தீபாவளி.. ரசிகர்களை சந்தித்த சூப்பர் ஸ்டார் ரஜினி.. உற்சாகம்!
தமிழகத்தின் (Tamil Nadu) மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளவர் தான் ரஜினிகாந்த் (Rajinikanth). 80களில் இருந்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தான் ரஜினி. மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தனக்கென ரசிகர்களை குவித்து வருகிறார். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
தமிழகத்தின் (Tamil Nadu) மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளவர் தான் ரஜினிகாந்த் (Rajinikanth). 80களில் இருந்து தமிழ் திரையுலகில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் தான் ரஜினி. மூன்று தலைமுறைகளுக்கும் மேலாக தனக்கென ரசிகர்களை குவித்து வருகிறார். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ரஜினிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இந்த நிலையில் தான் தனது பிறந்தநாள், பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் நடிகர் ரஜினி தனது ரசிகர்களை சந்திப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், இன்று (நவம்பர் 08, 2026) தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லத்தின் வெளியே ரசிகர்களை சந்தித்தார். அவரை காண்பதற்காக காத்திருந்த ரசிகர்கள் அவர் வெளியே வந்ததும் மிகவும் உற்சாகம் அடைந்தனர். அது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
