தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை ஹன்சிகா மோத்வானி தனது கணவர் சோஹேல் கத்தூரியாவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக விவாகரத்து பெற்றுள்ளார் மும்பை பாண்ட்ரா குடும்ப நீதிமன்றம் இருவருக்கும் பரஸ்பர சம்மதத்தின் அடிப்படையில் விவாகரத்து வழங்கியதாக ஹன்சிகாவின் வழக்கறிஞர் அட்னான் ஷேக் தெரிவித்துள்ளார். கடந்த 2022 டிசம்பர் 4 ஆம் தேதி ஜெய்ப்பூரில் உள்ள முண்டோட்டா கோட்டையில் ஹன்சிகா மற்றும் சோஹேல் கத்தூரியா மிகப் பிரம்மாண்டமாக திருமணம் செய்துகொண்டனர்.