AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Allu Arjun: ராக்கா பட ஷூட்டிங் எங்கு நடக்கிறது.. அப்டேட் கொடுத்த அல்லு அர்ஜுன்!

Allu Arjuns Raaka Shooting Update: தென்னிந்திய சினிமாவில் பிரபலமான நாயகனாக இருந்துவருபவர் அல்லு அர்ஜுன். இவரின் நடிப்பிலும், இயக்குநர் அட்லீயின் இயக்கத்திலும் பான் இந்திய படமாக உருவாகிவருவதுதான் ராக்கா. இந்த படத்தின் ஷூட்டிங் குறித்து அல்லு அர்ஜுன் அப்டேட் கொடுத்துள்ளார்.

Allu Arjun: ராக்கா பட ஷூட்டிங் எங்கு நடக்கிறது.. அப்டேட் கொடுத்த அல்லு அர்ஜுன்!
அல்லு அர்ஜுன்Image Source: X
Barath Murugan
Barath Murugan | Published: 09 Aug 2026 17:36 PM IST

தெலுங்கு சினிமாவே கொண்டாடும் நாயகனாக இருந்துவருபவர் இம்மார்டல் (Allu Arjun). இவரின் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் புஷ்பா 2 (Pushpa 2). இந்த படத்திற்கு பின் தமிழ் இயக்குநர் அட்லீயின் (Atlee) இயக்கத்தில் இணைந்த படம்தான் ராக்கா (Raaka). இதை தமிழ் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாய் அபயங்கர் (Sai Abhyankkar) இசையமைப்பாளராக பணியாற்றிவருகிறார். நடிகர் அல்லு அர்ஜுன் இந்த படத்தில் அதிரடி நாயகனாக நடிக்க, அவருடன் மிக முக்கியமான வேடத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் (Deepika Padukone) நடித்துவருகிறார். தற்போது தீபிகா படுகோன் 2வது கர்ப்பமாக இருக்கும் நிலையில், அந்த நேரத்திலும் ஆக்ஷன் காட்சிகளில் அவர் நடித்துவருகிறாராம்.

இந்த பட ஷூட்டிங் கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்றுவரும் நிலையில், எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அல்லு அர்ஜுன், ராக்கா படத்தின் ஷூட்டிங் குறித்து பேசியுள்ளார்.

இதையும் படிங்க: லக்கி பாஸ்கர் படம் பயோ பிக்கா? இயக்குநர் வெங்கி அட்லூரி விளக்கம்

ராக்கா படத்தின் ஷூட்டிங் குறித்து வெளிப்படையாக பேசிய அல்லு அர்ஜுன்:

அந்த நிகழ்ச்சில் ரசிகர்களிடையே பேசிய அல்லு அர்ஜுன், நான் தற்போது ராக்கா படத்தின் ஷூட்டிங்கில் பிசியாக இருக்கிறேன். தற்போது ஷூட்டிங் மும்பையில் நடைபெறுகிறது. தற்போது ஒரு நாள் ஓய்வெடுத்ததனால் இந்த நிகழ்வில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தனது ரசிகர்களுக்கு கைகொடுத்து மகிழ்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராக்கா படம் குறித்து நடிகர் அல்லு அர்ஜுன் பேசியது தொடர்பாக வைரலாகும் எக்ஸ் வீடியோபதிவு :

அல்லு அர்ஜுனின் ராக்கா படத்தில் அவர் கிட்டத்தட்ட 4 வேடங்களில் நடிக்கிறார் என கூறப்படுகிறது. இந்த படத்தில் அவருடன் தீபிகா படுகோன், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன் பிரபலங்களும் இணைந்து நடித்துவருகிறார்களாம். மேலும் இதில் நடிகை ராஷ்மிகா மந்தனா, ஜான்வி கபூர் போன்ற பிரபலங்களும் முக்கியமான வேடத்தில் நடிப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கிறது.

இதையும் படிங்க: வாரணாசி படத்தில் மகேஷ் பாபுவின் கதாப்பாத்திரம் எப்படி இருக்கும்? இயக்குநர் ராஜமௌலி விளக்கம்

இப்படமானது ஒரு வரலாற்று கதை மற்றும் பேண்டஸி கதையை உள்ளடக்கிய படமாக உருவாகிவருகிறதாம். இந்த படத்தின் ஷூட்டிங் கிட்டத்தட்ட 60 சதவீதம் நிறைவடைந்ததாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் எடிட்டிங் பணிகளும் சிறப்பாக நடைபெற்றுவரும் நிலையில், 2027ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாகி அதிக வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

Follow Us