திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் – வெள்ளி வாகனங்களில் சண்டிகேஸ்வரர் வீதியுலா!
Thirukarthigai Deepam Festival : உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா (Thirukarthigai Deepam) நவம்பர் 15, 2026 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நவம்பர் 15,2026 இன்று விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் வெள்ளி வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது.
திருவண்ணாமலை, நவம்பர் 15 : உலகப் புகழ்பெற்ற திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா (Thirukarthigai Deepam) நவம்பர் 15, 2026 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முதல் நாளான நவம்பர் 15,2026 இன்று விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரர் வெள்ளி வாகனங்களில் வீதியுலா நடைபெற்றது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் வீதியுலாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருக்கார்த்திகை தீபத் திருவிழா
திருவண்ணாமலையில் அமைந்துள்ள அருள்மிகு அருணாசலேஸ்வரர் கோயில், பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக அறியப்படுகிறது. திருவண்ணாமலையில் சிவபெருமான் அக்னி வடிவில் காட்சியளிக்கிறார். திருவண்ணாமலையில் நடைபெறும் திருக்கார்த்திகை தீபத் திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும்.. இந்த விழாவில் பங்கேற்பதற்க தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருகின்னறர்.
இதையும் படிக்க : ரேஷன் கடைகளில் காலிப் பணியிடங்கள்.. சுய உதவிக்குழு பெண்களை தற்காலிகமாக நியமிக்க தமிழக அரசு அதிரடி உத்தரவு!




இதில் முக்கிய நிகழ்வாக 10ம் நாள் விழாவாக வருகின்ற நவம்பர் 24, 2026 அதிகாலை 4 மணி அளவில் கோவில் கருவறையில் பரணி தீபம் அதனை தொடர்ந்து 2,668 அடி உயரம் கொண்ட மகா தீபம் மலையின் மீது மாலை 6 மணிக்கு ஏற்றப்படும். கார்த்திகை தீபத் திருவிழாவைக் காண தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை கோவிலுக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.
அந்த வகையில், இந்த 2026 ஆம் ஆண்டுக்கான திருக்கார்த்திகை தீபத் திருவிழா நவம்பர் 15, 2026 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு கோயிலில் பூர்வாங்க பூஜைகள் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முன்னோட்ட நிகழ்ச்சியாக கடந்த நவம்பர் 12, 2026 வியாழக்கிழமை திருவண்ணாமலையின் காவல் தெய்வமான துர்க்கையம்மன் வீதியுலா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நவம்பர் 13, 2026 வெள்ளிக்கிழமை கோயிலின் காவல் தெய்வமான பிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதன் தொடர்ச்சியாக நவம்பர் 14, 2026 சனிக்கிழமை சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றன. அப்போது விநாயகருக்கு வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும் எழுந்தருளினர். இதையடுத்து சுவாமிகளுக்கு சிறப்பு பஞ்சமுக தீபாராதனை நடைபெற்றது. பின்னர் கோயிலின் உட்பிரகாரத்தில் வலம் வந்த சுவாமிகள், நான்கு மாட வீதிகளிலும் ஊர்வலமாகச் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். அப்போது வீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
இதையும் படிக்க : மதுரை நகைக்கடை கொள்ளை.. இன்ஸ்டா பிரபலம் மீனாட்சி உட்பட இருவர் சிறையில் அடைப்பு.. 6 கிலோ தங்கம் மீட்பு!!
கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா
திருக்கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் நவம்பர் 15, 2026 இன்று நடைபெறும் கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளன. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் பல்வேறு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள், ஆராதனைகள் மற்றும் சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் மலையேற பக்தர்களுக்கு இந்த ஆண்டும் தடை நீட்டித்து. வருகின்ற நவம்பர் 24, 2026 தீப தினத்தன்று மலை மீது ஏற பக்தர்களுக்கு தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தொடர்வதால் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது என மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் விளக்கம் அளித்துள்ளார்.