AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி
திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் அம்மன் திருத்தேர் வெள்ளோட்டம் கோலாகலம்

திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் அம்மன் திருத்தேர் வெள்ளோட்டம் கோலாகலம்

Karthikeyan S
Karthikeyan S | Published: 12 Nov 2026 08:27 AM IST

புதிய திருத்தேரின் வெள்ளோட்டப் பெருவிழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து, புதிய திருத்தேருக்கு புண்ணியாகவாசனம், கடஸ்தாபனம் செய்யப்பட்டு, காலை 7 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் திருத்தேர் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

தென் கைலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை அருள்மிகு மாணிக்க விநாயகர் மற்றும் அருள்மிகு தாயுமானவர் சுவாமி கோவிலுக்கு, அம்பாளுக்காக ரூ.57.80 லட்சம் மதிப்பில் மரத்திலாலான புதிய தேர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 13 அடி அகலமும், 29 அடி உயரமும் கொண்ட இந்த பிரம்மாண்ட தேரானது, பெரம்பலூர் மாவட்டம் அரும்பாவூரை சேர்ந்த பாரம்பரிய மரச்சிற்பக் கலைஞர்களால் மிக நுணுக்கமான மரச்சிற்பக் கலை நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

புதிய திருத்தேரின் வெள்ளோட்டப் பெருவிழா இன்று மிக கோலாகலமாக நடைபெற்றது. காலை 6 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா நிகழ்வுகள் தொடங்கின. தொடர்ந்து, புதிய திருத்தேருக்கு புண்ணியாகவாசனம், கடஸ்தாபனம் செய்யப்பட்டு, காலை 7 மணிக்கு பூர்ணாஹூதி தீபாராதனை மற்றும் திருத்தேர் அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. தொடர்ந்து காலை 9 மணி முதல் 10.30 மணிக்குள் புதிய திருத்தேரின் வெள்ளோட்டம் தொடங்கியது. திரளான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் வடம்பிடித்து தேரை இழுத்து, அம்மனை வழிபட்டு அருள் பெற்றனர்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மலைக்கோட்டை திருக்கோயிலுக்கு ரூ.57.80 லட்சம் மதிப்பில் கலைநயமிக்க புதிய மரத்தேர் செய்யப்பட்டு, அதன் வெள்ளோட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது அப்பகுதி பக்தர்களிடையேயும், ஆன்மிக அன்பர்களிடையேயும் பெரும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Follow Us