பல ஆண்டுகளாக உள்ளூர் செய்தி சேகரிப்பில் அனுபவம் பெற்றவர். அரசியல், சமூக பிரச்சினைகள், மக்கள் நலன், குற்றச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளை உடனுக்குடன் தரமான முறையில் வழங்குவதில் திறமை பெற்றுள்ளார். மாவட்ட செய்திகளை வேகமாகவும் நம்பகத்தன்மையுடனும் வழங்கும் திறன் கொண்டவர். டிஜிட்டல் மற்றும் வீடியோ செய்தி தயாரிப்பிலும் அனுபவம் பெற்றுள்ளார். துல்லியமான மற்றும் விரைவான செய்தி வழங்கலில் கவனம் செலுத்துகிறார்.
தீபாவளி நள்ளிரவில் துணிகர சம்பவம்.. பட்டாசு சத்தத்தை பயன்படுத்தி அடுத்தடுத்து கடைகளில் கொள்ளை!!
Burglary Shock in Trichy Woraiyur: திருச்சி உறையூர் பகுதியில் தீபாவளிப் பண்டிகை நள்ளிரவில் பட்டாசு சத்தத்தைச் சாதகமாகப் பயன்படுத்தி அடுத்தடுத்து கடைகளின் பூட்டை உடைத்து துணிகரக் கொள்ளை சம்பவம் அரங்கேறியுள்ளது. பூட்டை உடைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- Deepan
- Updated on: Nov 9, 2026
- 12:28 pm IST
திருச்சியில் பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து.. வெடித்துச் சிதறிய பட்டாசுகள்! ரூ.5 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் நாசம்!
திருச்சி எடமலைப்பட்டி புதூரில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக பட்டாசு கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மாநகர் எடமலைப்பட்டி புதூர் பகுதியில் இன்று மாலை இந்த தீ விபத்து நிகழ்ந்தது. தீ மளமளவென பரவியதால் கடையில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் அடுத்தடுத்து வெடித்துச் சிதறின. இதனால் அப்பகுதி முழுவதும் பெரும் சத்தம் கேட்டது. அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
- Deepan
- Updated on: Nov 5, 2026
- 8:58 pm IST
திருச்சியில் விவசாயிகளுக்கு தீபாவளி பரிசுப் பொருட்கள் – அமைச்சர் ரமேஷ் வழங்கி மதிய உணவு உபசரிப்பு!
திருச்சி மாவட்ட பொறுப்பு அமைச்சரும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான ரமேஷ் ஏற்பாட்டில், விவசாயிகளுக்கு தீபாவளி பரிசுத் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் பட்டாசுகள் அடங்கிய பரிசுத் தொகுப்புகளை அமைச்சர் வழங்கினார். தொடர்ந்து, விவசாயிகளுடன் அமர்ந்து மதிய உணவும் அருந்தினார். தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- Deepan
- Updated on: Nov 2, 2026
- 7:56 pm IST
திருச்சியில் உணவு வீதி.. கெட்டுப்போன உணவுகள் விற்றால் நடவடிக்கை.. அமைச்சர் எச்சரிக்கை!
திருச்சி காஜாமலை ரேஸ்கோர்ஸ் சாலையில், தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள "ஆரோக்கியமான மற்றும் சுகாதாரமான உணவகங்களின் வீதி" (Food Street) திறப்பு விழா இன்று நடைபெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கலந்துகொண்டு, உணவு வீதியை தொடங்கி வைத்து, உணவக உரிமையாளர்களுக்குரிய ஆணைகளை வழங்கி, கடைகளைப் பார்வையிட்டனர்.
- Deepan
- Updated on: Nov 2, 2026
- 10:12 am IST
தவறு செய்தவர்கள் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் – அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை!
ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளைத் தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும், தவறு செய்தவர்கள் நிச்சயம் அதற்கான பலனை அனுபவிப்பார்கள் என்றும் அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி மற்றும் 64-வது குருபூஜையை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு அமைச்சர் ரமேஷ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் விக்னேஷ், கதிரவன் உள்ளிட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.
