பொது இடங்களில் மது அருந்துபவர்களுக்கு எச்சரிக்கை.. ட்ரோன் மூலம் கண்காணிக்கும் கோவை போலீசார்
கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து டாஸ்மாக் கடைகள், FL2 பார்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துபவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டம் பேரூர் உட்கோட்டம் அனைத்து காவல் நிலைய பகுதிகளிலும் பேரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் அனைத்து டாஸ்மாக் கடைகள்,FL2 பார்கள் மற்றும் பொது இடங்களில் மது அருந்துபவர்களை ட்ரோன் மூலம் கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே பொதுவெளியில் பொது இடங்களில் பேருந்து நிறுத்தங்கள் போன்ற இடங்களில் மது அருந்துபவர்கள்,குடிபோதையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுபவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.மீறும் பட்சத்தில் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர். வை மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்துவதையும், மதுபோதையில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களையும் கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, பேரூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் ட்ரோன் கேமராக்களைப் பயன்படுத்தி கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வழக்கமான காவல்துறை ரோந்துப் பணிகளுடன், ட்ரோன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது பொது இடங்களில் மது அருந்துபவர்கள் மற்றும் குடிபோதையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளில் ஈடுபடுபவர்கள் இதுபோன்ற செயல்களைத் தவிர்க்க வேண்டும் என கோவை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ள
