பாலக்காட்டில் பயங்கர விபத்து.. தடுப்புச் சுவரைத் தாண்டி டிப்பர் லாரி மீது மோதிய மினி லாரி! ஓட்டுநர் பலி
கேரள மாநிலம் பாலக்காட்டில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எதிரே வந்த டிப்பர் லாரி மீது மினி லாரி மோதிய விபத்தில் ஓட்டுநர் உயிரிழந்தார். கோயம்புத்தூர் – கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பாலக்காடு மணப்புள்ளிக்காவு மேம்பாலம் அருகே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பாலக்காடு நோக்கிச் சென்றுகொண்டிருந்த மினி லாரி திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவரைத் தாண்டி எதிர்திசையில் வந்த டிப்பர் லாரி மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் மினி லாரியை ஓட்டி வந்த பாலக்காடு கண்ணாடி பகுதியைச் சேர்ந்த 33 வயதான அனீஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து தொடர்பான பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.