AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சி: ஏடிஎம் மையத்திற்குள் இறங்கிய சிறுவர்கள் – சிக்கியது எப்படி?

Gudiyatham ATM Robbery Attempt : வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகே பாரத ஸ்டேட் வங்கியின் கிளை வளாகத்தில் ஏடிஎம் மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க முயன்றது தெரியவந்தது.

யூடியூப் பார்த்து கொள்ளை முயற்சி: ஏடிஎம் மையத்திற்குள் இறங்கிய சிறுவர்கள் – சிக்கியது எப்படி?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 14 Nov 2026 20:10 PM IST

வேலூர், நவம்பர் 14 : யூடியூப் வீடியோவை பார்த்து ஏடிஎம் (ATM) மையத்தில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் வேலூரில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உட்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்டவர்கள் இதற்கு முன் வேறேதேனும் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டார்களா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் யூடியூப் பார்த்து ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயற்சி!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அம்பேத்கர் சிலை அருகே பாரத ஸ்டேட் வங்கியின் கிளை வளாகத்தில் ஏடிஎம் மையம் அமைந்துள்ளது. அங்கு கடந்த நவம்பர் 1, 2026 நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த 3 பேர் ஏடிஎம் மையத்திற்குள் நுழைந்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவில் ஸ்பிரே அடித்து அதனை செயலிழக்க செய்ய முயன்றுள்ளனர். பின்னர், தாங்கள் கொண்டு வந்த கூர்மையான கருவிகளை பயன்படுத்தி, ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர்.

இதையும் படிக்க : எஸ்.பி.வேலுமணி- கே.ஏ.செங்கோட்டையன் திடீர் சந்திப்பு.. நீண்ட நேரம் பேச்சு.. அதிமுகவில் அடுத்த பிரளயமா? பின்னணி என்ன!

இந்த நிலையில் அதே நேரம்,அந்தப் பகுதியில் காவல்துறையினர் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட்டுள்ளனர். இதனை அறிந்த மூன்று பேரும், கொள்ளை முயற்சியைக் கைவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து, அடுத்த நாள் ஏடிஎம் இயந்திரம் சேதப்படுத்தப்பட்டிருப்பதை அறிந்த வங்கி மேலாளர், இதுதொடர்பாக குடியாத்தம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். அப்போது ஏடிஎம் மையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் பதிவுகளையும், அதைத் தொடர்ந்து அப்பகுதியில் பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்கள் பெரும்பாடி பகுதியைச் சேர்ந்த 20 வயதான பிரசாந்த் மற்றும் 2 சிறுவர்கள் என்பது தெரியவந்தது.

யூடியூப் பார்த்து கொள்ளையடிக்க முயன்ற சிறுவர்கள்

இதையடுத்து, பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், யூடியூப் வீடியோக்களை பார்த்து ஏடிஎம் கொள்ளையில் அவர்கள் ஈடுபட முயன்றிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு முன்பு, வேறு ஏதேனும் கொள்ளைச் சம்பவங்களில் அவர்கள் ஈடுபட்டார்களா என்ற ரீதியிலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : கடலூரில் 35,647 கோழிகள் உயிரிழப்புக்கு பறவைக் காய்ச்சலே காரணம் – கோழிகளை அழிக்கும் பணி தீவிரம்

இப்படித்தான் கடந்த 2024 ஆம் ஆண்டு ஈரோடு மாவட்டம் கேத்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்த நடராஜின வீட்டுக்குள் புகுந்த முகமூடி அணிந்த மர்ம நபர், நடராஜ்ஜின் மனைவி அணிந்திருந்த செயினை பறிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, அவர் சத்தமிட்டதால், திருட வந்தவர் தப்பியோடினார். இந்த கொள்ளை முயற்சி, வீட்டில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தன. இது தொடர்பாக வழக்குப் பதிந்த கடத்தூர் போலீஸார், கண்காணிப்பு கேமரா பதிவுகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில், நம்பியூர் அருகே கேத்தம்பாளையத்தை சேர்ந்த தயானந்த் என்பவர் யூடியூப் பார்த்து இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தயானந்த் சிறையில் அடைக்கப்பட்டார்.

Follow Us