AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம்? அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த தகவல்

New OTT Platform : தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமாவுக்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். இதுகுறித்து இடைத்தேர்தலுக்கு பிறகு முடிவெடுக்கப்படும் என்றார்.

தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம்? அமைச்சர் ராஜ்மோகன் பகிர்ந்த தகவல்
அமைச்சர் ராஜ்மோகன்
Karthikeyan S
Karthikeyan S | Published: 26 Sep 2026 19:56 PM IST

சென்னை, செப்டம்பர் 26 : தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கத்தின் 6வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டம் செப்டம்பர் 26, 2026 இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக் கல்வி மற்றும் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் ராஜ்மோகன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் தமிழ் சினிமாவுக்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து விரைவில் நல்ல செய்தி வரும் என்று தெரிவித்தார். அவர் பேசியது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ் சினிமாவுக்கு தனி ஓடிடி தளம்?

நிகழ்வில் பேசிய அமைச்சர் ராஜ்மோகன், தமிழ் சினிமாவுக்கான ஓடிடி தளம் அமைப்பது குறித்து வெகு விரைவில் நல்ல செய்தி வரும். இது குறித்து நாம் அனைவரும் அமர்ந்து பேசி முடிக்க, முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இடைத்தேர்தல் முடிந்த பிறகு இது தொடர்பாகப் பேசுவோம். தயவுசெய்து உங்கள் முடிவுகளை முன்கூட்டியே முடிவு செய்து வர வேண்டாம். உட்கார்ந்து பேசி முடிவு எடுப்போம். இந்த அரசு அனைத்து துறைகளிலும் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து வருகிறது என்றார்.

இதையும் படிக்க : காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்.. பெண்ணை வன்கொடுமை செய்ய சுத்து போட்ட கயவர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

மேலும் பேசிய அவர், நானும் இந்தக் குடும்பத்தில் ஒருத்தன்.விஐபி இரண்டாம் பாகத்தில் நான் நடிக்கும்போது திட்டு வாங்கினேன். நான் அமைச்சர் ஆகிட்டேனா? நான் சினிமா துறைக்கு விருது வழங்குகிறேனா என சில சமயம் எனக்கே தோணும். அதற்கெல்லாம் காரணமான முதலமைச்சருக்கு நன்றி என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், எனக்கு சிறுவயதில், எப்படி டிவியில் ரஜினி சார் வருகிறார், கமல் சார் வருகிறார், இவர்கள் எல்லாம் இரவில் எங்கே போகிறார்கள் என தோன்றும். இரவில் எல்லாம் தூங்கியபோது டிவியை ஆராய்ந்தபோது, டிவி ரிப்பேர் ஆனது. உடனே அதை சரி செய்தார்கள். எங்கள் வாழ்வோடு இந்தத் துறை உள்ளது. இது உங்களுக்கான துறை. எனவே, என்னைப் பாராட்ட வேண்டாம். என்றார்.

நிகழ்வில் பேசிய அவர், உங்கள் துறையில் இருந்து வந்தவர்தான் முதலமைச்சராக உள்ளார். இனி மாநில அரசின் சார்பாக சினிமா விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படும். ஏற்கனவே வழங்கப்படாமல் உள்ள அனைத்து விருதுகளும் வழங்கப்படும். சிறு பட்ஜெட் படங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். வரிவிலக்கு போன்ற விஷயங்களை அறிவிக்க வேண்டும் என வைத்துள்ளோம் என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க : சேலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம்.. நில அளவையருக்கு ஊழல் தடுப்பு போலீசார் கொடுத்த ஷாக்!

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் பேசிய மொத ராத்திரி பட இயக்குநர் ராஜா கருப்பசாமி,  எனக்கு ஒரே ஒரு ஆசையும், வேண்டுகோளும் இருக்கிறது. எப்படியாவது முதல் படத்தை இயக்கிவிட வேண்டும் என்று பல பேர் என்னைப் போல நல்ல கதை வைத்துக்கொண்டு சுற்றிக்கொண்டிருக்கிறார்கள். என்னைவிட நல்ல கதைகளை வைத்திருக்கக்கூடிய, முதல் பட வாய்ப்பைத் தேடும் இயக்குநர்கள் உள்ளனர். தயாரிப்பாளர்களாகிய நீங்களும் நல்ல படம் பண்ண வேண்டும் என்று பேசிக்கொண்டிருந்தீர்கள். அவர்களுக்கு வழிகொடுக்கக்கூடிய வகையில் ஏதாவது முடிந்தால் செய்யுங்கள் என்று பேசியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Follow Us