வெறும் 5 வாக்காளர்களுக்கு மெனக்கடல்.. தேனி மாவட்ட மலைக்கிராமம் குறித்து பேசிய தேர்தல் ஆணையர்!
Election Booth For Only 5 Voters In Varusanadu In Theni | தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணை இன்று வெளியிடப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதியில் 5 வாக்காளர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சென்னை, மார்ச் 15 : தமிழ்நாடு (Tamil Nadu) உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தல்களுக்கான (Assembly Election) தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் இன்று செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர் தேனி மாவட்டத்தில் உள்ள வருசநாடு பகுதி குறித்து பேசினார். அந்த பகுதியை சிறப்பு வாக்குச்சாவடி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், வருசநாடு குறித்து தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழகத்தில் ஒரு கட்டமாக நடைபெறும் தேர்தல்
தமிழ்நாடு, கேரளா (Kerala), புதுச்சேரி (Puducherry), அசாம் (Assam) மற்றும் மேற்கு வங்க (West Bengal) மாநிலங்களுக்கான தேர்தல் அட்டவணையை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். அதன்படி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என கூறிய அவர் ஏப்ரல் 23, 2026 அன்று வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 04, 2026 அன்று வாக்கு எண்ணப்படும் என்றும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதையும் படிங்க : திமுக கூட்டணியில் இருந்து வெளியேறும் விசிக, கம்யூனிஸ்டுகள்?.. அண்ணாமலை சொன்ன ஷாக் தகவல்!!
தமிழகத்தில் வெறும் 5 வாக்களார்களுக்கு வாக்குச்சாவடி
தமிழ்நாடு குறித்து அறிவிக்கும்போது தேனி மாவட்டம், வருசநாடு பகுதி குறித்து தலைமை தேர்தல் அதிகாரி சில முக்கிய தகவல்களை வெளியிட்டார். அதாவது, தமிழ்நாட்டின் தேனி மாவட்டம், வருசநாடு மலைப்பகுதியில் 5 வாக்காளர்களுக்கு வெள்ளிமலை எனும் பகுதியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டுள்ளது. மூன்று மணி நேரம் அதிகாரிகள் இதற்காக பயணம் செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
இதையும் படிங்க : K. Ponmudi Tamil Nadu Election: விழுப்புரத்தில் தொடர் வெற்றியில் திளைத்த க.பொன்முடி… மீண்டும் களமிறக்கப்படுவாரா!
தமிழகத்தில் ஏப்ரல் 23, 2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு மார்ச் 30, 2026 அன்று மனு தாக்கல் தொடங்குகிறது. மனு தாக்கல் செயவ்தற்கான கடைசி தேதியாக ஏப்ரல் 06, 2026 அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்ரல் 07, 2026 அன்று தொடங்க உள்ள நிலையில், வேட்பு மனுக்களை திரும்ப பெறுவதற்கான கடைசி தேதியாக ஏப்ரல் 09, 2026 அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.