீது இயக்கிச் சோதனை ஓட்டம் (Load Test) நடத்தப்பட்டு வருகிறது. பொறியாளர்கள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் இந்தச் சோதனை ஓட்டம், பாலத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Follow Us