AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்.. பெண்ணை வன்கொடுமை செய்ய சுத்து போட்ட கயவர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!

Krishnagiri Two Arrested : கிருஷ்ணகிரியில் பெண்ணை காட்டுப் பகுதிக்கு வரவழைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இருவரை சாமர்த்தியமாக போலீசில் அந்த பெண் சிக்க வைத்தார். இந்தச் சம்பவம் குறித்து இந்தப் பதிவில் விரிவாக பார்த்து தெரிந்து கொள்ளலாம் .

காட்டுப்பகுதியில் கேட்ட அலறல் சத்தம்.. பெண்ணை வன்கொடுமை செய்ய சுத்து போட்ட கயவர்கள்.. கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்!
கைதான இருவர்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Published: 26 Sep 2026 17:22 PM IST

கிருஷ்ணகிரி மாவட்டம், மங்கள்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவர், பர்கூர் பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் குடும்ப செலவுக்காக ரூ. 5 லட்சம் கடனாக வாங்கி உள்ளார். இதற்கு, நீண்ட நாட்களாக வட்டியும், அசலும் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இது தொடர்பாக கடன் அளித்த அந்த பெண், அந்த இளைஞரிடம் தொகையை கேட்டு வந்துள்ளார். அவரும், இப்போது தந்து விடுகிறேன்.. அப்போது தந்து விடுகிறேன்… என்று அலைக்களித்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளைஞர் வெங்கடேஷை, அந்த பெண் தனது வீட்டுக்கு வரவழைத்து, ரூ. 5 லட்சம் கடன் பெற்றதற்காக பத்திரத்தில் எழுதி வாங்கியதாக தெரிகிறது. இதில், மாதம் தோறும் ரூ. 5 ஆயிரம் வட்டியாக செலுத்த வேண்டும். 1 ஆண்டுக்குள் ரூ. 5 லட்சம் கடனையும் முழுமையாக செலுத்தி இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்ததாக தெரிகிறது.

வட்டித் தொகையை பெற காட்டு பகுதிக்கு அழைப்பு

இந்த நிலையில், இந்த மாதத்துக்கான வட்டி தொகையை பெறுவதற்காக இளைஞர் வெங்கடேசை, அந்தப் பெண் செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு உள்ளார். அப்போது, பேசிய அந்த இளைஞர் தான் அழைக்கும் இடத்துக்கு வந்து வட்டித் தொகையை பெற்றுக் கொள்ளுமாறு அந்த பெண்ணிடம் தெரிவித்துள்ளார். அதன்படி, வாட்ஸ் ஆப் மூலமாக தான் இருக்கும் இடத்தை அந்த இளைஞர் லொகேஷன் அனுப்பி உள்ளார். அதன்படி, அந்த பெண், வெங்கடேஷ் குறிப்பிட்ட இடத்துக்கு தனியாக மொபெட்டில் சென்றுள்ளார். அதாவது, ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு அந்த பெண்ணை வெங்கடேஷ் வரவழைத்துள்ளார்.

மேலும் படிக்க: திண்டுக்கல்லில் பரபரப்பு.. கொலையை மறைக்க பக்கா நாடகம்.. மனைவி மீது பழி போட்ட காதல் கணவன்.. தூக்கி உள்ளே வைத்த போலீஸ்!

பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய திட்டம்

அங்கு, அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய வெங்கடேஷ் மற்றும் அவரது உறவினர் இளங்கோ ஆகியோர் திட்டமிட்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த அந்த பெண்ணிடம் மயக்க மருந்து கலந்த குளிர்பானத்தை கொடுத்து குடிக்குமாறு கூறிய நிலையில், அதனை அந்தப் பெண் வாங்கி அருந்தியுள்ளார். அப்போது, மயக்கம் ஏற்படுவதற்கு முன்பு சுதாரித்துக் கொண்ட அந்தப் பெண் தனது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார்.

இருவரை கைது செய்த பர்கூர் போலீசார்

அத்துடன், தான் இருக்கும் இருப்பிடத்தை லைவ் லொகேஷனை வாட்ஸ் ஆப் மூலமாக அனுப்பி வைத்துள்ளார். அதன்படி, பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பு வெங்கடேஷிடம் இருந்து அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். இது குறித்து தகவல் அறிந்த பர்கூர் போலீசார் வெங்கடேஷ் மற்றும் இளங்கோ ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க: சேலத்தில் பட்டா பெயர் மாற்றம் செய்ய ரூ.5 ஆயிரம்.. நில அளவையருக்கு ஊழல் தடுப்பு போலீசார் கொடுத்த ஷாக்!

Follow Us