வயலூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா தொடக்கம்.. நவம்பர் 15-ல் சூரசம்ஹாரம்!
திருச்சி அருகே உள்ள புகழ்பெற்ற வயலூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டி விழா இன்று ரக்ஷாபந்தனம் எனப்படும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. 7 நாட்கள் நடைபெறும் இவ்விழா நவம்பர் 16-ஆம் தேதி நிறைவடைகிறது. விழாவையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் லட்சார்ச்சனை நடைபெற்றது.

நவம்பர் 11 முதல் 14-ஆம் தேதி வரை தினமும் காலை 8 மணிக்கு சிங்காரவேலவர் பச்சை மயில், சேஷ, ரிஷபம், அன்னம், வெள்ளி மயில் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருகிறார். நவம்பர் 15-ஆம் தேதி காலை வேல் வாங்கும் நிகழ்ச்சியும், மாலை சூரசம்ஹாரமும் நடைபெறுகின்றன. நவம்பர் 16-ஆம் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.