அமெரிக்காவில் 2009 ஆம் ஆண்டு 13 ராணுவ வீரர்களைக் கொன்ற வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட முன்னாள் ராணுவ அதிகாரி நிடால் மாலிக் ஹசனுக்கு, துப்பாக்கிச் சூடு மூலம் மரண தண்டனை நிறைவேற்றத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மரண தண்டனை நேரலையில் ஒளிபரப்பப்படும் என்று அமெரிக்கப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஃபோர்ட் ஹூட் ராணுவத் தளத்தில், மருத்துவக் கட்டடத்தில் இருந்த ஆயுதமற்ற 13 ராணுவ வீரர்களை ஹசன் சுட்டுக் கொன்றார். அமெரிக்க ராணுவத்தில் மனநல மருத்துவராகப் பணியாற்றிய அவர், இந்தத் தாக்குதலில் தனது பங்கைக் குற்றவியல் விசாரணையின்போது ஒப்புக்கொண்டார்.