AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
Sivasankari Bose

Sivasankari Bose

Senior Sub-Editor

sivasankari.subash@tv9.com

தந்தையின் வழிகாட்டுதல் படி, அடியெடுத்து வைத்த தனக்கு ஊடகத்துறையில் 9 ஆண்டுகள் அனுபவம். பட்ட மேற்படிப்பு இரண்டாம் ஆண்டு படிக்கும் போதே பிரபல தமிழ் செய்தி தாளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ்நாடு, குற்றச்செய்திகள், மாநில மற்றும் உலகச் செய்திகளை பிரத்யேகமாக எழுதுவதில் ஆர்வம் உண்டு. தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி நிறுவனங்களில் மாவட்ட செய்திகளின் பொறுப்பாளராகவும், செய்தியாளராகவும் இருந்த தனக்கு நேர்காணல் செய்யும் அனுபவமும் உண்டு. தற்போது TV9 TAMIL -ல் சீனியர் சப் எடிட்டராக பணிபுரிகிறார்.

Read More
இயற்கை சூழ்ந்த அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட வீடு எப்படி இருக்கு?

இயற்கை சூழ்ந்த அல்லு அர்ஜுனின் பிரம்மாண்ட வீடு எப்படி இருக்கு?

Allu Arjun’s Luxurious Home: அல்லு அர்ஜுனின் ஹைதராபாத் இல்லம் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பசுமையான தோட்டம் மற்றும் அழகிய நீச்சல் குளத்துடன் அமைந்துள்ளது. இயற்கையை வீட்டுக்குள் இருந்தே ரசிக்கும் வகையில் பெரிய கண்ணாடி சுவர்கள் மற்றும் திறந்தவெளி வடிவமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆடம்பரத்துடன் குடும்பத்துக்கான தனியுரிமை மற்றும் அமைதியான சூழலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதால், இந்த இல்லம் தனித்துவமானதாக மாறியுள்ளது.

வீட்டில் இடத்தை அடைக்காத 6 சூப்பர் பூஜை அறை டிசைன்கள் இதோ!

வீட்டில் இடத்தை அடைக்காத 6 சூப்பர் பூஜை அறை டிசைன்கள் இதோ!

Small Pooja Room Ideas: அடுக்குமாடி குடியிருப்புகளில் இட நெருக்கடியைத் தவிர்க்கச் சுவரில் பொருத்தப்படும் மர அலமாரிகள், மிதக்கும் பலகைகள் மற்றும் மூலை அமைப்புகள் பூஜை அறையாகச் செயல்படுகின்றன. ஜாளி தடுப்புகள், சிறிய மார்பிள் மேடைகள் மற்றும் ஸ்லைடிங் கதவுகள் குறைந்த இடத்திலும் நேர்த்தியான மற்றும் நவீன ஆன்மீகத் தோற்றத்தைத் தருகின்றன.

கையில் எப்போதும் இருக்கும் சாவியை இப்படி சுத்தம் செய்திருக்கிறீர்களா?

கையில் எப்போதும் இருக்கும் சாவியை இப்படி சுத்தம் செய்திருக்கிறீர்களா?

Vinegar on Keys: தினசரி பயன்படுத்துவதால் சாவிகளில் சேரும் தூசி, எண்ணெய் பிசுக்கு மற்றும் அழுக்கை அகற்ற வெள்ளை வினிகரை பயன்படுத்தலாம். வினிகரை லேசாக தெளித்து சில நிமிடங்கள் கழித்து மென்மையான துணியால் துடைத்தால் சாவி சுத்தமாகும். சுத்தம் செய்த பிறகு ஈரப்பதம் இல்லாமல் முழுமையாக உலர்த்துவதுடன், பூச்சு செய்யப்பட்ட சாவிகள் மற்றும் எலக்ட்ரானிக் கீ ஃபாப்களில் கூடுதல் கவனம் தேவை.

பழைய ஜீன்ஸை இனி குப்பையில் போடாதீங்க: அசத்தலான 5 ஐடியாக்கள்!

