இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பயன்படுத்தியதாகக் கூறப்படும் ஒரு முக்கியமான நினைவுச்சின்னம் தற்போது காணாமல் போயுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நேதாஜியின் பேரன் சந்திர குமார் போஸ், டெல்லி செங்கோட்டை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்த நேதாஜியின் தொப்பி தற்போது காணவில்லை என்று சமூக வலைதளத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.