AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் 4 இலவச சிற்றுந்துகள் தொடக்கம்.. 6 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

கந்த சஷ்டி விழா: திருச்செந்தூரில் 4 இலவச சிற்றுந்துகள் தொடக்கம்.. 6 லட்சம் பக்தர்கள் வருகை எதிர்பார்ப்பு!

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 14 Nov 2026 07:44 AM IST

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெற உள்ள கந்த சஷ்டி விழா மற்றும் சூரசம்ஹாரத்தை முன்னிட்டு பக்தர்களுக்காக ரூ.1 கோடி மதிப்பில் 4 இலவச சிற்றுந்துகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்த அவர், சூரசம்ஹார நிகழ்வைக் காண சுமார் 5 முதல் 6 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். பக்தர்களின் வசதிக்காக ஏற்கனவே உள்ள 325 கழிப்பறைகளுடன் கூடுதலாக 300 தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், 149 தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள், 23 குடிநீர் பந்தல்கள், 6 மருத்துவ முகாம்கள் மற்றும் 7 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. சுமார் 6 லட்சம் குடிநீர் பாட்டில்களும், ORS கரைசல் மற்றும் உணவுப் பொருட்களும் வழங்கப்பட உள்ளன. 140 பாதுகாப்புப் பணியாளர்கள் ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும், 15 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

Follow Us