பழைய ஜீன்ஸை இனி குப்பையில் போடாதீங்க: அசத்தலான 5 ஐடியாக்கள்!

Upcycle Old Jeans: பழைய மற்றும் பயன்படுத்த முடியாத ஜீன்ஸ் ஆடைகளைக் குப்பையில் வீசாமல், அவற்றின் தடிமனான தன்மையைப் பயன்படுத்தி கைப்பை, கோஸ்டர்கள் மற்றும் சேமிப்புப் பெட்டிகளாக எளிதாக மாற்றலாம். ஜீன்ஸில் உள்ள பாக்கெட்டுகளைப் பயன்படுத்தி அழகான 'சுவர் ஆர்கனைசர்கள்' மற்றும் செடித் தொட்டி உரைகளை உருவாக்கி வீட்டை அலங்கரிக்க முடியும்.

முதுகு வலியா? சிறுநீரகத்தில் கல் இருக்கலாம்… அலட்சியம் வேண்டாம்!

முதுகு வலியா? சிறுநீரகத்தில் கல் இருக்கலாம்… அலட்சியம் வேண்டாம்!

Kidney Stones: போதிய நீர்ச்சத்து இல்லாதது, அதிக உப்பு பயன்பாடு மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே சிறுநீரகத்தில் கற்கள் உருவாக முக்கியக் காரணமாகின்றன. கடுமையான முதுகு வலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் அசௌகரியங்கள் இதன் முதன்மை அறிகுறிகளாகும் என்பதால் இளைஞர்களும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தினமும் போதுமான அளவு தண்ணீர் குடிப்பதுடன், சீரான உணவுமுறையைப் பின்பற்றுவதன் மூலம் இப்பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

தீ விபத்து ஆபத்து: ஒரே பிளாக்கில் இரண்டு பெரிய மின் சாதனங்களா?

தீ விபத்து ஆபத்து: ஒரே பிளாக்கில் இரண்டு பெரிய மின் சாதனங்களா?

Electrical Safety: அதிக மின்சாரத்தைப் பயன்படுத்தும் ஏர் பிரையர், ஹேர் டிரையர், ஃப்ரிட்ஜ் மற்றும் ஹீட்டர் போன்ற சாதனங்களை ஒரே சாக்கெட்டில் இணைப்பது ஆபத்தானது. இத்தகைய கருவிகள் ஒரே நேரத்தில் இயங்கும்போது மின்சுற்றில் அதிக அழுத்தம் ஏற்பட்டு, ஒயர்கள் உருகி தீ விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மின் விபத்துகளைத் தவிர்க்க அதிக வாட்ஸ் கொண்ட சாதனங்களைத் தனித்தனி மின் இணைப்புகளில் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

கொதிக்கும் சூடான டீ, காபியா? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கோங்க!

கொதிக்கும் சூடான டீ, காபியா? இந்த ஆபத்தை தெரிஞ்சுக்கோங்க!

Very Hot Beverages: மிகவும் சூடாக உள்ள தேநீர், காபி போன்ற பானங்களை தொடர்ந்து குடிப்பது உணவுக்குழாயில் வெப்பத்தால் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். அதிக வெப்பநிலையில் உள்ள பானங்களை நீண்டகாலம் அருந்துவது உணவுக்குழாய் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே, சூடான பானங்களை சிறிது நேரம் ஆறவைத்து குடிப்பது பாதுகாப்பான பழக்கமாக இருக்கலாம்.

போன் சார்ஜ் மெதுவாக ஏறுதா? இந்த 5 விஷயங்களை முதலில் கவனிங்க!

போன் சார்ஜ் மெதுவாக ஏறுதா? இந்த 5 விஷயங்களை முதலில் கவனிங்க!

