AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காற்று மாசுபாட்டால் கண்களில் எரிச்சல்: மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

Protect Your Eyes: காற்றில் கலந்துள்ள நச்சுத் துகள்கள் மற்றும் புகையானது கண்களின் ஈரப்பதத்தைச் சிதைத்து வறட்சி, எரிச்சல் மற்றும் அரிப்பை உண்டாக்குகின்றன. வெளியில் செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடி அணிவதும், கைகளால் கண்களைக் கசக்காமல் சுத்தமான நீரால் கழுவுவதும் கண்களைப் பாதுகாக்க உதவும்.

காற்று மாசுபாட்டால் கண்களில் எரிச்சல்: மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?
Image Source: magnific
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 09 Nov 2026 13:30 PM IST

காற்று மாசுபாடு நுரையீரலை மட்டுமல்லாமல், நேரடியாகக் காற்றில் வெளிப்படும் நமது கண்களையும் கடுமையாகப் பாதிக்கிறது. காற்றில் உள்ள நச்சுப் புகையும் நுண்ணிய தூசுத் துகள்களும் கண்களின் ஈரப்பதப் படலத்தைச் (Protect Your Eyes) சிதைத்து வறட்சியை ஏற்படுத்துகின்றன. இதன் காரணமாகக் கண்களில் தீவிர எரிச்சல், அரிப்பு, சிவந்து போதல் மற்றும் நீர் வடிதல் போன்ற அசௌகரியமான அறிகுறிகள் உருவாகின்றன. வெளியில் செல்லும்போது பாதுகாப்பு கண்ணாடிகளை அணிவது நச்சுத் துகள்கள் நேரடியாகக் கண்களில் விழுவதைத் தடுக்கும். அசுத்தமான கைகளால் கண்களை ஒருபோதும் கசக்கக் கூடாது. இது தொற்றுகளை மேலும் தீவிரமாக்கும். வெளியில் சென்று வீட்டிற்குத் திரும்பியவுடன் சுத்தமான நீரைக் கொண்டு கண்களைக் மெதுவாகக் கழுவுவது நல்லது.

Also Read: சமையலறை சிங்க்கில் கொதிக்கும் சுடுநீரை நேரடியாக ஊற்றக்கூடாதா?

காற்று மாசுபாட்டால் கண்களில் எரிச்சல்

காற்று மாசுபாடு மனித உடலில் சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை மட்டுமல்லாமல், கண்களுக்கும் கடும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. குறிப்பாக குளிர்காலம் மற்றும் பனிமூட்டக் காலங்களில் காற்றில் கலந்திருக்கும் நச்சுத் துகள்கள் மற்றும் புகை மண்டலம் நேரடியாக நமது கண்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இதன் காரணமாகக் கண்களில் எரிச்சல், நீர் வடிதல் மற்றும் ஒவ்வாமை போன்ற தொந்தரவுகள் பொதுவான பிரச்சனையாக உருவெடுக்கின்றன.

காற்று மாசுபாடு ஏன் கண்களைப் பாதிக்கிறது?

நம் உடலின் வெளிப்படையான காற்றுடன் நேரடியாகத் தொடர்பில் இருக்கும் மிகக் சில உறுப்புகளில் கண்கள் முக்கியமானவை ஆகும். கண்களின் மேற்பரப்பை ஈரப்பதத்துடன் பாதுகாக்கும் கண்ணீர்ப் படலம், காற்றில் உள்ள நச்சுத் துகள்களால் எளிதில் சிதைவடைகிறது. வாகனங்களிலிருந்து வெளியாகும் புகைகள், தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் காற்றில் பறக்கும் நுண்ணிய தூசுப் பொருட்கள் (PM2.5) ஆகியவை கண்களின் மேற்பரப்பில் தங்கி கடும் எரிச்சலையும் அழற்சியையும் ஏற்படுத்துகின்றன.

கண்களில் ஏற்படும் முக்கிய அறிகுறிகள்

காற்றின் தரம் மோசமடையும் போது கண்களில் பல்வேறு அசௌகரியங்கள் வெளிப்படுகின்றன. குறிப்பாகக் கண்களில் எரிச்சல் அல்லது நறநறப்புத் தன்மை, கண்கள் சிவந்து போதல், அதிகப்படியான அரிப்பு மற்றும் கண்ணீர் வடிதல் ஆகியவை இதன் முக்கிய வெளிப்பாடுகளாகும். மேலும், கண்கள் வறண்டு போதல், லேசான வீக்கம் மற்றும் தற்காலிகமாகப் பார்வையில் மங்கள் போன்ற தொந்தரவுகளும் காற்று மாசுபாட்டினால் உண்டாகலாம்.

வீட்டில் செய்ய வேண்டிய எளிய பாதுகாப்பு முறைகள்

கண்களைப் பாதுகாக்க சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும். கண்களை ஒருபோதும் கைகளால் கசக்கக் கூடாது. இது நிலைமையை மேலும் மோசமாக்கும். வெளியில் சென்று வந்த பிறகு முகத்தையும் கண்களையும் சுத்தமான நீரினால் கழுவலாம். கண் வறட்சியைத் தவிர்க்க மருத்துவரின் ஆலோசனையுடன் பாதுகாப்பான மாய்ஸ்சரைசிங் கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்தலாம். மேலும், வெளியில் செல்லும்போது கண்ணாடிகளை அணிவது காற்றில் உள்ள துகள்கள் நேரடியாகக் கண்களைத் தாக்குவதைக் குறைக்கும்.

Also Read: சமையலறை சிங்க்கில் கொதிக்கும் சுடுநீரை நேரடியாக ஊற்றக்கூடாதா?

மருத்துவரை எப்போது அணுக வேண்டும்?

பொதுவாக மாசுபாட்டால் ஏற்படும் சிறு எரிச்சல்கள் தூய்மையான சூழலுக்குச் சென்றதும் ஓரிரு நாட்களில் சரியாகிவிடும். இருப்பினும், கண்களில் கடுமையான வலி, தொடர் சிவத்தல், பார்வை மங்குதல் அல்லது வீக்கம் போன்ற அறிகுறிகள் தொடர்ந்தால் உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெறுவது அவசியம்.

 

Follow Us