லடாக்கில் பெட்ரோல் பங்கில் முதுகில் குழந்தையைக் கட்டிக்கொண்டு வேலை செய்யும் ஒரு தாயின் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி பலரையும் நெகிழ வைத்துள்ளது. இன்ஸ்டாகிராமில் பிரியங்கா என்ற பெண் பகிர்ந்த இந்த வீடியோவில், தனது குழந்தையை முதுகில் சுமந்தபடி அந்தத் தாய் பெட்ரோல் பங்கில் வேலை செய்வது பதிவாகியுள்ளது. இந்த வீடியோவில், “எனது மிகவும் கடினமான தருணத்தில் நான் இப்படித்தான் இருக்கிறேன்” என்ற வாசகமும் இடம்பெற்றிருந்தது.