செல்போன் மெதுவாக சார்ஜ் ஆவதற்கு பழுதான கேபிள், சார்ஜர், மின் இணைப்பு அல்லது சார்ஜிங் போர்ட்டில் சேர்ந்துள்ள அழுக்கு போன்றவை காரணமாக இருக்கலாம். சார்ஜ் செய்யும் போது போனை அதிகமாக பயன்படுத்துவதும் வெப்பத்தை அதிகரித்து சார்ஜிங் வேகத்தை பாதிக்கலாம். எனவே முதலில் சார்ஜிங் உபகரணங்களைச் சரிபார்த்து, பிரச்சனை தொடர்ந்தால் பேட்டரி மற்றும் போனை நிபுணரிடம் பரிசோதிப்பது நல்லது.

80-ஸ் லுக் வேணுமா? ஒரே கிளிக்கில் உங்களை ரெட்ரோ ஸ்டாராக மாற்றும் ஏஐ!

80-ஸ் லுக் வேணுமா? ஒரே கிளிக்கில் உங்களை ரெட்ரோ ஸ்டாராக மாற்றும் ஏஐ!

80s Retro Trend: இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் தங்களின் புகைப்படங்களை 1980-களின் ரெட்ரோ பாணிக்கு மாற்றும் புதிய டிரெண்ட் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. சாட் ஜிபிடி (ChatGPT) செயலியில் பயனர்கள் தங்களது தற்போதைய புகைப்படத்தைப் பதிவேற்றி, 80-களின் ஆடை மற்றும் தலைமுடி அலங்காரக் குறிப்புகளை அளிப்பதன் மூலம் இத்தகைய விண்டேஜ் புகைப்படங்களை எளிதாக உருவாக்க முடியும்.

உலகின் பிரமாண்ட கோவில்களில் ஒன்று… எங்கு அமைந்துள்ளது தெரியுமா?

உலகின் பிரமாண்ட கோவில்களில் ஒன்று… எங்கு அமைந்துள்ளது தெரியுமா?

Swaminarayan Akshardham: அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் 183 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சுவாமிநாராயண் அக்ஷர்தாம் கோவில், அதன் பிரமாண்ட கட்டிடக்கலை மற்றும் சிற்ப வேலைப்பாடுகளால் சிறப்பு பெற்றுள்ளது. சுமார் 12 ஆண்டுகள் நடைபெற்ற கட்டுமானப் பணியில் ஏராளமான கற்கள் பயன்படுத்தப்பட்டதுடன், பல்வேறு நீர்நிலை அமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. 13 சன்னிதிகள், நான்கு முக்கிய மண்டபங்கள் மற்றும் நீண்ட தூண் வரிசை உள்ளிட்ட அம்சங்கள் இந்த ஆலயத்தின் தனித்துவத்தை மேலும் வெளிப்படுத்துகின்றன.

நாய்களின் மோப்ப சக்தியால் புற்றுநோயை முன்பே கண்டறிய முடியுமா?

நாய்களின் மோப்ப சக்தியால் புற்றுநோயை முன்பே கண்டறிய முடியுமா?

Dogs Cancer Detection: நாய்களின் அபாரமான மோப்பத் திறனைப் பயன்படுத்தி, மனிதர்களின் மூச்சில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் மூலம் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய முடியுமா என விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர். பயிற்சி பெற்ற நாய்களின் செயல்பாட்டை சென்சார்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுடன் இணைத்து, புற்றுநோயுடன் தொடர்புடைய வாசனை மாற்றங்களை துல்லியமாக அடையாளம் காணும் முயற்சிகளும் நடைபெறுகின்றன.

அட, இதுதான் காரணமா? மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவது ஏன்?

அட, இதுதான் காரணமா? மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவது ஏன்?

Post Lunch Sleepiness: மதிய உணவுக்குப் பிறகு தூக்கம் வருவது உடலின் இயற்கையான தூக்கம்–விழிப்பு சுழற்சி, செரிமானம் மற்றும் சாப்பிடும் உணவின் தன்மை காரணமாக ஏற்படலாம். அதிகமாக சாப்பிடுவது, சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, இரவில் போதுமான தூக்கம் இல்லாதது போன்றவை இந்த சோர்வை அதிகரிக்கலாம்.