- Deepan
- Updated on: Oct 30, 2026
- 1:33 pm IST
கே.என்.நேரு வீட்டில் 8 மணி நேரத்துக்கும் மேலாக நீடித்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நிறைவு! “சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளைத் திசைதிருப்ப ரெய்டு” – நேரு குற்றச்சாட்டு
திருச்சி தில்லை நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் நடத்திய சோதனை நிறைவடைந்தது. கடந்த திமுக ஆட்சியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.634 கோடி பணி நியமன ஊழல் வழக்கு தொடர்பாக, இன்று காலை 7 மணிக்குத் தொடங்கிய சோதனை எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. இதில், முக்கிய ஆவணங்கள் மற்றும் நேருவின் தம்பி மணிவண்ணனுக்குச் சொந்தமான இரண்டு மடிக்கணினிகளை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Deepan
- Updated on: Oct 29, 2026
- 9:53 pm IST
முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
DVAC Raids KN Nehru : திமுக முதன்மை செயலாளரும், முன்னாள் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் திருச்சி தில்லை நகரில் உள்ள இல்லத்தில், அக்டோபர் 29, 2026 இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- Deepan
- Updated on: Oct 29, 2026
- 8:43 am IST
கங்கைகொண்ட சோழபுரத்தில் 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேகம்!
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள உலகப் புகழ்பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில், ஐப்பசி பௌர்ணமியை முன்னிட்டு 100 மூட்டை பச்சரிசியால் அன்னாபிஷேக விழா கோலாகலமாகத் தொடங்கியது. மாமன்னன் ராஜேந்திர சோழனால் கட்டப்பட்ட இக்கோவிலில், இன்று அதிகாலை யாக பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, ஆறு கொதிகலன்களில் சமைக்கப்பட்ட சாதம் முதலில் மகா கணபதிக்கு படைக்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க பிரகதீஸ்வரருக்கு சாற்றப்பட்டது.
- Deepan
- Updated on: Oct 25, 2026
- 10:19 pm IST
பெரம்பலூர் அருகே வெள்ளாற்றில் சிக்கிய 9 பேர் பத்திரமாக மீட்பு!
பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிகாடு பேரூராட்சியில் இருந்து அரங்கூர் செல்லும் பாதையில் உள்ள வெள்ளாற்றில் சிக்கிய 9 பேரைத் தீயணைப்புத் துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி பத்திரமாக மீட்டனர். கடந்த மாதம் அப்பகுதியில் பொருட்காட்சிக்காக அமைக்கப்பட்டிருந்த ராட்டினங்கள் மற்றும் உபகரணங்களை அகற்றுவதற்காக ஆத்தூர் அருகே நரசிங்கபுரத்தைச் சேர்ந்த செல்வா, கிருஷ்ணன், மூர்த்தி, ராஜாராம், தினேஷ், வரதராஜ பெருமாள், பெரியசாமி, கார்த்தி, பாரத் ஆகிய 9 பணியாளர்கள் சென்றுள்ளனர்.
- Deepan
- Updated on: Oct 25, 2026
- 10:10 pm IST
மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா.. தஞ்சை பெரிய கோவிலில் 1041 மாணவிகளின் நாட்டியாஞ்சலி!
Raja Raja Chola 1041st Sadaya Vizha Begins: தஞ்சாவூர் பெரிய கோவிலில் மாமன்னன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா அரசு விழாவாகக் கோலாகலமாகத் தொடங்கியது. இவ்விழாவையொட்டி 1041 நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட பரதநாட்டிய புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றதுடன், பாரம்பரிய ஊர்வலமும் சிறப்பாக நடத்தப்பட்டது.
- Deepan
- Updated on: Oct 22, 2026
- 2:33 pm IST
தஞ்சையில் கோலாகலமாக தொடங்கிய ராஜராஜ சோழனின் 1401-வது சதய விழா..
Raja Raja Chola 1401st Sataya Vizha: தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழனின் 1401-வது சதய விழா தஞ்சையில் கோலாகலமாகத் தொடங்கியது. அரண்மனையிலிருந்து பெரிய கோயில் வரை நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலம், பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- Deepan
- Updated on: Oct 21, 2026
- 2:38 pm IST
“எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் ஒன்றுதான்”.. அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி!!
Minister Sengottaiyan Criticizes EPS and DMK: எடப்பாடி பழனிசாமியும் திமுகவும் ஒன்றுதான் எனத் திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிரடியாகத் தெரிவித்துள்ளார். மேலும் மாநிலக் கடன் அளவு குறைப்பு மற்றும் மழைநீர் அகற்றும் பணிகள் குறித்தும் அவர் விளக்கமளித்தார்.
- Deepan
- Updated on: Oct 21, 2026
- 2:28 pm IST