AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவுக்கு சிக்கல் – களமிறங்கிய தேசிய மகளிர் ஆணையம் – டிஜிபிக்கு விளக்கம் கேட்டு கடிதம்

NCW Notice to DGP : பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏவுக்கு சிக்கல் – களமிறங்கிய தேசிய மகளிர் ஆணையம் – டிஜிபிக்கு விளக்கம் கேட்டு கடிதம்
தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ்.
Karthikeyan S
Karthikeyan S | Published: 15 Nov 2026 21:31 PM IST

சென்னை, நவம்பர் 15 : கள்ளக்குறிச்சி தவெக எம் எல் ஏ அருள் விக்னேஷ், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக சர்ச்சை எழுந்துள்ளது. தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் (Arul Vignesh) இதனை மறுத்துள்ள நிலையில், எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ளனர். இந்த விவகாரம் நாளுக்கு நாள் பூதகரமாக் வெடித்து வரும் நிலையில், இதுகுறித்து மகளிர் ஆணையம் டிஜிபிக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகளிர் ஆணையம் நோட்டீஸ்!

பெண் ஆட்சியருக்கு கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்டு டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த நவம்பர் 11, 2026 அன்று வெளியான செய்தி அடிப்படையில் தாமாக முன்வந்து தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை அளிக்குமாறு டிஜிபியிடம் தேசிய மகளிர் ஆணையம் கோரியுள்ளது.

இதையும் படிக்க : மாணவர்களைச் சந்திக்கும் முதல்வர் விஜய் – தவெகவின் 2-ஆம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா!

எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு

இந்த நிலையில் இந்தக் குற்றச்சாட்டுக்கு எம்எல்ஏ அருள் விக்னேஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,, “அது போன்ற எந்த ஒரு செயலும் நான் செய்யவில்லை. சிலர் திட்டமிட்டு என் மேல் வதந்தி பரப்புகின்றனர். எனக்கு அதிகாரிகள் மேல் மரியாதை இருக்கிறது என தன் மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில், இந்த விவகாரத்தை தமிழக வெற்றிக் கழகத்திற்கு எதிராகக் கையில் எடுத்துள்ள எதிர்க்கட்சியினர், முதல்வர் விஜய்யைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

மேலும், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது நடவடிக்கை எடுக்கவும் போராட்டங்களை முன்னெடுத்தனர். மேலும் இந்த விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டி.ஜி.பி அலுவலகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க சார்பில் தனித்தனியாக புகார் மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக இந்த விவகாரம் குறித்து திமுக எம்பி கனி மொழி தனது சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,’பெண் அதிகாரிக்கு த.வெ.க சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாகவும் மது போதையில் அவரது வீட்டுக்கே சென்று தொந்தரவு செய்ததாகவும் இதைத் தொடர்ந்து பெண் அதிகாரிக்கு தனி பாதுகாப்பு அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வருகின்றன’ எனக் கூறியுள்ளார். மேலும், த.வெ.க எம்.எல்.ஏ ஒருவரால் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதாக விமர்சித்திருந்தார்.

இதையும் படிக்க : திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – வெள்ளி வாகனங்களில் சண்டிகேஸ்வரர் வீதியுலா!

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு எதிராக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதுதொடர்பான விசாரணையை சிபிசிஐடி மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.

Follow Us