AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்.. ரத்தீஷுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்.. சீனில் இறங்கிய இன்டர்போல்!

TASMAC Liquor Scam : தமிழக டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடி மதுபான ஊழல் புகாரில் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் தொழிலதிபர் ரத்தீஷுக்கு இன்டர்போல் போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல்.. ரத்தீஷுக்கு ரெட் கார்னர் நோட்டீஸ்.. சீனில் இறங்கிய இன்டர்போல்!
டாஸ்மாக் ஊழலில் தொடர்புடை ரத்தீஷ்.
Gowtham Kannan s
Gowtham Kannan S | Updated On: 14 Nov 2026 22:10 PM IST

தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனத்தில் ரூ. 1000 கோடிக்கு ஊழல் நடந்ததாக எழுந்த குற்றச்சாட்டில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதில், பிரபல தொழிலதிபர் ரத்தீஷ் என்பவருக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டி இருந்தது. இதை அறிந்த அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார். இவரை கைது செய்வதற்காக அமலாக்கத்துறை பல்வேறு கட்ட முயற்சிகளை முன்னெடுத்து வரும் நிலையில், தற்போது  ரத்தீஷை கைது செய்வதற்கு இன்டர்போல் போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, அவருக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடி டாஸ்மாக் ஊழல் வழக்கு

தமிழகத்தில் கடந்த திமுக ஆட்சியில் அரசு டாஸ்மாக் நிறுவனத்தில் பிராண்டுகள் ஒப்புதல் வழங்குதல், பார்களுக்கான உரிம டெண்டர்கள் வெளியிடுதல், டாஸ்மாக் நிர்வாக இடமாற்றங்கள், மதுபான கொள்முதல், மதுபானங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்லும் போக்குவரத்து உள்ளிட்டவற்றில் தொழிலதிபர் ரத்தீஷ் தலையீடு இருந்ததாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டி இருந்தது. அத்துடன் வழக்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி மீதும் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

மேலும் படிக்க: தமிழகத்தில் அடுத்த பேரதிர்ச்சி.. ஒரே நாளில் 7 பெண்கள் உள்பட 12 பேர் மாயம்.. காவல் துறை என்ன செய்கிறது.. வலுக்கும் கேள்வி!

மது பாட்டிலுக்கு கூடுதலாக ரூ. 30 வரை வசூலித்து முறைகேடு

இதில், இதில், செந்தில் பாலாஜிக்கும், தொழிலதிபர் ரத்திஷுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததை போலீசார் உறுதி செய்திருந்தனர். இந்த விவகாரத்தில் ஒரு மது பாட்டிலுக்கு ரூ. 10 முதல் ரூ. 30 வரை கூடுதலாக வசூலித்து கணக்கில் காட்டாத கோடிக்கணக்கான பணத்தை  ஊழல் செய்ததாக கூறப்படுகிறது. ரத்தீஷ் என்பவர், சினிமா துறையில் உதவி இயக்குனராக இருந்து வந்த நிலையில், குறுகிய காலகட்டத்தில் தொழிலதிபராக உயர்ந்தவர் ஆவார். இவர், மதுபான விற்பனை மற்றும் கொள்முதல் விவகாரத்தில்  அதிகமாக தலையிட்டு வந்ததாகவும் தெரிகிறது.

டாஸ்மாக் மேலாண் இயக்குனர் மீது வழக்கு

இந்த  வழக்கில் டாஸ்மாக் மேலாண் இயக்குனர் விசாகன் மற்றும் அவர் தொடர்புடைய 41 இடங்களில் மொத்தம் 14 மாவட்டங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டதில் ரத்திஷுக்கு தொடர்புடைய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதை அறிந்த ரத்தீஷ் கடந்த 2025- ஆம் ஆண்டு மே மாதம் தனது வீட்டை பூட்டி விட்டு துபாய் அல்லது லண்டன் ஆகிய வெளிநாடுகளுக்கு  சென்று தலைமறைவானதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், அவருக்கு எதிராக சர்வதேச போலீஸ் ( இன்டர்போல்) ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இந்த வழக்கில் கரூரை சேர்ந்த கார்த்திக், ரமேஷ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: கைதாகியும் அச்சமில்லை.. கோவையில் போலீஸ் முன் சீன் போட்ட கைதி.. அடுத்து நொடியே நடந்த டுவிஸ்ட்!

Follow Us